பாலைச் சுரக்க விட்டு, பின் கறங்களேன்! பாலைச் சுரக்க விட்டு, பின் கறங்களேன்! ...  வைப்பு நிதி முதலீட்டில்   அறிய வேண்டிய இடர்கள் வைப்பு நிதி முதலீட்டில் அறிய வேண்டிய இடர்கள் ...
ஓய்வு கால பலன் பாதிப்பை சரி செய்வது எப்படி?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2020
01:12

ஊதிய குறைப்பு, உடனடி பாதிப்பை ஏற்படுத்துவதோடு, ஓய்வு கால, பணிக்கொடை பலன்களையும் பாதிக்கும் என்பதை அறிந்து செயல்பட வேண்டும்.

கொரோனா பரவலை தடுக்க அமல் செய்யப்பட்ட லாக்டவுன் பரவலாக ஏற்படுத்தியுள்ள பாதிப்பை சமாளிப்பதற்காக, வர்த்தக நிறுவனங்கள் ஆட்குறைப்பு மற்றும் சம்பள குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த சோதனையான நேரத்தில் வேலையை இழப்பதோ அல்லது சம்பளம் குறைக்கப்படுவதோ மேலும் சிக்கலை ஏற்படுத்தும்.


வேலை இழந்தவர்கள் புதிதாக வேலை தேடுவது சவாலானது என்றால், ஊதிய குறைப்புக்கு உள்ளானவர்கள் குடும்ப பட்ஜெட்டை சமாளிக்க முடியாமல் திண்டாடலாம். எனினும், ஊதிய குறைப்பு ஏற்படுத்தக்கூடிய நீண்ட கால பாதிப்பையும் மனதில் கொள்ள வேண்டும்.

ஊதிய குறைப்பு


திடீர் ஊதிய குறைப்பின் பாதிப்பை சமாளிக்க செலவுகளை குறைப்பது போன்ற வழிகளை நாட வேண்டியிருக்கும். அதே நேரத்தில், ஊதிய குறைப்பு, பி.எப்., பலன் மற்றும் கிராஜுவட்டி எனப்படும் பணிக்கொடை பலன்களையும் பாதிக்கும் என்பதை அறிய வேண்டும். இந்த இரண்டுமே நீண்ட கால பலன்களாகும். இவை, அடிப்படை சம்பளத்தை ஆதாரமாக கொண்டிருப்பதால் ஊதிய குறைப்பு இவற்றின் பலனையும் பாதிக்கும்.

வருங்கால சேமநல நிதியான பி.எப்., திட்டத்தின் கீழ், ஊழியர்களின் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படிக்கு ஏற்ப, 12 சதவீத தொகை மாதந்தோறும் பிடித்தம் செய்யப் படுகிறது. இதற்கு நிகரான தொகையை நிறுவனம் செலுத்தும். இந்த தொகை மெல்ல வளர்ந்து ஓய்வு காலத்தில் கைகொடுக்கும்.

இந்நிலையில், திடீரென ஊதியம் குறைக்கப்படுவது, பி.எப்., கணக்கில் செலுத்தப்படும் தொகையிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.நிறுவனங்கள் சம்பளத்தை கணக்கிட உரிய வழிமுறையை பின்பற்றுகின்றன. அடிப்படை சம்பளம், படிகள் என, பல்வேறு அம்சங்கள் சம்பளத்தில் அடங்கும்.நீண்ட கால பாதிப்புஊதியம் குறைக்கப்படும் போது, அதற்கேற்ப அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி குறைக்கப்படும்.


உதாரணமாக, 20 சதவீதம் அளவுக்கு அடிப்படை ஊதியம், படிகள் குறைக்கப்பட்டால், அதே அளவு பி.எப்., தொகை பிடித்தம் செய்யப்படுவது குறையும்.பி.எப்., திட்டத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகைக்கு வட்டி உண்டு. இது கூட்டு வட்டி முறையில் சேர்ந்து நீண்ட கால அடிப்படையில் நல்ல பலனை அளிக்கிறது. ஊதிய குறைப்பு காரணமாக, பி.எப்., பங்களிப்பு குறைவதால், இதில் சேரும் தொகையும் குறைந்து, ஓய்வு காலத்தில் கையில் கிடைக்கும் தொகை குறையும்.


இதேபோல, பணிக்கொடை தொகையும், அடிப்படை சம்பளம் கொண்டு கணக்கிடப்படுவதால், ஊதிய குறைப்பு இந்த பலனையும் பாதிக்கும்.இந்த பாதிப்பை சரிசெய்ய, நிறுவனத்துடன் பேசிப்பார்த்து, அடிப்படை சம்பளம் அதிகம் பாதிக்கப்படாமல், ஒட்டுமொத்த நோக்கில் குறைப்பை மேற்கொள்ள வழியிருக்கிறதா என, கேட்டு பார்க்கலாம்.


பி.எப்., பங்களிப்பில் துண்டு விழும் தொகையை ஈடு செய்யும் வகையில், வி.பி.எப்., எனப் படும் விரும்பி பங்களிப்பு செலுத்தும் வசதி மூலம் தொகையை செலுத்தும் வாய்ப்பை பரிசீலிக்கலாம். ஆனால், இதற்கு குடும்ப பட்ஜெட் இடம் கொடுக்க வேண்டும். நிலைமை சீராகி, ஊதியம் பழைய நிலைக்கு வரும் போது, இந்த பாதிப்பு குறையலாம் என்றாலும், ஓய்வு கால பலன் பாதிப்பை சீராக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள உறுதி கொள்ள வேண்டும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)