கெடுவுக்குள் விற்க முடியுமா? வாகன முகவர்கள் அச்சம்! கெடுவுக்குள் விற்க முடியுமா? வாகன முகவர்கள் அச்சம்! ... ஆறு  மனமே ஆறுஆடிட்டர் கட்டளை ஆறு! ஆறு மனமே ஆறுஆடிட்டர் கட்டளை ஆறு! ...
ரூ. 35 ஆயிரம் கோடி வர்த்தக இலக்கு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மார்
2020
11:23

கயிறு வாரி­யம் மூல­மாக, தென்னை நார் மற்­றும் நார் சார்ந்த பொருட்­கள் ஏற்­று­மதி மற்­றும் உள்­நாட்டு வணி­கத்­துக்­கான இலக்கு, ரூ.35 ஆயி­ரம் கோடி­யாக நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த இலக்கை அடைய வழி­காட்­டு­தல்­க­ளை­யும் மத்­திய அர­சின் கயிறு வாரி­யம் வழங்கி உத­வு­கிறது.

இந்­தி­யா­வில், தென்னை நார் ஏற்­று­மதி வணி­கம் அதி­க­ளவு நடக்­கிறது. அதில், தமி­ழ­கத்­தில், பொள்­ளாச்சி பகு­தி­யில் இருந்து அதி­க­ளவு ஏற்­று­மதி நடப்­ப­தால் பொள்­ளாச்­சிக்கு, ‘சிறந்த ஏற்­று­மதி பொரு­ளா­தார நக­ரம்’ என்ற அந்­தஸ்தை மத்­திய அரசு வழங்­கி­யுள்­ளது.வரும், 2025ம் ஆண்­டில், தென்னை நார் மற்­றும் நார் சார்ந்த பொருட்­கள் ஏற்­று­மதி மற்­றும் உள்­நாட்டு வணிக்­கத்­துக்­கான இலக்­காக, 35 ஆயி­ரம் கோடி ரூபாய் நிர்­ண­யித்­துள்­ளது.

கயிறு வாரிய உறுப்­பி­னர் கவு­த­மன் கூறி­ய­தா­வது:மத்­திய அர­சின் சிறு, குறு மற்­றும் நடுத்­தர தொழில் அமைச்­ச­கத்­தின் கீழ் செயல்­படும் கயிறு வாரி­யம் மூல­மாக கடந்த, 10 ஆண்­டு­க­ளாக இலக்கு நிர்­ண­யம் செய்­யப்­ப­டு­கிறது. கடந்த, 2018 – 19ம் ஆண்­டில் ஏற்­று­மதி, 2,000 கோடி ரூபாய்; உள்­நாட்டு வணி­கம், 10 ஆயி­ரம் கோடி ரூபா­யாக இலக்கு நிர்­ண­யிக்­கப்­பட்­டது. இந்த இலக்­கினை அடைந்­துள்­ளோம்.வரும், 2025ம் ஆண்­டில் ஏற்­று­மதி, 10 ஆயி­ரம் கோடி ரூபா­யா­க­வும்; உள்­நாட்டு வணி­கம், 25 ஆயி­ரம் கோடி என மொத்­தம், 35 ஆயி­ரம் கோடி­யாக இலக்கு நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது. அதற்­கேற்ப கயிறு பொருட்­கள் உற்­பத்தி மற்­றும் ஏற்­று­மதி மேற்­கொள்ள ஊக்­கம் அளிக்­கும் வகை­யில், மத்­திய கயிறு வாரி­யம் மூல­மாக நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது.

உள்­நாட்­டில் நடக்­கும் அனைத்து கண்­காட்­சி­க­ளி­லும் தென்னை நார், நார் சார்ந்த பொருட்­களை கண்­காட்­சிப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். இதற்­காக, அரங்­கங்­கள் அமைக்க, மத்­திய, சிறு, குறு நடுத்­தர தொழில் அமைச்­ச­கம் மானி­யம் வழங்­கு­கிறது. மதிப்­புக்­கூட்­டப்­பட்ட பொருட்­கள் தயா­ரிக்க, ஆலப்­புழா, பெங்­க­ளூரு, தஞ்­சா­வூர், ராஜ­முந்­திரி, புவ­னேஸ்­வர் ஆகிய ஐந்து இடங்­க­ளி­லும் பயிற்சி மையம் உள்­ளது.பயிற்சி மையத்­தில் பயிற்சி காலத்­துக்கு, ஆறா­யி­ரம் ரூபாய் ஊக்­கத்­தொகை வழங்­கப்­ப­டு­கிறது. தங்­கு­மிட வச­தி­யும் உள்­ளது.கயிறு வாரி­யத்­தின் உறுப்­பி­னர்­களை கொண்டு மூன்று மாதத்­துக்கு ஒரு முறை கூட்­டம் நடத்தி, நிர்­ண­யிக்­கப்­பட்ட இலக்கை அடைந்து இருக்­கி­றோமா, இல்­லையா என மத்­திய அமைச்­ச­கத்­துக்கு தெரி­யப்­ப­டுத்­தப்­படும். இதில் உள்ள சிர­மங்­கள், பிரச்­னை­களை தீர்க்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.

கயிறு வாரி­யம், சங்­கங்­கள் மற்­றும் கல்வி நிறு­வ­னங்­க­ளு­டன் இணைந்து புது பொருட்­கள் தயா­ரிக்க, கூட்டு ஆராய்ச்சி செய்­வ­தற்­காக மானி­யம் வழங்­கு­கிறது. மேலும், புது பொருட்­கள் உற்­பத்தி செய்­வ­தற்­கும், 90 சத­வீ­தம் வரை மானி­யம் கொடுத்து ஊக்­க­ம­ளிக்­கிறது.மலை சரி­வு­கள், குளம், குட்டை, நெடுஞ்­சாலை சீர­மைக்க, பிளாஸ்­டிக் ஓவன் ஜியோ டெக்ஸ்­டைல்ஸ் பயன்­பாடு இருந்­தது. மத்­திய அமைச்­ச­கம், கயிறு வாரி­யம் மூல­மாக ஆரா­யச்சி மேற்­கொண்­ட­தன் அடிப்­ப­டை­யில், குளம், குட்டை ரோடு போடும் பணி மற்­றும் மலை சரி­வு­கள் சரிவு ஏற்­ப­டா­மல் இருக்­க­வும், ‘காயர் ஓவன் ஜியோ டெக்ஸ்­டைல்ஸ்’ பயன்­ப­டுத்­த­லாம் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதற்­காக, பல கருத்­த­ரங்­கம், விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்­தப்­ப­டு­கிறது.

நாடு முழு­வ­தும், 30க்கும் மேற்­பட்ட ேஷாரூம் ஏற்­ப­டுத்தி, கயிறு பொருட்­க­ளின் இலக்கை அடைய கயிறு வாரி­யம் தீவிர முயற்­சி­கள் எடுத்து வரு­கிறது. இந்த முயற்­சி­யின் தொடர்ச்­சி­யாக, அடுத்த நான்கு மாதங்­க­ளுக்­குள் கயிறு வாரி­யத்­தின் மூல­மாக, 250க்கும் மேற்­பட்ட மதிப்­புக்­கூட்­டப்­பட்ட பொருட்­கள் உற்­பத்தி செய்­யும் கூட்­டுக்­கு­ழு­மங்­கள் அமைக்க முயற்­சி­கள் மேற்­கொள்­ளப்­ப­டு­கிறது.இவ்­வாறு, அவர் கூறி­னார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)