பதிவு செய்த நாள்
04 பிப்2020
17:07

கடந்த சில வாரங்களாக வருமானவரி பிடித்தம், சிறுமற்றும் நடுத்தர தொழில் கடன் தொடர்பான விவரங்கள் பார்த்தோம். மீண்டும் இந்தவாரம், வாடகை வருமானத்துக்கான வரிப்பிடித்தம் குறித்து பார்ப்போம்.
வாடகைவருமானம் என்றால் என்ன?சொத்தின் மீது ஈட்டும் வருமானம். உதாரணமாக வீடு, நிலம், வணிக குடியிருப்புகள், ஆலை, இயந்திர தளவாடங்கள், மரச்சாமான்கள் மற்றும் உபகரணங்கள் ஆகியவற்றில் வரும் வாடகை வருமானங்கள் இதில் உள்ளடங்கும்.நீங்கள், இந்தியாவில் வசிப்பவருக்கு, மாதவாடகையாக ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் செலுத்துபவராக இருந்தால், செலுத்தும் வாடகையில்வருமானவரிப் பிடித்தம் (டி.டி.எஸ்.,) செய்யவேண்டும் (வரிப்பிரிவு 194IB).ஒரு தனிநபர் அல்லது இந்து கூட்டுக்குடும்பம் (HUF) மற்றும் மற்றொரு தனிநபருக்கும் அல்லது இந்து கூட்டுக்குடும்பம் இடையேயான வாடகைபரி வர்த்தனைக்கு வாடகையில் 5% வரிப்பிடிக்க வேண்டும். இந்த வரிப்பிடித்தம், மாத வாடகையாக, ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் இருந்தால் மட்டுமே பொருந்தும்.
உதாரணமாக, வருண் (வாடகைதாரர்), அரவிந்த் (நிலஉரிமையாளர்) என்பவருடன் மே முதல் தேதி முதல் மார்ச் 31ஆம் தேதிவரை 11 மாத காலத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளார். ரூ. 70 ஆயிரம் மாத வாடகை வீதம் 11 மாதத்துக்கு ரூ.7 லட்சத்து 70 ஆயிரத்துக்கு 5% என ரூ.38 ஆயிரத்து 500ஐ வாடகைதாரர் வரிப்பிடித்தம் செய்து நிதியாண்டின் கடைசி மாதத்தில் வருமான வரித்துறைக்கு செலுத் தவேண்டும்.ஒரு தனிநபர் மற்றும் வர்த்தக நிறுவனத்துக்கு இடையேயான வாடகை பரிவர்த்தனைக்கு வாடகையில் 10% வரிப்பிடித்தம் செய்யவேண்டும். இவர்களுக்கு இடையேயான ஆண்டுவாடகை, ரூ. 2 லட்சத்து 40 ஆயிரம்வரை உள்ளவருமானத்துக்கு வரிப்பிடித்தம் அவசியமில்லை.
வருமானவரிச்சட்டப்பிரிவு 194-I-ன் கீழ், தணிக்கைக்கு உட்படாத தனிநபர் அல்லாத நிறுவனங்கள் செலுத்தும் மாத வாடகையில் 10%, ஆலை, இயந்திரங்கள் மற்றும் இதர உபகரணங்கள் மீதான மாத வாடகைக்கு 2% வரிப்பிடித்தம்செ ய்யவேண்டும்.ஒரு நிதியாண்டில் வரிப்பிடித்தம் செய்யப்பட்ட விவரங்களை வீட்டு உரிமையாளரின் சரியான நிரந்தரகணக்கு(பான்) எண்ணுடன் படிவம் 26QC நிரப்பி 30 நாட்களுக்குள் இணையதளத்தில் பதிவேற்றவேண்டும். இதற்கு வாடகைதாரர்கள் வரிவசூல்எண் (TAN) பெறதேவையில்லை.
பிடித்தம்செய்தவரியைஅங்கீகரிக்கப்பட்டவங்கிமூலம்செலுத்தவேண்டும். மேலும் அதற்கான சான்றிதழை டிரேஸஸ் (www.tdscpc.gov.in) வலைதளத்தில்இருந்து 16A (பிரிவு 194-IB)மற்றும் 16C (பிரிவு194-I) பதிவிறக்கம்செய்துநிலம்/ வீட்டு உரிமையாளரிடம் வழங்கவேண்டும். உரிமையாளர் தங்கள் படிவம் 26AS- இல் பிடித்தம் செய்தவரி, கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்து கொள்ளுதல் அவசியம்.குறிப்பிட்ட காலக்கெடுவிலிருந்து, ஒரு வருடத்திற்குள் படிவம் 26QC தாக்கல் செய்யப்படாவிட்டால், வாடகைதாரருக்கு ரூ.10,000 முதல் ரூ.1,00,000 வரை அபராதம் விதிக்கப்படலாம். பிடித்தம் செய்யப்பட்ட வரியை உரிய நேரத்தில் செலுத்தி அதற்கான காலாண்டில் தாக்கல் செய்தல் முக்கியம். வரிப்பிடித்தம் செய்ய தவறினால் மாதத்திற்கு 1%-ம்அல்லது பிடித்தம் செய்த வரியைகட்ட தவறினால் மாதத்திற்கு 1.5% அபராத வட்டியாக செலுத்தவேண்டிவரும்.
இந்த அபராத தொகையை வருமானவரித் தாக்கலில் செலவினங்களாக அனுமதிக்கப்படமாட்டாது. மேலும்படிவம் 26QC தாக்கல் செய்ய தவறினால் நாள் ஒன்றுக்கு ரூ.200ம், படிவம் 16Cவழங்கத் தவறினால் நாள் ஒன்றுக்கு நுாறு ரூபாயும் அபராதம் விதிக்கப்படும்.நிரந்தரகணக்கு (பான்) எண் சமர்ப்பிக்காத வீட்டு உரிமையாளர்களுக்கு வாடகை வருமானத்தில் அதிகபட்சமாக 20% வரிப்பிடித்தம் செய்யப்படும். வெளிநாடு வாழ் வீடு உரிமையாளர்களுக்கு இந்த சட்டம் பொருந்தாது. ரூ.50,000/-க்கு மேல் வாடகைகொடுப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டியது மிக அவசியம்.
உங்கள் கேள்வி; என் பதில்வாடகை கொடுக்கும் போது வரிபிடித்தம் அவசியமா? எனக்கு வியாபார வருமானம் இல்லை. சம்பளப் பணத்திலிருந்து வாடகை கொடுக்கிறேன். அப்போதும் வரிப்பிடித்தம் செய்யவேண்டும் என்று நண்பர்கள் கூறுகிறார்கள்.- க. பாண்டியராஜன், கோவை.
நீங்கள் கொடுக்கும் வாடகைத் தொகையைப் பொறுத்து பதில் மாறுபடும். ரூ.50,000க்கும் மேல்மாத வாடகைகொடுத்தால் நீங்கள் வியாபாரத்தில் இல்லாவிட்டாலும் வரிப்பிடித்தம் செய்ய வேண்டும்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|