பதிவு செய்த நாள்
01 ஏப்2020
23:34

புதுடில்லி:கடந்த நிதியாண்டான, 2019-- – 20ல், பங்குச் சந்தைகளில், முதலீட்டாளர்கள், 37.59 லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளனர்.
பங்குச் சந்தைகளின் சரிவுகள் காரணமாக, முதலீட்டாளர்கள் இத்தகைய இழப்பை சந்திக்க நேர்ந்தது.மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ், கடந்த நிதியாண்டில், 9204.42 புள்ளிகளை இழந்துள்ளது. இது, 23.80 சதவீதம் சரிவாகும். இதேபோல் நிப்டியும், 3026.15 புள்ளிகளை கடந்த நிதியாண்டில் இழந்து, 26.03 சதவீத சரிவை சந்தித்தது.
கடந்த நிதியாண்டில், பங்குகள் அதிகம் விற்கப்பட்ட காரணத்தினால், மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மூலதனத்தில், 37.59 லட்சம் கோடி ரூபாய் கரைந்துபோனது.மார்ச் மாதத்தில் சந்தைகள் மிகவும் சரிவை கண்டன. சென்செக்ஸ் இந்த மாதத்தில் மட்டும், 8828.8 புள்ளிகள் குறைந்து, 23 சதவீதம் சரிவை கண்டது.
பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகளவில் விற்பனை செய்ததால், கடந்த மார்ச், 24ம் தேதியன்று, ஓராண்டில் இல்லாத வகையில், சென்செக்ஸ், 25638.9 புள்ளிகளாக சரிந்தது. இதற்கு இரு மாதங்களுக்கு முன், ஜனவரி, 20ல், சந்தை அதுவரை இல்லாத வகையில், 42273.87 புள்ளிகள் எனும் சாதனை உயரத்தை எட்டியது.நிப்டியும் அதன் சாதனை அளவான, 12 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது குறிப்பிடத்தக்கது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|