பதிவு செய்த நாள்
07 மே2020
23:05

சென்னை:தொழிற்சாலைகளுக்கான விதிகள் தளர்த்தப்பட்ட நிலையில், சென்னை
தொழிற்சாலையில், கார் உற்பத்தியை துவக்கி உள்ளதாக, ‘பி.எம்.டபிள்யூ., கார் இந்தியா’
நிறுவனம் அறிவித்துள்ளது.
இது குறித்து, அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:ஊரடங்கு விதிகளை தளர்த்தி வெளியிடப்பட்ட வழிமுறைகள் மற்றும் உள்ளூர் நிர்வாக அறிவுரைப்படி, செங்கல்பட்டு அருகே, மஹிந்திரா வேல்டு சிட்டி யில் உள்ள தொழிற்சாலை யில், கார் உற்பத்தி துவக்கப்பட்டுள்ளது.
வழக்கமான தொழிலாளர்களில், 50 சதவீதத்திற்கும் குறைவான தொழிலாளர்களுடன், தொழிற்சாலை செயல்படத் துவங்கி உள்ளது. இதர தொழிலாளர்கள் அனைவரும், வீட்டில் இருந்து தொடர்ந்து பணியாற்றுவர். தற்போது, ஒரு, ‘ஷிப்ட்’ முறையில் செயல்படத் துவங்கி உள்ளது. கொரோனா தொற்று நிலை மற்றும் அரசு ஆலோசனைப்படி, தொழிலாளர்கள்
எண்ணிக்கை உயர்த்தப் படும்.
பணிக்கு வரும் அனைத்து தொழிலாளர்களுக்கும்,தினமும் மருத்துவ பரிசோதனை, தனிநபர் பாதுகாப்பு, தனிமனித இடைவெளியைகண்டிப்பாக பின்பற்றுதல்,கிருமி நாசினி
பயன்படுத்துதல் உட்பட, அனைத்துமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இவ்வாறு,பி.எம்.டபிள்யூ., கார் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|