பதிவு செய்த நாள்
04 பிப்2020
17:16

மத்திய பட்ஜெட்டில், தொழில்நுட்ப ஜவுளி(டெக்னிக்கல் டெக்ஸ்டைல்ஸ்) வகை உற்பத்தியை, தரம் உயர்த்த, ஆயிரத்து 480 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
பின்னலாடைத்துறையில் கோலோச்சும் திருப்பூர், ஜவுளித்துறையில் சிறந்து விளங்கும் கோவை உட்பட, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள், தொழில்நுட்ப ஜவுளி உற்பத்தியை, சர்வதேசத் தரத்துக்கு உயர்த்துவதற்கு இது வழிவகுக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.விண்வெளி வீரர்களுக்கான ஆடை, குண்டு துளைக்காத உடை, தீப்பிடிக்காத ஆடை, கதிர்வீச்சு அபாயத் தடுப்பு உடை என உயர் ரகங்கள் துவங்கி, சாமானியர்களுக்குத் தேவையான தொழில்நுட்ப ஜவுளிகள் வரை, 13க்கும் மேற்பட்ட தொகுப்புகள் உள்ளன. மருத்துவம், ராணுவம், தீயணைப்பு, காவல், கட்டுமானம், விமானப் போக்குவரத்து, விளையாட்டு, கனரகத் தொழில், விவசாயம், மீன்பிடித்தொழில், சாலை அமைப்பு எனப் பல்வேறு துறையினருக்கும், தொழில்நுட்ப ஜவுளி அவசியமானதாக இருக்கிறது.
நுாற்பாலைகள் போன்றவற்றை உருவாக்க, அதிக முதலீடு தேவை. அதேசமயம், தொழில்நுட்ப ஜவுளிக்கு மூன்று முதல் ஐந்து கோடி ரூபாய் வரை முதலீடு போதுமானது. முதலீடு, சந்தை வாய்ப்பு, தொழில்நுட்ப ஆலோசனைகளும் எளிதாகக் கிடைக்கின்றன.புதிய கண்டுபிடிப்புகளும், துறைக்கேற்ப நவீனமயமாக்கலும், எளிதாக்கலும், தொழில்நுட்ப ஜவுளித் தொழில்நுட்பத்துக்கு அவசியமாக இருக்கின்றன. குறிப்பாக, இதற்கான ஆராய்ச்சி என்பது அதிகளவில் தேவை. பல்வேறு துறைகளுக்கும், தேவையான தொழில்நுட்ப ஜவுளிகளை இனம் கண்டறிதலும், புதிய வர்த்தக வாய்ப்புகளுக்கும் இது அவசியமாகிறது. படித்த இளைஞர்கள் இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி, ‘ஸ்டார்ட் அப்’கள் துவங்கினால், சாதிக்க முடியும்.
வகை தொழில்நுட்ப ஜவுளிகளை, நாடு இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்தில், இன்னும் இருக்கிறது. இதனால், அன்னியச் செலாவணியையும் இழக்க நேரிடுகிறது. மத்திய, மாநில அரசின் பல்வேறு துறைகளுக்கும், தொழில்நுட்ப ஜவுளிகளின் தேவை இருக்கிறது. எனவே, அரசுத்துறை ஆர்டர்களைப் பெறுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.நாட்டில், தொழில்நுட்ப ஜவுளித்தொழில் நிறுவனங்களின்வளர்ச்சி மந்தமாகவே உள்ளது. உற்பத்தித்திறன், நுகர்விலும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளன. இதை மாற்றிக்காட்ட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. குறிப்பாக, 10 மடங்கு தொழில்நுட்ப ஜவுளி உற்பத்தியை அதிகரித்தால்தான், சர்வதேச வர்த்தகப்போட்டிக்கு ஈடுகொடுத்து, ஆர்டர்களைப் பெற முடியும். வேலைவாய்ப்பும் உயரும். சவால்தான்; ஆனால்,முறியடிக்கக்கூடியதுதான்!
அடுத்த கட்ட நகர்வு!கோவை, திருப்பூர் தொழில்துறையினர் கூறுகையில், ‘‘ஜவுளித்துறையின் அடுத்தகட்ட நகர்வுக்கு, தொழில்நுட்ப ஜவுளித் தயாரிப்பு எதிர்காலத்தில் பெரும் பங்கு வகிக்கும். கோவையில், ஏற்கனவே, தேசிய அளவிலான தொழில்நுட்ப ஜவுளித்தொழில் முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்டிருக்கிறது. கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வசதிகள், தொழில்நுட்ப வளர்ச்சி போன்றவை தொழில்நுட்ப ஜவுளித்துறை வளர்ச்சிக்குச் சாதகமாக உள்ளன’ என்கின்றனர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|