பதிவு செய்த நாள்
02 மே2020
23:16

புதுடில்லி:செய்தித்தாள்
துறைக்கு, உரிய நிவாரணம் வழங்கப்படாவிட்டால், துறையானது,
15
ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பை சந்திக்க நேரிடும் என, ’இந்திய
செய்தித்தாள் சங்கம்’ தெரிவித்து உள்ளது.
நாடு முடக்கப்பட்டிருக்கும் நிலையில், இதுவரை செய்தித்தாள் துறை, 4 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்து உள்ளது.மேலும்,
அடுத்த ஆறிலிருந்து, ஏழு மாதங்களில் இழப்பு,
15 ஆயிரம் கோடி ரூபாய் வரை
அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
சிரமம்
இது
குறித்து, தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை செயலருக்கு, இந்திய
செய்தித்தாள்
சங்கத்தின் தலைவர் ஷைலேஷ் குப்தா எழுதிய கடிதத்தில்,
மேலும் தெரிவிக்கப்பட்டுஉள்ளதாவது:நாடு முடக்கப்பட்டதை
அடுத்து, மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும் துறைகளில், செய்தித்தாள்
துறையும் ஒன்றாகும். விளம்பரங்கள் மற்றும் வினியோகம் மூலம்
வருவாய் சரிந்து, மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது.
கடந்த இரண்டு மாதங்களில், இத்துறையானது, 4 ஆயிரத்திலிருந்து, 4,500 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது.நாட்டின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,
தனியார் விளம்பரங்கள் வருவதும் சிரமமாகி உள்ளது.இந்நிலையில்,
அரசின் ஊக்கச்
சலுகைகள் இல்லாவிட்டால், அடுத்த ஆறு முதல் ஏழு
மாதங்களில், மேலும்,
12 ஆயிரத்திலிருந்து, 15 ஆயிரம் கோடி ரூபாய் வரை
இழப்பை சந்திக்க வேண்டிய நிலை
ஏற்படும்.இவ்வாறு ஷைலேஷ் குப்தா கடிதத்தில் தெரிவித்து இருக்கிறார்.
மேலும்,
இத்தருணத்தில், அரசு, அச்சுக் காகிதத்தின் மீதான, 5 சதவீத சுங்க
வரியை திரும்ப பெற வேண்டும் என்றும், கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.தயாரிப்பு
செலவில், 40 முதல், 60 சதவீதம் வரை, அச்சுக் காகிதத்திற்கே
செலவாகிவிடுவதாகவும், இந்நிலையில், 5 சதவீத சுங்க வரியை
நீக்குவதால், உள்நாட்டு தயாரிப்பாளர்களோ, ‘இந்தியாவில்
தயாரிப்போம்’
திட்டத்திற்கோ, பெரிதாக எந்த பாதிப்பும் வந்துவிடாது
என தெரிவித்துள்ளது, இந்திய
செய்தித்தாள் சங்கம்.
கோரிக்கை
மேலும்,
இரண்டு ஆண்டு காலத்துக்கு, செய்தித்தாள் நிறுவனங்களுக்கு, வரி
விடுமுறை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.அத்துடன்,
விளம்பர கட்டண விகிதத்தில், 50 சதவீதம் உயர்த்தி வழங்கவும், அச்சு
ஊடகங்களுக்கான பட்ஜெட்
செலவினங்களில், 100 சதவீதம்
அதிகரிக்கவும் அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.இந்திய
செய்தித்தாள் துறையில், சங்கத்தின் மதிப்பீட்டின்படி, 9 முதல், 10
லட்சம் பேர் நேரடி வேலைவாய்ப்பிலும், 18 முதல், 20 லட்சம் பேர்,
மறைமுக வேலைவாய்ப்பையும் பெற்று உள்ளனர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|