பதிவு செய்த நாள்
24 ஏப்2020
02:25

மும்பை : இந்தியாவில், இதுவரை தங்கத்தில் முதலீடு செய்யாத, 29 சதவீதம் பேர், தற்போது அது குறித்த சிந்தனைக்கு வந்திருப்பதாக, உலக தங்க கவுன்சில் தெரிவித்து உள்ளது.
இது குறித்து, உலக தங்க கவுன்சிலின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்தியாவில், சில்லரை முதலீட்டாளர்களில், இதுவரை, தங்கத்தில் முதலீட்டை மேற்கொள்ளாத, 29 சதவீதம் பேர், எதிர்காலத்தில், தங்கத்தில் முதலீடு செய்வது குறித்த சிந்தனைக்கு இப்போது வந்துள்ளனர்.அரசாங்கம் முன்னெடுக்கும் நிதி திட்டங்கள், நிதி சம்பந்தமான தொழில்நுட்ப வளர்ச்சி, நிதி குறித்த அறிவு பெருக்கம் ஆகியவை இதற்கு காரணமாக அமைந்துள்ளது.இந்தியாவில், சில்லரை முதலீட்டாளர்களில், 52 சதவீதம் பேர், ஏற்கனவே ஏதாவது ஒரு வகையில், தங்கத்தில் முதலீடு செய்திருக்கிறார்கள்.
மேலும், 48 சதவீதம் பேர், கடந்த, 12 மாதங்களில், தங்கத்தில் முதலீடு செய்துள்ளனர். இந்திய முதலீட்டாளர்களின் டாப் ஐந்து முதலீடுகளில், தங்க ஆபரணங்களும், நாணயங்களும் இடம் பெற்றுள்ளன. இது, மேலும் பல ஆண்டுகளுக்கு தொடரும்.தங்கத்தின் மீதான முதலீட்டை பொறுத்தவரை, நகரத்தில் அதிகம் பேர் முதலீட்டை மேற்கொண்டிருக் கின்றனர்.கடந்த காலத்தில், 76 சதவீத நகர முதலீட்டாளர்கள், தங்கத்தில் முதலீட்டை மேற்கொண்டுஇருக்கிறார்கள்.இதற்கு முன் தங்கத்தில் முதலீடு செய்திராத, 21 சதவீதம் பேர், எதிர்காலத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்களாக உள்ளனர்.
இதற்கு மாறாக, கிராமப்புற முதலீட்டாளர்களில், இதற்கு முன் முதலீடு செய்திராத, 31 சதவீதம் பேர், வருங்காலத்தில் முதலீடு செய்ய விருப்பம் உடையவர்களாக இருக்கிறார்கள். மேலும், உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில், இந்தியாவில், 61 சதவீதம் பேர், தங்கம் வாங்குவதில் நம்பிக்கை கொண்டு இருக்கின்றனர்.இவ்வாறு உலக தங்க கவுன்சில் தெரிவித்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|