பதிவு செய்த நாள்
04 பிப்2020
23:25

சென்னை:‘‘மத்திய பட்ஜெட்டில், வேலைவாய்ப்பை அதிகரிக்கும் பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன,’’ என, சென்னை தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பின் தலைவர் ராம்குமார் ராமமூர்த்தி தெரிவித்தார்.
சென்னை தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பின் சார்பில், மத்திய பட்ஜெட் தொடர்பான கருத்தரங்கம், சென்னையில் நேற்று நடந்தது. அதில், ராம்குமார் ராமமூர்த்தி பேசியதாவது: இந்தியாவில், 20 – 29 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கை, 27 கோடியாக உள்ளது. அடுத்த, 10 ஆண்டுகளில், கூடுதலாக, ஒன்பது கோடி பேர் வேலை செய்யும் நிலைக்கு வருவர்.
மத்திய பட்ஜெட்டில், தகவல் தொழில்நுட்ப துறைக்கு, பல சலுகைகள் வழங்கப்பட்டு உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன், ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா சிறிய விமானங்களின் பயன்பாடு இல்லை.தற்போது, அந்த தொழிலில், புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளது. இது போன்று பட்ஜெட்டில், வேலைவாய்ப்பை அதிகரிக்கும் பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
மேலும், நிறுவனங்கள் செலுத்தும் வரியை குறைத்தது; பங்குதாரர்களுக்கு நிறுவனங்கள் வழங்கும், ‘டிவிடெண்ட்’ வரி ரத்து; புதிய தொழில் துவங்குவோருக்கு சலுகைகள் என, வரவேற்க கூடிய பல அறிவிப்புகள் பட்ஜெட்டில் உள்ளன.
உலகில், மற்ற நாடுகளின் அரசுகள், தங்கள் வசம் உள்ள நிதியை, இந்தியாவில் முதலீடு செய்யலாம் என, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், நம் நாட்டில், பல நாடுகள் தொழில்களை துவங்க ஆர்வம் காட்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.இந்நிகழ்ச்சியில், கூட்டமைப்பின் செயலர் சரஸ்வதி மற்றும் வரி நிபுணர்கள் உள்ளிட்டோர் பேசினர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|