சீனாவிலிருந்து இந்தியாவுக்கு ஆலோசனையில் ஆப்பிள்சீனாவிலிருந்து இந்தியாவுக்கு ஆலோசனையில் ஆப்பிள் ...  முதலீட்டு அறிவு மட்டும் போதாது முதலீட்டு அறிவு மட்டும் போதாது ...
தொழில் அமைப்புகள் ஆடவேண்டிய 6 பந்துகள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 மே
2020
08:49

‘கொரோனா’ பாதிப்பு இல்லாத பகுதிகளில், தொழில் அமைப்புகள் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. மத்திய, மாநில அரசுகளால், நிறைய தளர்வுகள் அறிவிக்கப்படுகின்றன. இனியும், குறிப்பாக, வேளாண், அதை சார்ந்த தொழில்களை முழுமையாக நடத்தாமல் போனால், இந்தியாவில் உணவுப்பற்றாக்குறை வந்துவிடுமோ? என்ற அச்சம் காரணமாக, உணவு உற்பத்தி துறைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.குறிப்பாக, கடந்தாண்டு, நாட்டில் நெல் சாகுபடி சிறப்பாக இருந்தது. அதனால், 25 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதில், 24 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது; அரிசி உற்பத்தியும் அமோகமாக உள்ளது.அதேபோல, தொழில் அமைப்புகள், குறிப்பாக, நடுத்தர, சிறு மற்றும் குறுந்தொழில்கள், கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு மேலும் இயங்காத சூழ்நிலை ஏற்பட்டால், இந்தியாவின் பொருளாதார முதுகெலும்பு முறிந்துவிடும் என்ற அச்சமும் நிலவுகிறது. தொழில் அமைப்புகளுக்கு, நாட்டின் சில பகுதிகளில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.கிட்டதட்ட, 50 நாட்களுக்கு பின், நாட்டு மக்களிடம், பணிக்கு திரும்பும் உற்சாகமும், தொழிலதிபர்களுக்கு, மீண்டும் தொழில்களை இயக்கும் உத்வேகமும் தெரிகிறது. நீண்ட விடுமுறைக்கு பின், தொழில்களை தொடங்குபவர்கள், அடுத்து, அடித்து ஆட வேண்டிய ஆறு பந்துகள் குறித்து பார்ப்போமா?.
பயிற்சி தந்து பணி
பணியாளர் மேலாண்மை: பல சிறு, குறு, நடுத்தர தொழில்கள், தொழில் அமைப்புகள், தங்கள் பணியாளர்களை, வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து வரவழைத்த சூழல் முன்பு நிலவியது. ஊரடங்கு காலத்தில், வெளிமாநில பணியாளர்கள் சொந்த ஊருக்கு திரும்பி சென்றிருப்பர் அல்லது ஊரடங்கு முடிந்ததும், சொந்த ஊருக்கு திரும்பலாம் என்று இருப்பர். மீண்டும் தொழில்களை தொடங்க, சொந்த ஊர் சென்றவர்களை திரும்ப அழைக்க வேண்டும் அல்லது இருப்பவர்களை தக்க வைக்க வேண்டும்.திறன் பெற்ற பணியாளர் இல்லாவிட்டால், ஒரு தொழில் தலைவரின் திட்டமிடல் வீணாகிவிடும். எனவே, வருங்காலங்களில், உள்ளூர், அருகில் உள்ள ஊர்களில் இருப்பவர்களை தேர்வு செய்து, பயிற்சி தந்து பணி வழங்குவது சிறந்த முடிவாக இருக்கும்.

மேலும், தொழில்புரிபவர்கள் எல்லாருக்கும், ‘கொரோனா’ கற்றுத்தந்திருக்கும் ஒரு நம்பிக்கை பாடம் என்னவென்றால், ஊரடங்கால், ஊரே மூடிக்கிடந்தாலும், நமது தொழிலில் டிஜிட்டல் மயமாக்கம் இருக்கும் போது, தொழிலை சிரமமின்றி நடத்த முடியும் என்பது தான். ஊரடங்கின் போதும், பல தொழில் அமைப்புகளும் தங்களை தக்கவைத்துக் கொள்ள, ‘ஜூம்’, ‘வெப்பெக்ஸ்’ மீட்டிங் நடத்தினர்; விவாதித்தனர்; தொடர்பிலேயே இருந்தனர்.தற்போது, டிஜிட்டல் நுட்பம் அவசியமான ஒன்றாகிவிட்டதால், இதுகுறித்த திறன் வளர்த்தல், தொழில் தலைவருக்கும், பணியாளருக்கும் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது.

ஆலோசனை அவசியம்
நிதி மேலாண்மை: ‘கொரோனா’வுக்கு பின் நிறுவனங்களை திறக்கும் தொழிலதிபர்கள், முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சம், நிதி மேலாண்மை. உற்பத்தி தொடக்கம், பொருள் விற்பனை, சந்தை நிலவரம் சீராகி, தொழில் முந்தைய நிலைமைக்கு திரும்பி வரும் வரை, தொழில் அமைப்புகளுக்கு கூடுதல் நிதி தேவைப்படும்.‘கோவிட்’ சிறப்பு கடன் திட்டங்கள், பல்வேறு பொதுத்துறை வங்கிகளிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. கூடுதலாக எந்த செக்யூரிட்டியும் இன்றி, 10 சதவீதம் முதல், 20 சதவீதம் வரை கூடுதல் நடப்பு மூலதனக்கடன் கிடைக்க, வங்கிகளிடம் திட்டங்கள் உள்ளன. தனியார் வங்கிகள் இதுவரை எந்த சிறப்பு திட்டங்களையும் அறிவிக்கவில்லை என்றாலும், ‘வணிக வாடிக்கையாளர்’களின் தேவை அடிப்படையில், கூடுதல் நடப்பு மூலதனக் கடன் வழங்கி வருகின்றனர்.எனவே, உங்கள் தொழில் திட்டத்துக்கு தேவைப்படும் நிதி எவ்வளவு? அதை எவ்வாறு திரட்டுவது என்பது குறித்து, உங்கள் ஆடிட்டரிடம் ஆலோசனை பெறுங்கள். பாதிப்பில் இருந்து மீள, தொழில் அமைப்புகளுக்கு, குறைந்த வட்டியில், நீண்ட காலக்கடன்களே சிறந்தது. அதையும், அதிக வட்டிக்கு வெளியிடங்களில் திரட்டாமல், வங்கிகளிடம் இருந்து பெறுவதே பலன் தரும்.

வட்டி தவிர்க்கலாம்: அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டிய ஜி.எஸ்.டி., டி.டி.எஸ்., போன்ற வரித்தாக்கல் படிவங்களை, உரிய நேரத்தில் சமர்ப்பிப்பது, தொழில் அமைப்புகளின் சுமையை குறைக்கும். ஜி.எஸ்.டி., தாக்கல் தாமதத்துக்கு, 18 சதவீதம் வட்டி என்பதை, 9 சதவீதமாக குறைத்து மத்திய நிதி அமைச்சகம் அறிவித்தது. இருந்தபோதும், உரிய நேரத்தில் வரித்தாக்கல், வரி செலுத்துதல் மேற்கொண்டால், அந்த, 9 சதவீத வட்டித் தொகையையும் மிச்சப்படுத்தலாமே. மற்ற சில நாடுகளில், வரி செலுத்துவதை, வட்டி, அபராதம் இல்லாமல் தள்ளி வைத்திருக்கின்றனர். அதுபோன்ற சமயங்களில், தாமத தாக்கல் குறித்து யோசிக்கலாமே தவிர, வட்டி கட்ட வேண்டிய சூழலில் அதை தவிர்ப்பதே சிறந்தது.
முதல் வெற்றிப்படி
வாடிக்கையாளரை கைவிடேல்: ‘கொரோனா’ பரவிய பின், சந்தை நிலவரங்கள் மாறியுள்ளன. வாடிக்கையாளர்களின் தேவைகள் மாறி இருக்கின்றன. வாடிக்கையாளரின் கோரிக்கைகளை கவனமுடன் பரிசீலிக்க வேண்டும். உணர்ச்சி வசத்தில் எந்த முடிவும் எடுக்கக்கூடாது. லாபம் குறைவாகவோ, முன்பைவிட வேலைப்பளு அதிகமாகவோ இருந்தால்கூட, இந்த இக்கட்டான தொழில் சூழலில், நமது வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்வதே, தற்போதைக்கு தொழில் அமைப்புகளின் முதல் வெற்றிப்படி.

இக்கணம் தேவை சிக்கனம்:
ஒரு ரூபாய் சேமிப்பு என்பது, ஒரு ரூபாய் சம்பாதிப்பதற்கு சமம் என்பார்கள். எனவே, தனி நபர் வாழ்க்கையோ, தொழில் சூழலோ, வரும் காலங்களுக்கான சிக்கன நடவடிக்கைகள் குறித்து சிந்திக்க வேண்டும். அவசிய செலவுகள், அவசியமற்ற செலவுகளை பட்டியலிட வேண்டும். செலவு குறைக்கிறேன் என்று திறன்மிகு பணியாளர்களை இழந்து விடக்கூடாது. நமது பொருள், சேவைகளின் தரத்திலும் சமரசம் செய்து கொள்ள வேண்டாம்.
புதிய வாய்ப்புகள்: ‘கொரோனா’வுக்கு பிறகான உலகத்தில், புதிய வாழ்க்கை முறை மற்றும் பழக்க வழக்கங்கள் மக்களிடம் இருக்கும். புதிய பொருட்களுக்கான தேவைகள், உலக சந்தையில் காத்திருக்கின்றன. உள்ளூர், உலக சந்தையை நாம் உற்று நோக்கினால், புதிய தொழில் வாய்ப்புகளை கண்டறியலாம். எந்த பிரச்னைகள் வந்தபோதும், அதை சாதகமாக்கி, அதில் புதிய வாய்ப்புகளை தேடுபவரே தொழில் தலைவர்.

எல்லாம் இனிதாகும்மத்திய அரசு, தொழில் அமைப்புகளுக்கு இன்னமும் சலுகைகள் அளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன. அதற்கேற்ப அறிவிப்புகள் வரவே, வாய்ப்புகள் உள்ளன. அதற்குமுன், ஆறு அம்சங்களை, ஆறு பந்துகளாக நினைத்து, சிக்சர் அடியுங்கள். ‘கேம் ஓவர்’ என்று நினைக்காமல், இன்னொரு எக்ஸ்ட்ரா ஓவர் கிடைத்திருக்கிறது என்று, மனதில் திடம் கொண்டால், எந்த கடின காலமும், நமக்குஇனிய காலமே!

ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன்
வாசக வணிகர்களே உங்கள் சந்தேகங்களை எழுத வேண்டிய இமெயில்: karthi@gmtax.com

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)