பதிவு செய்த நாள்
20 ஜூன்2020
21:18
புதுடில்லி:உலகில் உள்ள, மிகவும் மதிப்பு வாய்ந்த, 10 பங்குச் சந்தைகள் பட்டியலில், மும்பை பங்குச் சந்தையும் இடம்பெற்றுள்ளது.
உலக பங்குச் சந்தைகள் கூட்டமைப்பு, பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டிருக்கும், அனைத்து நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பை கொண்டு, அதன் அடிப்படையில், பட்டியல் ஒன்றை தயாரித்துள்ளது. அந்த பட்டியலில், முதல் 10 இடங்களில், மும்பை பங்குச் சந்தையும் இடம்பெற்றுள்ளது.மும்பை பங்குச் சந்தை, 1.7 லட்சம் கோடி டாலர் சந்தை மதிப்புடன், பத்தாவது இடத்தை பிடித்துள்ளது.
நியூயார்க் பங்குச் சந்தை, 19.3 லட்சம் கோடி டாலர் மதிப்புடன், முதலிடத்தை பிடித்துள்ளது. நாஸ்டாக் பங்குச் சந்தை, 13.8 லட்சம் கோடி டாலர் மதிப்புடன், இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.டோக்கியோ பங்குச் சந்தை, மூன்றாவதாகவும், ஷாங்காய் பங்குச் சந்தை, 4வது இடத்தையும் பிடித்துள்ளது.லண்டன் பங்குச் சந்தை, 8வது இடத்தை பிடித்துள்ளது. இதன் சந்தை மதிப்பு, 3.2 லட்சம் கோடி டாலர் ஆகும்.
இந்தியாவின் முதல் பங்குச் சந்தை, மும்பை பங்குச் சந்தையாகும். இதில், 5 கோடிக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட முதலீட்டாளர்கள் உள்ளனர். இதன், ‘சென்செக்ஸ்’ குறியீடு, நிதி வல்லுனர்கள் முதல் சில்லரை முதலீட்டாளர்கள் வரை, அனைத்து தரப்பினராலும் மிகவும் கவனிக்கப்பட்டு வரும் குறியீடாகும்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|