யதார்த்தம் தரும்  புதிய வாய்ப்புகள் யதார்த்தம் தரும் புதிய வாய்ப்புகள் ... எரிபொருள் தேவை ஏப்ரலில் 46 சதவீதம் சரிவு எரிபொருள் தேவை ஏப்ரலில் 46 சதவீதம் சரிவு ...
லாக்­ட­வு­னுக்கு பிறகு எதிர்­கொள்­வது எப்­படி?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மே
2020
23:47

கொரோனா லாக்டவுன் எப்போது விலக்கி கொள்ளப்பட்டாலும், பழைய இயல்பு நிலை திரும்ப அவகாசம் தேவை எனும் நிலையில், வருங்காலத்திற்கான சரியான திட்டமிடல் அவசியம்.

உல­கையே உலுக்­கி­யி­ருக்­கும் கொரோனா, எல்லா தரப்­பி­ன­ருக்­கும் முக்­கிய பாடங்­களை
கற்­றுத்­தந்துஇ­ருக்­கிறது. தனி­ந­பர்­களை பொறுத்­த­வரை, சேமிப்­பின் முக்­கி­யத்­து­வத்­தை­யும், தேவை­களில் இருந்து விருப்ப செல­வு­களை பிரிப்­ப­தன் அவ­சி­யத்­தை­யும் உணர்த்­தி­இருக்­கிறது.ஒரு மாத காலத்­திற்கு மேல்வீட்­டுக்­குள் முடங்­கி­யி­ருந்த நிலை, அத்­தி­யா­வ­சிய செல­வு­கள் எவை என்ப­தை­யும் புரிய வைத்­துள்­ளது.


அதே நேரத்­தில், ஒட்­டு­மொத்த பொரு­ளா­தார நோக்­கில் ஏற்­பட்­டு உள்ள பாதிப்­பு­கள், பணி­யி­ழப்பு, ஊதிய குறைப்பு போன்­ற­வற்­றுக்கு வழி­வ­குக்­க­லாம் என்று அஞ்­சப்­ப­டு­கிறது. எனவே, லாக்­ட­வுன் விலக்கி கொள்­ளப்­பட்­ட­வு­டன் இயல்பு நிலை வந்­து­வி­டும் என
எதிர்­பார்க்க முடி­யாது.

தொட­ரும் சவால்­கள்

கொரோ­னா­வால் மாறி­யி­ருக்­கும் சூழ­லில் ஏற்­ப­டக்­கூ­டிய சவால்­களை சமா­ளிக்க தயா­ராக இருக்க வேண்­டும். எதிர்­கால நலன் காக்­கும் வகை­யில் சரி­யான திட்­ட­மி­ட­லும் அவ­சி­யம். ஒவ்­வொ­ரு­வ­ரும் தங்­க­ளது தற்­போ­தைய சூழலை அலசி ஆராய்­வ­தில் இருந்து திட்­ட­மி­டலை துவங்க வேண்­டும்.


ஒவ்­வொ­ரு­வ­ரும் மூன்று வித­மான சூழலை எதிர்­கொள்­ளும் சாத்­தி­யம் இருக்­கிறது. மிக மோச­மான நிலை­யில், பணி­யி­ழப்பு அல்­லது ஊதிய குறைப்பை எதிர்­கொள்­ள­லாம். சகஜ நிலை என்­பது, நிதி நோக்­கில் எந்த பாதிப்­பும் இல்­லா­மல் இருப்­ப­தாக அமை­யும். ஒரு சிலர், நிதி நோக்­கில் பாதிப்பு அடை­யா­த­தோடு, லாக்­ட­வுன் காலத்­தில் செல­வு­கள் குறைந்து
கூடு­த­லாக சேமித்து இருக்­க­லாம்.

மோச­மான நிலை­யில் இருப்­ப­வர்­களும் சரி, சிறந்த நிலை­யில் இருப்­ப­வர்­களும் சரி, இனி வரும் மாதங்­களில் செலவை குறைக்­கும் வழியை கடைப்­பி­டித்­தாக வேண்­டும்.
அத்­தி­யா­வ­சிய செல­வு­கள் தவிர, மற்ற செல­வு­களை கட்­டுப்­பாட்­டில் வைத்தி­ருக்க வேண்­டும். இந்த செல­வு­களை எல்­லாம் சேமிப்­பாக மாற்ற வேண்­டும். வெளியே சாப்­பி­டு­வது, இணைய பொழு­து­போக்கு போன்ற செல­வு­களை கட்­டுப்­ப­டுத்த வேண்­டும்.சேமிப்பை அதி­க­ரிக்­கும் அதே நேரத்­தில், அவ­சர தேவைக்­கான பணம் கையில் இருப்­பதை உறுதி செய்து கொள்ள வேண்­டும்.

கவ­னம் தேவை

பணி­யி­ழப்பு அல்­லது ஊதிய குறைப்­புக்கு உள்­ளா­ன­வர்­கள் எனில், அவ­சர தேவைக்­கான தொகையை மேலும் அதி­க­ரிக்க வேண்­டும். செல­வு­களை இன்­னும் குறைக்க வேண்­டும்.
இந்த கடி­ன­மானகாலத்­தில் கடன் சுமை கைமீ­றிச்­செல்­லா­மல் இருப்­ப­தி­லும் கவ­னம் செலுத்த வேண்­டும்.வீட்­டுக்­க­டன் போன்ற கடன்பெற்­றி­ருப்­ப­வர்­கள், வாய்ப்­பி­ருந்­தால்
மாதத்­த­வ­ணையை தள்­ளிப்­போ­டும் வச­தியை நாடா­மல், தவ­ணையை செலுத்தி வர
வேண்­டும். இது,எதிர்­கால சுமையை குறைக்­கும்.


கட­னுக்­கான தற்­போ­தைய வட்டி விகி­தம் அதி­க­மாக இருந்­தால், குறைந்த வட்டி
விகி­தத்­திற்கு மாறு­வது பலன் அளிக்­குமா என பரி­சீ­லிக்­க­லாம்.பொரு­ளா­தா­ரம் பழைய நிலைக்கு திரும்­பும் வரை கவ­ன­மாக இருக்க வேண்­டும். சேமிப்­பில் கவ­னம் செலுத்­தும் அதே நேரத்­தில் முத­லீ­டு­களை நிர்­வ­கிப்­ப­தை­யும் மறந்­து­வி­டக்­கூ­டாது. லாக்­ட­வுன், நிதி
நெருக்­க­டியை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­க­லாம் என்­றா­லும், திட்­ட­மிட்­ட­படி முத­லீ­டு­களை தொடர வேண்­டும்.

கூடு­த­லாக சேமிக்­கும் வாய்ப்பு பெற்­ற­வர்­கள் முத­லீட்டை அதி­க­மாக்க வேண்­டும். போது­மான மருத்­துவ மற்­றும் ஆயுள் காப்­பீடு பெற்­றி­ருப்­ப­தை­யும் உறுதி செய்ய வேண்­டும்.இந்த
நெருக்­கடி ஒவ்­வொரு ரூபா­யும் முக்­கி­யம் என்­பதை உணர்த்­தி­யி­ருப்­பதை மன­தில் கொண்டு செயல்­பட வேண்­டும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
business news
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)