சிறிய கடைகளுக்கு உதவும் ‘பி2பி’ கம்பெனிசிறிய கடைகளுக்கு உதவும் ‘பி2பி’ கம்பெனி ... லாக்­ட­வு­னுக்கு பிறகு எதிர்­கொள்­வது எப்­படி? லாக்­ட­வு­னுக்கு பிறகு எதிர்­கொள்­வது எப்­படி? ...
யதார்த்தம் தரும் புதிய வாய்ப்புகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மே
2020
23:40

இதோ, வரும், 17ல், மூன்றாவது ஊரடங்கு முடியப் போகிறது. கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் எந்த விதமான பொருளாதார, தொழில், உற்பத்தி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாமல், உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வந்தோம்.


இப்போது மீண்டும், பொருளாதாரச் சக்கரத்தைச் சுழல விடும்போது, என்னென்ன துறைகள் வாய்ப்புகளை வழங்கப்போகின்றன...கொரோனா கொள்ளை நோய், நம் அணுகுமுறை களையும், புரிதல்களையும் முற்றிலும் புரட்டிப் போட்டுள்ளது. அதில் முக்கியமானது, இனிமேல் கூட்டமாகச் சேர்ந்து பணியாற்றுவதோ, வாழ்வதோ சாத்தியமில்லை என்ற நிலை.


தனிமனித இடைவெளி மிக அவசியம். தனிப்பட்ட சுகாதாரம், இன்னொரு முக்கிய தேவை. அலுவலகத்துக்குச் செல்லும்போது, வேலட் /மணிபர்ஸ், செல்போன், கண்ணாடி ஆகியவற்றை எடுத்துச் செல்வது போல், இனிமேல், முக கவசம், சானிடைசர், கையுறை ஆகியவற்றையும் மறக்காமல் எடுத்துச் செல்ல வேண்டும்.

3 அடி இடைவெளி

கைகுலுக்க முடியாது; துணிச்சலாக வெளியே பயணம் போக முடியாது; ஓட்டல்களில் சாப்பிட முடியாது; புதிய நபர்களைச் சந்திக்கும் போது, 3 அடி இடைவெளி விட்டே பேச வேண்டும்.


இந்தப் புதிய யதார்த்தம், வினோதமாகவும், எரிச்சல் ஊட்டுவதாகவும் இருக்கலாம். ஆனால், அதுவே புதிய வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தந்துள்ளது. அவை என்னென்ன...‘ஆன்லைன்’ கல்வி முதல் வாய்ப்பு. பள்ளிகள், கல்லுாரிகள் திறக்கப்படுவதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகும் என்ற நிலை. அப்படியே திறக்கும்போது, பள்ளிகள் எவ்வளவு துாரம் புதிய யதார்த்தத்துக்குத் தயாராக இருக்கின்றன என்ற கேள்வி எழும்.அதனால், படிப்படியாக மாணவர்கள், ஆன்லைன் கல்விக்கு நகர்வதற்கான வாய்ப்பே அதிகம்.



புதிய தொழில்கள்


இந்த இரண்டு மாதங்களிலேயே, பல பள்ளிகள், எண்ணற்ற இணையச் செயலிகள், அலைபேசிக் கருவிகள் மூலம், வகுப்புகளை எடுக்கத் தொடங்கின. மாணவர்களும் கணினிகளின் முன்பு உட்கார்ந்து, வகுப்புகளை கவனிப்பது எப்படி என்பதைத் தெரிந்து விட்டனர். இந்த ஆரம்பம், பெரிய வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் என்பது உறுதி.


மாணவர்களின் கல்வித் தேவைகளை ஒட்டி, புதிய பாடங்களை, வித்தியாசமான முறையில் தயாரிப்பது தொடங்கி, நேரடி வகுப்புகள், சிறப்பு ஆசிரியர்களின் வகுப்புகள், அன்றாட வீட்டுப் பாடங்களை வழங்கும் முறைகள், மாணவர்களின் கல்வி வளர்ச்சியை மதிப்பிடும் தேர்வு முறைகள் என, ஏராளமான புதிய தொழில்கள் உருவாகப் போகின்றன. பல்கலை கழகங்கள் எப்படி, தொலைதுார படிப்புகளை வழங்கி வருகின்றனவோ, அதுபோல் பள்ளிகளும் இணையவழிக் கல்வியை வழங்க வாய்ப்புள்ளது.



இணையவழிக் கல்வி

இதுநாள் வரை, இணைய வழிக் கல்வி என்பது கூடுதலான வசதியாக மட்டுமே கருதப் பட்டது. ஆனால், இதுவே, இப்போது பிரதான கல்வி முறையாக மாறவும் வாய்ப்புள்ளது.மின் வர்த்தகம் அடுத்த பெரிய துறை. ஊரடங்கு காலத்தில் பலரும் இதன் அருமையைப் புரிந்து கொள்ளத் தொடங்கினர். கடைகளுக்குச் செல்லும்அனுபவம் என்று சொல்லப்படும், ‘ஷாப்பிங் எக்ஸ்பீரியன்ஸ்’ முக்கியம் என்று கருதியவர்கள் கூட, இப்போது மனம் மாறி விட்டனர்.


முன்பெல்லாம் ஆடம்பரப் பொருட்கள், எலக்ட்ரானிக் சாமான்கள், ஆடைகள் தான் வலை தளங்களில் அதிகம் விற்பனையாயின. ஆனால், புதிய யதார்த்தம், வேறொரு துறைக்கு வழிவிட்டிருக்கிறது. ஆன்லைனில் மளிகை சாமான்கள், காய்கறிகள், பழங்கள், இறைச்சி உட்பட அன்றாடத் தேவைகளை வாங்குவது பெருகியுள்ளது. இந்தத் துறையில், பெரும் போட்டி ஏற்பட போவது நிச்சயம்.

ரசாயன துறை இன்னொரு வாய்ப்புள்ள துறை. அடுத்த 10 ஆண்டுகள், ரசாயன துறை தான் கொடிகட்டி பறக்கும் என, நிபுணர்கள் நம்புகின்றனர். மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், விவசாயத் துறை, பெயின்ட், கட்டுமானப் பொருட்கள், வாகன உதிரிபாகங்கள், ஜவுளி, பேக்கேஜிங் என, அனைத்து இடங்களில் ரசாயன பொருட்களுக்கான தேவை பெருகப் போவது உறுதி.அதிலும், மருந்து உற்பத்தி, விவசாயம் ஆகியவற்றில், இதன் தேவை பன்மடங்கு உயரும்.இத்துறையில் தற்போது தேக்கம் தென்பட்டாலும், அடுத்து வளரக்கூடிய, ‘சன்ரைஸ் இண்டஸ்ட்ரி’ என்றே இதை குறிப்பிடுகின்றனர்.


கூடுதல் நிதி

மருத்துவமனைகளும், மருந்துகளும் நேரடியாக வாய்ப்பை பெறக்கூடிய துறைகள். அரசாங்கமே, சுகாதாரத் துறைக்கு ஒதுக்கும் நிதியின் அளவு அதிகரிக்கும். அதைக் கொண்டு, ஆரம்ப சுகாதார நிலையம் முதற்கொண்டு, மாவட்ட, மாநகர, பெருநகர மருத்துவமனை களுக்கு கூடுதல் நிதி கிடைக்கும். அங்கேயெல்லாம் புதிய மருத்துவ தொழில்நுட்ப கருவிகள், பரிசோதனை முறைகள் ஆகியவை அறிமுகமாகும்.


இதே அளவுக்குத் தனியார் துறை முதலீடுகளும் அதிகரிக்கும்.அதோடு, ஊட்டச்சத்து மற்றும் ‘வெல்னஸ்’ என்று சொல்லப்படும், ‘நல்வாழ்வு’ பயிற்சிகள், சிகிச்சைகளுக்கான தேவைகளும் பெருகப் போகின்றன. வலைதளங்கள் வழியாக மருந்துகள் வாங்குவதும், ‘டெலிகன்சல்ட்டிங்’ எனச் சொல்லப்படும், ‘தொலை -மருத்துவ ஆலோசனை’ முறைகளும் வளரப் போகின்றன.

மவுசு

கூட்டமாக, பொதுப் போக்குவரத்தைச் சார்ந்திருக்கும் நிலையும் இனி மாறும். அவரவர் தமக்கென ஒரு கார் வாங்குவது சாத்தியமாகும். இதிலும், மின்சார வாகனங்களுக்கான மவுசு அதிகரிக்கும். அடுத்த 10 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் தேவைகள் குறைந்து, மின்சார கார்கள் தான் கோலோச்சப் போகின்றன என்பதால், அதற்கு தேவையான பேட்டரிகள், மின்னேற்ற மையங்கள், அது சார்ந்த தொழில்நுட்பங்கள் ஆகியவை, பெரும் வாய்ப்பைப் பெறப் போகின்றன.

காப்பீடும், வங்கித் துறையும், நிச்சயம் வளரப் போகும் துறைகள். இது நாள் வரை, வருமான வரிச் சலுகைக்காக மட்டுமே காப்பீடு எடுத்து வந்தோர், இனிமேல், தேவையறிந்து சரியான காப்பீட்டு சேவைகளை பெற முயற்சி மேற்கொள்வர். வழங்கப்படும் சேவைகளும், சரியான காப்பீடு பிராடக்ட்டுகளுமே வாடிக்கையாளர்களை ஈர்க்கப் போகின்றன. அவற்றை வழங்க முன்வரும் உள்நாட்டு, வெளிநாட்டு காப்பீட்டு நிறுவனங்களுக்கு, நல்ல வளர்ச்சி வாய்ப்பு உண்டு.

வங்கித் துறை சேவைகளை, விரல் நுனியில் பெறுவதற்கான முனைப்பு அதிகரித்துள்ளது. வங்கிக்கே செல்லாமல், அனைத்து வங்கித் துறை சேவைகளையும் இணையம், கைபேசி வழியே பெறுவதற்கான தொழில்நுட்ப முன்னேற்றங்கள் வரவேற்கப்படும். வங்கித் துறை, இத்தகு புது தொழில்நுட்பங்களில் கூடுதலாக முதலீடு செய்ய வேண்டிய கட்டாயம் எழும்.உற்பத்தி சார்ந்த தொழிலகங்களில், எவற்றிலெல்லாம் மனித உழைப்பு நேரடியாக அவசியமோ, அவர்கள் மட்டுமே அலுவலகங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் வர வேண்டியிருக்கும்.


வீட்டில் இருந்து பணி

எவையெல்லாம் தொலை துாரத்தில் இருந்து செய்ய முடியுமோ, அவையெல்லாம், ‘அவுட் சோர்ஸ்’ செய்யப்படும் அல்லது வீட்டில் இருந்து பணியாற்ற ஊழியர்கள் அனுமதிக்கப் படுவர். இதனால், அலுவலக கட்டுமானங்களுக்கான தேவை சரிந்து போகலாம். ஆனால், வீடுகளுக்கான தேவை அதிகரிக்கும். அதுவும் வத்திப்பெட்டி போன்ற வீடுகளுக்கு அல்ல; மாறாக, நல்ல காற்றோட்டமுள்ள சற்றே பெரிய வீடுகளுக்குத் தேவை அதிகரிக்கும். அது, நகரத்துக்குள் தான் இருக்க வேண்டும் என்ற தேவையிராது.


நகரத்தை விட்டு வெளியே ஒரு மணி நேர, இரண்டு மணி நேர டிரைவில் இருந்தாலும் பரவாயில்லை என, நகரத்தை விட்டு வெளியே நகருவோர் அதிகரிப்பர். கொரோனா, நம் சிந்தனைப் போக்கையே முற்றிலும் மாற்றி விட்டது. நாம் இப்படியெல்லாம் மூன்று, நான்கு மாதங்களுக்கு முன் கூட யோசித்திருக்க மாட்டோம். இனி, அப்படி யோசிக்காமல் இருக்கவும் முடியாது.


கொரோனா பாதிப்பு இன்னும் எத்தனை மாதங்கள் அல்லது ஆண்டுகள் தொடர்கின்றனவோ, அவ்வளவு துாரம், நம் ஆரோக்கியத்தைச் சார்ந்தே தொழிலக, வர்த்தக, தனிப்பட்ட பயன் பாட்டு நடைமுறைகள் மாற்றமடையும். பழைய மாதிரியே மீண்டும் தொழில், வர்த்தகச் சூழல் இல்லையே என்று அங்கலாய்ப்பதில் அர்த்தமில்லை. புதிய யதார்த்தம் தரும் புதிய வாய்ப்புகளுக்கு ஆயத்தமாவதே புத்திசாலித்தனம்.

ஆர்.வெங்­க­டேஷ்
பத்­தி­ரி­கை­யா­ளர்
pattamvenkatesh@gmail.com
98410 53881

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)