‘மைக்ரோசாப்ட்’  நிர்வாகக் குழுவிலிருந்து விலகினார் பில் கேட்ஸ் ‘மைக்ரோசாப்ட்’ நிர்வாகக் குழுவிலிருந்து விலகினார் பில் கேட்ஸ் ...  பெட்ரோல், டீசல் விலை ஏன் குறையவில்லை? பெட்ரோல், டீசல் விலை ஏன் குறையவில்லை? ...
ஆற்றல் சேமிப்பின் அவசியத்தை உணர்த்தும் ‘ஸ்டார்ட் அப்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 மார்
2020
15:29

பணம் மட்டும் சேமித்தால் போதும் என்பதுதான் நம்மில் பெரும்பான்மையோருக்கு ஒரு எண்ணம். ஆனால் பணம் சேமிப்பு என்பது நம்முடைய வளர்ச்சிக்கு மட்டும் வலு சேர்க்கும். ஆனால் நாட்டின் வளத்தை மனதில் நினைத்து பார்த்தால் இன்னும் பல சேமிப்புகளும் மனதில் தோன்ற வேண்டும். அவை நீர் மின்சாரம் எரிபொருள் சுற்றுச்சூழல் உணவு நேரம் போன்றவை.

இந்த சேமிப்புகளை செய்வது ஒரு சிரமமான காரியம் அல்ல. தினமும் சில பழக்க வழக்கங்களை தொடர்ந்து கடைபிடிப்பதன் மூலம் மேற்கண்ட சேமிப்புகளை கையாள முடியும். அது வீட்டுக்கும் நாட்டுக்கும் உபயோகமாக இருக்கும்.அவ்வகையில் எரிபொருள் சேமிப்பின் முக்கியவத்தை உணர்த்த பல ‘ஸ்டார்ட்அப்’கள் வந்துள்ளன. ஏறத்தாழ 777 கோடி மக்கள் வசிக்கும் இவ்வுலகத்தில் 50 சதவீததுக்கும் அதிகமான மக்கள் நகரங்களில் வாழ்கின்றனர்.இதனால் நகர்ப்புறங்களில் ஆண்டுக்கு 1,100 கோடி டன் கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன. இந்த கழிவுகளின் குப்பை மலைகளை பல நகரங்களிலும் ஊருக்கு வெளியே பார்த்திருக்கலாம். இவை எந்த உபயோகமும் இல்லாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.ஆனால் இந்தக்குப்பை மலைகளில் மிகப்பெரிய எரிசக்தியான மீத்தேன் இருந்தும் பயன்படுத்தாமல் இருக்கிறோம். இயற்கை வாயுவின் பெரும்பகுதி மீத்தேன் வாயுவாகும். இவற்றை மனதில் வைத்து களமிறங்கி இருக்கிறது ஒரு ‘ஸ்டார்ட்அப்.‘கார்பன் லைட்ஸ்’ என்ற இந்த ‘ஸ்டார்ட்அப்’ பெங்களூரில் இயங்குகிறது.

ஐ.டி. பார்க், ரெசிடென்சியல் காம்ப்ளக்ஸ், ரெஸ்டாரண்ட் ஆகியவற்றில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைகளை தினமும் சேகரிப்பது அதன்பின் அவற்றிலிருந்து மீத்தேன் வாயுவை பிரித்தெடுத்து சமையல் செய்ய பயன்படும் ‘சிஎன்ஜி காஸ் ஆக மாற்றுவது இந்த ‘ஸ்டார்ட்அப்’ வேலை.ஆர்கானிக் உரமாக குப்பைகள் மாற்றப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. இந்த இயற்கை உரத்தால் நல்ல விளைச்சலையும் பெறமுடியும்.இந்த செயல்பாடுகளுக்காக இந்த ‘ஸ்டார்ட்அப்’ பல விருதுகளை பெற்றுஉள்ளது. இணையதளம்: www.carbonlites.comஇதுதவிர பல எரிபொருள் சேமிப்பிற்காக பல ஸ்டார்ட் அப்-கள் வந்திருக்கின்றன. அவற்றை www.energystartups.org என்ற இணையதளத்தில் காணலாம்.சீனாவும் வர்த்தக வாய்ப்புகளும்உலக அளவில் இந்தியாவின் ஏற்றுமதியை பார்த்தால் சீனாவுக்கு செய்யும் ஏற்றுமதி மூன்றாமிடத்தில் வருகிறது. கடந்த 2019 டிசம்பரில் 11,550 கோடி ரூபாய் அளவுக்கு சீனாவுக்கு ஏற்றுமதி செய்து இருக்கிறோம்.

2020 ஜனவரியில் 10,570 கோடி ரூபாயாகவும் பிப்ரவரியில் 10,780 கோடி ரூபாயாகவும் இருக்கிறது. ‘கொரோனா’ பாதிப்புக்கு பின் சீனாவுக்கான ஏற்றுமதி குறைந்து விட்டது.இந்தியாவில் இருந்து சீனாவுக்கு காட்டன், இரும்புத்தாது, மினரல், காப்பர், சல்பர், மெஷினரி, மெக்கானிக்கல் அப்ளையன்ஸ், ஆர்கானிக் கெமிக்கல், எலக்ட்ரிக்கல் எக்யூப்மென்ட்ஸ் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.கொரோனா வைரஸ், சீனா – அமெரிக்க வர்த்தக போர் ஆகியவை சீனாவுக்கான இந்திய ஏற்றுமதி வாய்ப்புகளை அதிகப்படுத்தி தந்திருக்கிறது. அதனை சரியான வகையில் உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும்.
– சேதுராமன் சாத்தப்பன் –
சந்தேகங்களுக்கு: sethuraman.sathappan@gmail.com,
98204 51259
www.startupbusinessnews.com

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)