பதிவு செய்த நாள்
28 பிப்2020
00:56

புதுடில்லி: ‘ரோசாரி பயோடெக்’ நிறுவனத்தின், புதிய பங்கு வெளியீட்டுக்கான அனுமதியை, பங்குச் சந்தை கட்டுப்பாடு அமைப்பான, ‘செபி’ வழங்கி உள்ளது.
ரோசாரி பயோடெக், சிறப்பு வகை ரசாயனங்களை தயாரிக்கும் நிறுவனம். குறிப்பாக, வீடு மற்றும் தனிநபர் ஆரோக்கிய பொருட்கள் தயாரிப்பில், இந்நிறுவனம் அதிக கவனம் செலுத்தி வருகிறது.இந்நிறுவனம், புதிய பங்குகளை வெளியிடுவதற்கான அனுமதி கோரி, கடந்த டிசம்பர் மாதம், செபிக்கு விண்ணப்பித்திருந்தது.
இதையடுத்து, தற்போது, செபி அனுமதி வழங்கி இருக்கிறது.இந்நிறுவனம், இந்த புதிய பங்கு வெளியீட்டின் மூலம், 700 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது.இப்பங்கு வெளியீட்டின்போது, 150 கோடி ரூபாய் மதிப்புக்கு புதிய பங்குகளையும், நிறுவனர்கள் வசம் இருக்கும் ஒரு கோடிக்கும் மேலான பங்குகளையும் விற்பனை செய்ய உள்ளது.பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் தொகையை, நடைமுறை மூலதன தேவைகளுக்கும், கடன்களை திருப்பிச் செலுத்தவும், பொதுவான நிர்வாகச் செலவுகளுக்காகவும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|