வீட்டிலிருந்தே வரி வசூல் வீட்டிலிருந்தே வரி வசூல் ...  இந்தியாவும், சீனாவும் மட்டுமே தப்பிக்கும் இந்தியாவும், சீனாவும் மட்டுமே தப்பிக்கும் ...
தனிமை...இனிமை: தொழிலை தூக்கி நிறுத்தும் சப்தஸ்வரங்கள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 மார்
2020
07:50

நாம் சந்திக்கும், இன்றைய அசாதாரண சூழ்நிலை, இரண்டு தலைமுறை காணாத ஒன்று. இயற்கை தந்திருக்கும் இந்த தனிமை என்பது நோயிலிருந்து நம்மை காப்பாற்றிக்கொள்ள மட்டுமல்ல, நம்மை நாமே சுய பரிசோதனை செய்து கொள்ளவும் கிடைத்துள்ள நல் வாய்ப்பு. குறிப்பாக, தொழிலதிபர்கள் இந்த கட்டாய ஓய்வு தருணத்தை எப்படி பயன் படுத்தலாம் என்பதை பார்ப்போம்.தொழிலதிபர்கள் தங்கள் சிந்தனையை ஒருமுகப்படுத்தி, முழு ஆற்றலையும் கொண்டு எதிர்காலத்துக்கு திட்டமிடும் காலம் இது. உங்களுக்குள் எழும் ஆழ்ந்த சிந்தனைகள், எதிர்காலத்தில், தொழிலின் புதிய வெற்றிக்கான விதையாக அமையும். இந்த தருணத்தில், மனதில் எழும் தேவையற்ற அச்சத்தை போக்க, இதுவும் கடந்து போகும் என்ற நம்பிக்கையை முதலில் ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.தொழில் என்பது ஒரு சங்கீதம் போன்றது. தனிமையில் இந்த தொழில் சப்தஸ்வரங்களை திட்டமிடுங்கள்.

நீண்ட கால திட்டங்களை யோசியுங்கள்;தொழிலதிபர்கள் பலரின் வாழ்க்கை கொஞ்சம் விசித்திரமானது. எந்நேரமும் தொழில்… தொழில்… தொழில்… சிந்தனை. பலரும், 12 மணி நேரம் முதல் 18 மணி நேரம் வரை உழைத்து பழகியவர்கள்.தனது நிறுவன பொருள், தொழில், அதற்கான சந்தை, சக போட்டியாளர், நிதி நிலவரம், தொழிலாளர் நலன் போன்றவை குறித்தே நாள்தோறும் சிந்தித்து பழகிப்போனவர்கள். இப்போது அவர்கள் எதிர்பார்க்காத ஓய்வு கிடைத்திருக்கிறது. இது தொழில் வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைத்துக்கொள்ளலாம்.தொழில் பளு காரணமாக, பல முக்கிய விஷயங்களில் முடிவெடுக்காமல், பிறகு பார்க்கலாம் என்று தள்ளிப்போட்டுக்கொண்டிருப்பார்கள். இந்த கட்டாய ஓய்வு, தொழிலின் நீண்ட கால திட்டங்களை திட்டமிடுவதற்கான உகந்த காலம். குடும்பத்தில் உள்ள அடுத்த தலைமுறையினருடன் விவாதிக்கலாம். புதிய பொருள் தயாரித்தல், நிதி ஆதாரங்கள் பெறுதல் குறித்து சிந்திக்கலாம். அதை ஆவணப்படுத்தலாம். சகஜநிலை திரும்பியபின் ஒவ்வொன்றாய் செயல்படுத்தலாம்.

புதிய சிந்தனை, புதிய சந்தை;சிறு தொழிலதிபர்கள் பலரும், தங்கள் தொழிலை விரிவுபடுத்தி, பொருளுக்கு புது சந்தையை பிடிக்கச் செய்வதில் கனவு இருக்கும். நேரமிருக்காது. இந்த தனிமை காலத்தை, உங்கள் பொருளுக்கான புதிய சந்தையை தேடும் நேரமாக அமைத்துக் கொள்ளலாம். புதிய விற்பனை உத்திகளை திட்டமிடலாம்.உங்கள் பொருளை, உள்ளூரில் இருந்து உள்நாடு வரைக்கும் கொண்டு செல்ல திட்டமிடலாம். அப்புறம் உலக நாடுகள். பெரிய கார்ப்பரேட் தொழில் நிறுவனங்கள் கூட்டம் போட்டு சிந்தித்து, சந்தையை அலசி ஆராய்வது போன்று சிறு தொழிலையும் பெருந்தொழிலாக கருதி சிந்திக்கலாம், திட்டமிடலாம். முதலில் உங்கள் கனவின் சிறகு விரியட்டும். பிறகு உங்கள் பொருள் / தொழில் தானே எல்லைகளை விஸ்தரிக்கும்.பதற வேண்டாம் – பணியாளரே பலம்;‘‘எங்கள் கம்பெனியின் சொத்துக்கள், தினமும் மாலையில் கம்பெனியில் இருந்து கிளம்பி, வீட்டுக்கு சென்றுவிட்டு, மீண்டும் மறுநாள் காலை அலுவலகம் வந்துவிடும்…’’ – நிறுவன பணியாளர்கள் குறித்து பிரபல தொழிலதிபர் இன்போசிஸ் நாராயண மூர்த்தி குறிப்பிட்டவை. இது சாப்ட்வேர் நிறுவனங்களை மட்டும் குறிப்பதில்லை. எல்லா நிறுவனங்களுக்கும் பொறுந்தும். பணியாளர்களே ஒரு நிறுவனத்தின் பலம். அதுவும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் ஒரு நிறுவனத்தின் அசையும் சொத்துக்கள் என்றே சொல்லலாம். இந்த இக்கட்டான தொழில் சூழலில் இருந்து மீள்வதற்கு பல திட்டங்களை முதலாளிகள் வைத்திருந்தாலும், அவசரப்பட்டு, செலவு குறைக்கிறேன் என்று முக்கிய, திறமையான பணியாளர்களை இழக்கும் முடிவினை எடுத்துவிடக்கூடாது.இன்னும் சில மாதங்களில் நிலைமை சீரடைந்து, தொழில்கள் மறுபடியும் பாய்ச்சல் எடுக்கும். அப்போது புதிய வாய்ப்புகள் கதவு திறக்க காத்திருக்கும். அதுவரை திறன்மிகு பணியாளர்களை தக்க வைப்பதும், தொழில் வெற்றியின் முக்கிய சூத்திரம்.

நிதி திட்டமிடுதலே நிம்மதி;தொழிலில் வெற்றி கண்ட பல தொழிலதிபர்களது பொதுவான சூத்திரம் அடிப்படை நிதி திட்டமிடுதல்.திட்டமிட்டு செய்யப்படும் எந்த காரியமும் தோல்வி அடைந்ததில்லை. தொழிலிலும் அப்படித்தான். குறுகிய கால, நடுத்தர கால, நீண்டகால நிதி திட்டங்களை திட்டமிட வேண்டும். பல சிறு தொழில்கள் சரியான, உறுதியான திட்டமிடலால்தான் பெருந்தொழில்களாக மாறி இருக்கின்றன.தொழில் மேம்படுத்த, அடுத்த ஒரு வருடம், முதல் மூன்று வருடங்கள், எவ்வளவு நிதி தேவை, என்ன முதலீடு தேவைப்படும் என்று திட்டமிட வேண்டும். அதன்பின், தொழிலுக்கான நிதியை கடனாகவோ அல்லது மூலதனமாகவோ சிரமமின்றி தேடிக்கொள்ள முடியும். உங்கள் தொழில் பிரகாசமான வாய்ப்புள்ளதாக இருதால், முதலீடு செய்ய நிறைய பேர் பணத்துடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அடக்கவிலையை அலசுங்கள்ஒரு நிறுவனத்தின் வெற்றி, லாபம் இவை இரண்டும் அந்த நிறுவனம் தயாரிக்கும் பொருளின் உற்பத்தி செலவில் இருக்கிறது. சிக்கனமும் ஒரு வருமானம்தான். மிக துல்லியமான செலவுடன் தயாரிக்கப்படும் பொருள்தான் சந்தையின் கிங்.பெரும்பான்மையான நிறுவனங்கள் பொருளின் அடக்கவிலை குறித்து கவனம் கொள்வதில்லை. இதனால், நிறுவனத்துக்கு வரவேண்டிய லாபம் குறையும். உற்பத்தி செலவுகளையும் மற்ற செலவுகளையும் ஆராய வேண்டிய தருணம் இது.செல்வ வளமிக்க, ‘‘பார்ச்சூன் 500’’ நிறுவனங்களில் பொருட்களின் அடக்க விலையை குறைப்பது எப்படி என்பதில்தான் அதிக கவனம் செலுத்துகின்றன.

நவீனங்களை அரவணையுங்கள்!தொழில் புதிய திசைகளில் வளர, உலகை ஆளும் நவீன தொழில் நுட்பங்கள் உதவுகின்றன. ABCD என்று சொல்லக்கூடிய ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ், பிளாக் செயின், சைபர் செக்யூரிட்டி, டேட்டா அனலெடிக்ஸ் போன்றவை நம் தொழிலுக்கு எப்படி உதவும் என்பது குறித்து தொழில் நுட்ப வல்லுனர்களுடன் போனில் உரையாடலாம். அடுத்தது, முதலாளி நிறுவனத்தில், இருந்தாலும், இல்லாவிட்டாலும் தொழில் தானாகவே நடக்க வேண்டும். அதற்கேற்ப பிராசஸ் ஆட்டோமேஷன் பற்றி சிந்திக்க வேண்டும்.

தொழில் விரிவாக்கம் தொடங்கட்டும்!வெர்டிக்கிள் எக்ஸ்பான்சன், ஹரிசாண்டல் எக்ஸ்பான்சன், பார்வேர்டு அன்ட் ஃபேக்வேர்டு இன்டகிரேஷன் குறித்து சிந்திக்கலாம். இவையெல்லாம், தொழிலின் நீள, அகலத்தை அலசி ஆராய்ந்து, தொழில் விரிவாக்கம் குறித்த நவீன சிந்தனைகள். உங்கள் தயாரிப்புகளுக்கு முன்னும் பின்னும் இருக்கும் பொருட்கள் குறித்த தேடல்.கொரோனா வைரஸ் பரவலுக்குப்பின், சர்வதேச சந்தை நிலவரங்கள் மாறி வருகின்றன. வாழ்க்கை முறையில் நிறைய மாற்றங்கள் ஏற்படப்போகிறது. சந்தையை உன்னிப்பாக கவனிக்க வேண்டிய நேரமிது. பாரம்பரிய வியாபார முறைகளும் மாற உள்ளன. எப்படி, அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதலுக்குப்பின் உலக நாடுகள் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்தியதோ அதேபோல, கோவிட்– 19 நோய் தீவிரத்துக்குப்பின் உலகின் தொழில் பார்வைகள் மாற உள்ளன. புதிய புதிய பொருட்களுக்கு கிராக்கி அதிகரிக்க போகிறது. மாறப்போகும் சந்தையில் உங்கள் பங்கு என்ன என்பதை கவனியுங்கள்.இறுதியாக, அரசியலோ, வியாபாரமோ, விளையாட்டோ, குடும்பமோ – அதை நிர்வகிக்கும் கேப்டன்கள், மனச்சோர்வை அண்ட விடக்கூடாது. எப்படி ஒரு ரன்னில் உலக கோப்பை வாய்ப்பை இழந்த ஒரு கிரிக்கெட் அணியின் கேப்டன், 4 ஆண்டுகளுக்குப்பின் நடக்கப்போகும் அடுத்த உலக கோப்பைக்கு நம்பிக்கையுடன் தன் அணியை தயார் செய்வாரோ அதுபோல் தயாராகுங்கள்.தனிமை எப்போதும் இனிமைதான். இந்த தனிமை, தொழிலிலும், வாழ்விலும் ஜெயிப்பதற்கானது. உங்களுக்கான தொழில் சூத்திரங்களை உருவாக்க கிடைத்திருக்கும் நேரமிது. ஒவ்வொருவரும், உலக கோப்பை கைப்பற்றப்போகும் கேப்டனாக மாறுங்கள். வரும் தமிழ் புத்தாண்டு இனிமையாக தொடங்கட்டும். வாழ்த்துக்கள்!
தொழில் சுகம் தொடரும்...
ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)