பதிவு செய்த நாள்
01 ஏப்2020
23:23

புதுடில்லி:கடந்த நிதியாண்டில், பங்கு விலக்கல் மூலமாக, 65 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட மத்திய அரசு திட்டமிட்டிருந்த நிலையில், அது முழுமையாக நிறைவேறாமல் போய்விட்டது.
கடந்த நிதியாண்டான, 2019--_20ல், மத்திய அரசு, 65 ஆயிரம் கோடி ரூபாயை பங்கு விலக்கல் மூலமாக திரட்ட இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், திட்டமிட்டிருந்ததை விட, கிட்டத்தட்ட, 14 ஆயிரத்து, 700 கோடி ரூபாய் குறைவாக, 50 ஆயிரத்து, 298.64 கோடி ரூபாயை மட்டுமே திரட்ட முடிந்தது.
மத்திய அரசு, 2019-- – 20ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டின் போது, 1.05 லட்சம் கோடி ரூபாயை பங்கு விலக்கல் மூலம் திரட்ட உள்ளதாக அறிவித்தது. ஆனால், அதன் பின், இலக்கு, 65 ஆயிரம் கோடி ரூபாயாக குறைத்து நிர்ணயிக்கப்பட்டது.கடந்த, 2015-- – 16, 2016--- – 17 ஆகிய நிதியாண்டுகளிலும் இலக்கு எட்டப்படவில்லை.
2017-_18ம் நிதியாண்டில் இலக்கு எட்டப்பட்டது. இவ்வாண்டில், ஒரு லட்சம் கோடி ரூபாயாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், 1 லட்சத்து, 56 கோடி ரூபாய் திரட்டப்பட்டது. 2018-- – 19ல், 80 ஆயிரம் கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், 84 ஆயிரத்து, 972 கோடி ரூபாய் திரட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது மீண்டும் இலக்கை எட்டமுடியாமல் போய்விட்டது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|