பதிவு செய்த நாள்
04 பிப்2020
17:05
தொழில் துவங்குவதற்கான நடைமுறைகளையும், இதற்கு அரசு அலுவலகங்களின் வாயில் படிகளில் ஏறி இறங்க வேண்டியிருப்பதையும் நினைத்தவுடனேயே தொழில் துவங்கும் எண்ணத்தில் உள்ளவர்கள் பலர், பின்வாங்கும் நிலை இருக்கிறது.‘இந்தியாவில், தொழில் துவங்க, குறைந்தது 18 நாட்கள் தேவைப்படுகிறது; பத்து நடைமுறைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியிருக்கிறது’ என்று, உலக வங்கி சொல்கிறது. இதற்குக் காரணம், நாட்டில் கடைபிடிக்கப்படும், ‘சிவப்பு நாடா’ நடைமுறைகள்தான். அரசு, பல்வேறு விதிமுறைகளை தளர்த்த முயற்சித்தாலும், அதிகார மட்டத்தில், இது சாத்தியமில்லாததாகவே, இன்னும் இருக்கிறது. இதை மாற்றுவதற்கான நடவடிக்கையில், மத்திய அரசு களம் இறங்கியிருக்கிறது.
மத்திய கார்ப்பரேட் விவகாரத்துறை அமைச்சகம், நிறுவனப்பதிவுக்கான நடைமுறையை, இரு படிவங்களில் முடிக்க திட்டமிட்டிருக்கிறது. தற்போதுள்ள ஆறு படிவ நடைமுறைக்கு மாற்றாக இது இருக்கும். ‘ஆன்லைன்’ முறையில் இதை மேற்கொள்ள முடியும். பெயர்ப்பதிவு மற்றும் நிறுவனப்பதிவின்போதே, இ.எஸ்.ஐ., மற்றும் பி.எப்., அலுவலகங்களுடன் இணைப்பை ஏற்படுத்திக்கொள்ள முடியும். ‘டின்’, ‘பான்’, ‘டான்’, ‘ஜி.எஸ்.டி.,’ அடையாள எண்களையும் எளிதாகப் பெற முடியும். இதன் மூலம், வர்த்தகத்தை நடைமுறைச்சிக்கல் இன்றி எளிதாகத் துவக்க முடிவதோடு, தொடரவும் செய்யலாம்.மத்திய கார்ப்பரேட் விவகாரத்துறை, நிதி மற்றும் தொழிலாளர் துறையுடன் இணைந்து, இதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. விரைவில், நடைமுறைக்கு வர உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|