மோடி பேச்சால் எழுச்சி மீண்டது பங்கு சந்தைமோடி பேச்சால் எழுச்சி மீண்டது பங்கு சந்தை ...  உலக பொருளாதார வளர்ச்சி பூஜ்ஜியமாகும் ; 1982, 2009ம் ஆண்டுகளில் ஏற்பட்ட நிலை உருவாகலாம் என கணிப்பு உலக பொருளாதார வளர்ச்சி பூஜ்ஜியமாகும் ; 1982, 2009ம் ஆண்டுகளில் ஏற்பட்ட நிலை ... ...
பொருளாதாரத்தை குதறும், ‘கொரோனா’ ; பணப்புழக்கத்தில் சரிவை ஏற்படுத்தும் என்கிறது பிக்கி ஆய்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மார்
2020
04:35

மும்பை : கொரோனா வைரஸ் தாக்­கு­தல் கார­ண­மாக, நாட்­டி­லுள்ள நிறு­வ­னங்­களில்
கடு­மை­யான பாதிப்­பு­கள் ஏற்­படும் என்­றும், பணப் புழக்­கத்­தி­லும் சரிவு உண்­டா­கும் என்றும், ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.


இந்­திய வர்த்­தக சபை­க­ளின் கூட்­ட­மைப்­பான, ‘பிக்கி’ மேற்­கொண்ட ஆய்வில், இவ்­வாறு தெரிய வந்துள்­ளது. மந்த நிலை இது குறித்து, இந்த ஆய்­வ­றிக்­கை­யில் கூறப்­பட்­டுள்­ள­தா­வது:
கொரோனா பாதிப்­பு­கள் குறித்து, சமீ­பத்­தில் எடுக்­கப்­பட்ட ஆய்­வின் போது, 50 சத­வீத நிறு­வ­னங்­கள், தங்­க­ளின் செயல்­பா­டு­களில் பாதிப்­பு­கள் ஏற்­படும் என தெரி­வித்­தன. மேலும், 80
சத­வீத நிறு­வ­னங்­கள், பணப் புழக்­கத்­தில் சரிவு ஏற்­படும் என தெரி­வித்­துள்­ளன.

ஏற்­க­னவே, நாடு பொரு­ளா­தார வளர்ச்­சி­யில் மந்த நிலையை சந்­தித்து வரு­கிறது. இப்­போது பொரு­ளா­தா­ரத்­தில், புதி­தாக ஒரு பாதிப்பு கொரோனா வைரஸ் கார­ண­மாக ஏற்­பட்டு வரு­கிறது. இது, தேவை மற்றும் வினி­யோ­கம் ஆகி­ய­வற்­றில் கடு­மை­யான இடையூறு­களை விளை­விக்­கும். தொடர்ந்து, வளர்ச்­சி­யில் சரிவை ஏற்­ப­டுத்­தும் என நிறு­வ­னங்­கள் கரு­து­வது, ஆய்­வில் தெரிய வந்­துள்ளது. கொரோனா தாக்­கு­த­லின் ஆரம்­ப­கட்­ட­மாக இருந்­த­போ­தி­லும்­கூட, 53 சத­வீத நிறு­வ­னங்­கள், இத­னால் குறிப்­பி­டத்­தக்க பாதிப்பு ஏற்­படும் என தெரி­வித்­துள்­ளன. மேலும், 80 சத­வீத வணி­கங்­கள், நோய் தொற்­றால், பணப் புழக்­கத்­தில் சரிவு ஏற்­பட்­டி­ருப்­ப­தாக தெரி­வித்­துள்­ளன.

பொருட்­கள் மற்­றும் சேவை­க­ளின் தேவை மற்றும் வினி­யோ­கம் ஆகி­ய­வற்­றின் மீதான நேரடி தாக்­கம் ஒரு­பு­ற­மி­ருக்க, பொரு­ளா­தார செயல்­பா­டு­கள் குறைந்து வரு­வ­தால், பணப் புழக்­கத்­தில் பாதிப்பை எதிர்­கொள்ள வேண்­டிய நிலை உரு­வாகி உள்­ளது. இதன் விளை­வாக, ஊழி­யர்­க­ளுக்­கான சம்­ப­ளம், வட்டி, கடனை திருப்­பிச் செலுத்­து­வது, வரி செலுத்­து­வது உள்­ளிட்ட அனைத்­தி­லும் பாதிப்பு ஏற்­பட்­டுள்­ளது. இத்­த­கைய சூழ­லில், ரிசர்வ் வங்கி, நாட்­டின் பொரு­ளா­தா­ரம் மற்­றும் தொழில் துறையை ஆத­ரிக்­கும் வகை­யில், 1 சதவீதம் அள­வுக்கு, வட்டி குறைப்பை அறி­விக்க வேண்­டும்.

வங்­கி­களும், நிறு­வ­னங்­கள் செலுத்த வேண்­டிய தொகை சம்­பந்­தப்­பட்ட விஷ­யங்­களில், அனு­ச­ரணை காட்ட வேண்­டும். பணப் புழக்க விஷ­யங்­களில், வங்­கி­களும், ரிசர்வ் வங்­கி­யும் அதிக கவ­னம் செலுத்த வேண்­டும்.



மேலும், அர­சும் வரி வரு­வாய் குறைய வாய்ப்­பி­ருப்­பி­னும், மூல­தன செல­வு­களை குறைக்­கும் முயற்­சி­களை மேற்­கொள்ளக்­கூ­டாது.கொரோனா தாக்­கு­த­லால் அதி­க­ள­வில் பாதிப்பு ஏற்­ப­டக்­கூ­டிய, சுற்­றுலா, விமான துறை­களில், திவால் சட்ட நட­வ­டிக்­கை­களை சற்று நிறுத்தி வைக்க வேண்­டும்.இந்த ஆய்­வில், 60 சத­வீ­தத்­துக்­கும் மேற்­பட்ட நிறு­வ­னங்­கள், வினி­யோ­கத்
தொட­ரில் ஏற்­பட்­டி­ருக்­கும் பாதிப்­பு­கள் மேலும் அதி­க­ரிக்­கும் என தெரி­வித்­துள்­ளன.

மேலும், 42 சத­வீத நிறுவ­னங்­கள், இயல்பு நிலை திரும்ப, மூன்று மாதங்­கள் ஆகும் என தெரி­வித்­துள்­ளன. 40 சத­வீத நிறு­வ­னங்­கள், அலு­வ­ல­கத்­திற்கு வரு­வோரை பரி­சோ­திக்­கின்­றன. 30 சத­வீத நிறு­வ­னங்­கள், வீட்­டி­லி­ருந்து வேலை செய்­யும் திட்­டத்தை அமல் செய்­துள்­ளன.
இவ்­வாறு, பிக்கி தெரிவித்­துள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)