பதிவு செய்த நாள்
26 பிப்2020
07:17
மும்பை: புதிய பங்கு வெளியீட்டுக்கு வர இருக்கும், ‘எஸ்.பி.ஐ., கார்ட்ஸ்’ நிறுவனம், அதன் பங்கு விலையை, 750 – 755 ரூபாயாக நிர்ணயித்துள்ளது. மேலும், தகுதி வாய்ந்த அதன் ஊழியர்களுக்கு, ஒரு பங்கின் விலையில், 75 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
இது குறித்து, எஸ்.பி.ஐ., கார்ட்ஸ் நிறுவனம் தெரிவித்து உள்ளதாவது: எஸ்.பி.ஐ., கார்ட்ஸ், புதிய பங்கு வெளியீட்டின் மூலம், 9,000 கோடி ரூபாயை திரட்ட உள்ளது. ஒரு பங்கின் விலை, 750 – -755 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், தகுதி வாய்ந்த ஊழியர்களுக்கு, தள்ளுபடி விலையில் பங்குகள் கிடைக்கும். ஒரு பங்குக்கு, 75 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும். இது, ஐந்தாவது மிகப்பெரிய பங்கு வெளியீடாகும். இந்த பங்கு வெளியீடு, மார்ச் 2ல் துவங்கி, 5ம் தேதியன்று முடிவு பெறுகிறது.
இப்பங்கு வெளியீட்டின்போது, 500 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளையும், நிறுவனர்களின், 13.05 கோடி பங்குகளையும் விற்பனைக்கு விடுக்க இருக்கிறது. எஸ்.பி.ஐ., கார்ட்ஸ் நிறுவனத்தில், எஸ்.பி.ஐ., வங்கியிடம், 74 சதவீத பங்குகள் உள்ளன. ‘கார்லைல்’ குழுமத்தின் வசம், 26 சதவீத பங்குகள் உள்ளன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|