பதிவு செய்த நாள்
07 மே2020
23:09

புதுடில்லி:சீனாவில் உள்ள, அமெரிக்க வணிகங்களை, இந்தியாவில் வளைத்துப் போடும் முயற்சியில், மத்திய அரசு தீவிரமாக இறங்கி உள்ளது.
சீனாவில் தயாரிப்பு களை மேற்கொண்டு வரும், 1,000 அமெரிக்க நிறுவனங்களை, இந்தியாவுக்கு அழைத்து வரும் முயற்சியில், இந்திய அரசு தீவிரமாக இறங்கிஉள்ளது.இது குறித்து, அரசு உயரதிகாரி ஒருவர் கூறியதாவது;அண்மை காலமாகவே, சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே, வர்த்தகப் போர் மூண்டு, இன்னும் முடிவுக்கு வராமல் உள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதல் உலகமெங்கும் பரவி விட்டது.வைரஸ் தொற்று ஏற்படுவதற்கு, சீனாவே முக்கிய காரணம் என, அமெரிக்க அதிபர் டிரம்ப் மிகவும் வெளிப்படையாகவே குற்றம் சாட்டி வருகிறார்.
நல்ல வாய்ப்பு
இந்நிலையில், சீனாவிலிருந்து அமெரிக்க நிறுவனங்கள் வெளியேறுவதில், அமெரிக்க அரசு ஆர்வம் காட்டி வருகிறது.வர்த்தகப் போரின் போதே, சீனாவிலிருந்து வெளியேற விரும்பும் நிறுவனங்களை, இந்தியாவுக்கு வரவழைக்கும் முயற்சிகள் துவங்கி விட்டன. இப்போது, மேலும் நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில், 1,000 அமெரிக்க நிறுவனங்களை இந்தியா அணுகி உள்ளது.குறிப்பாக, மருந்து மற்றும் மருத்துவ சாதனங்களை தயாரிக்கும் நிறுவனங்களை ஈர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், உணவு பதப்படுத்துதல், ஜவுளி, தோல், வாகன பாகங்கள் உள்ளிட்ட, 550 பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களை ஈர்க்கும் முயற்சியும் மேற்கொள்ளப்படுகிறது.
இதற்கிடையே, ஜப்பான், தன் நாட்டுக்கு அருகில் உள்ள நாடுகளில் இருக்கும் நிறுவனங்களை ஈர்க்க, 220 கோடி டாலர் ஒதுக்கீடு செய்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம், சீனாவை சார்ந்திருக்கும் நிலையை மாற்ற விரும்புவதால், ஜப்பான் அதை பயன்படுத்தி கொள்ள விரும்புகிறது.
செலவு குறைவு
இந்தியா, சீனாவில் உள்ள ஆரோக்கிய பாதுகாப்பு சாதனங்களை தயாரிக்கும், ’மெட்ரானிக்’, ‘அப்போட் லேபாரட்டரீஸ்’ ஆகிய நிறுவனங்களிடம் பேச்சு நடத்தி உள்ளது. இந்த நிறுவனங்கள் இந்தியாவிலும் உள்ளன. எனவே, அவற்றை சீனாவிலிருந்து இடம்பெயர வைப்பது சிரமமாக இருக்காது என, அரசு கருதுகிறது.
அமெரிக்க நிறுவனங்கள், சீனாவிலிருந்து வெளியேறி, மீண்டும் அமெரிக்காவில் தயாரிப்பதை விட, இந்தியாவில் தயாரிப்பது மிகவும் செலவு குறைவானதாக இருக்கும். நிலத்தின் விலை குறைவு, திறன் மிகு தொழிலாளர்கள், குறைந்த ஊதியத்தில் கிடைப்பது என, பல வசதிகள் உள்ளன.சீனாவுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் தயாரிப்பு செலவு சற்று அதிகமிருப்பினும், அமெரிக்காவை விட மிகவும் குறைவே. எனவே இந்தியாவுக்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|