பதிவு செய்த நாள்
26 பிப்2020
07:17
சென்னை : தடை செய்யப்பட்ட பொருட்கள், சேவைகளைப் பெற, ‘கிரெடிட் கார்டு’ வாயிலாக பணம் செலுத்தினால், அந்த வாடிக்கையாளர் கார்டு வைத்திருக்க தடை விதிக்கப்படும் என, எஸ்.பி.ஐ., கார்டு நிறுவனம் எச்சரிக்கை தகவல் அனுப்பி உள்ளது.
இது தொடர்பாக, வாடிக்கையாளர்களின் இ – -மெயிலுக்கு, எஸ்.பி.ஐ., கிரெடிட் கார்டு நிறுவனம் அனுப்பிய தகவல்: இந்திய ரிசர்வ் வங்கியின், கிரெடிட் கார்டு பயன்பாடு குறித்த நிபந்தனைகளை தெரிவிக்க விரும்புகிறோம். அதன்படி, லாட்டரி சீட்டுகள், சூதாட்டம், தடை செய்யப்பட்ட இதழ்கள், அன்னிய செலாவணி வர்த்தகத்தில் ஈடுபடுதல் உட்பட, பல்வேறு பரிவர்த்தனைகளுக்கு கிரெடிட் கார்டு பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.
மேற்கூறப்பட்ட பரிவர்த்தனைகளுக்கு, உங்கள் கிரெடிட் கார்டு வாயிலாக பணம் செலுத்துங்கள் என, பல அன்னிய செலாவணி வர்த்தக வணிகர்கள், சூதாட்ட கிளப்புகள், ஓட்டல்கள் விளம்பரம் செய்கின்றன. அன்னிய செலாவணி மேலாண்மை சட்டம், 1999ன் படி, இது போன்ற பொருட்கள், சேவைகள் பெற, கிரெடிட் கார்டு பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த விதிகளை பின்பற்றாத, கிரெடிட் கார்டு பயனாளர்கள், கார்டு வைத்திருக்க தடை விதிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|