சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் விலை குறைப்புசாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் விலை குறைப்பு ... சீன பொருட்கள் புறக்கணிப்பில் எல் அண்டு டி நிறுவனம் சீன பொருட்கள் புறக்கணிப்பில் எல் அண்டு டி நிறுவனம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
சாத்தியமா, வருமான வரி நீக்கம்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2020
12:29

அரசை நடத்துவதில் பெரும்பங்கு வகிப்பது, வரி வருவாய். இந்திய அரசின் வருவாயை பெருக்குவதில், இரு துறைகள் முன்னணியில் உள்ளன. ஒன்று, மத்திய நேரடி வரி வாரியம். இது, வருமான வரியை வசூலித்து தருகிறது. மற்றொன்று, ஜி.எஸ்.டி., கவுன்சிலின் ஆலோசனைப்படி மறைமுக வரியான ஜி.எஸ்.டி.,யை வசூலித்து தருகிறது.
வேண்டாம் ஐ.டி.,
மத்திய நேரடி வரி வாரிய (சி.பி.டி.டி.,) தலைவர் பிரமோத் சந்திர மோடி, ஈஷா நிறுவனர் சத்குருவிடம் சமீபத்தில் உரையாடினார். அப்போது அவர், ''வருமான வரி செலுத்துவோரின் சிரமங்களை குறைக்க, அரசு பல முயற்சிகள் எடுத்து வருகிறது. ஆனால், அரசு மற்றும் மக்கள் இடையே நம்பிக்கை குறைவு ஏற்படுகிறதே? அதை எப்படி போக்குவது?'' என்றார்.சத்குரு அளித்த பதிலில், ''நாட்டில், குறைந்த சதவீத மக்கள் தான், வருமான வரி கட்டுகின்றனர். அப்படி வரி கட்டும் தங்களுக்கு, அரசிடமிருந்து எந்த பயனும் இல்லை என்று, அவர்கள் நினைக்கின்றனர். தேசத்தை கட்டுமானம் செய்வது என்பது, வருமான வரி அதிகப்படுத்துவதில் இல்லை; முதலீடுகளை அதிகரிக்க வேண்டும். வருமான வரியை முற்றிலும் நீக்கிவிட்டு, மாற்று ஏற்பாடாக, பண பரிவர்த்தனைகளுக்கு வரி போட வேண்டும். வருமான வரி நடைமுறையை நீக்கினால், நாட்டில் பணப்புழக்கம் அதிகரிக்கும். மக்கள் செலவு செய்வதும் அதிகமாகும்,'' என்றது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின், 'ஹார்வர்டு' பல்கலையில், பொருளாதாரம் பயின்ற தமிழர், டில்லி ஐ.ஐ.டி.,யில் கணித பொருளாதார பேராசிரியர், திட்டக்கமிஷன் உறுப்பினராக அனுபவம் பெற்ற, டாக்டர் சுப்ரமணியன் சுவாமி போன்றவர்கள் கூட 'வருமான வரி நடைமுறையை அறவே நீக்க வேண்டும்' என்று, நீண்டகாலமாக குரல் கொடுத்து வருகின்றனர்.ஆனால், இது சாத்தியமா என்பதை நாம் பார்ப்போம்.

சர்வதேச அளவில், வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள், ஏழை நாடுகள் என்ற பாகுபாடின்றி, 95 சதவீத நாடுகளில், வருமான வரி நடைமுறை அமலில் உள்ளது. எண்ணை வளம் மிக்க வளைகுடா நாடுகள் மற்றும் 'வரி சொர்க்க' நாடுகள் என்று அழைக்கப்படும், மொரிஷியஸ், சைப்ரஸ், கேமன் தீவு, பகாமா போன்ற இயற்கை வளம் மிக்க குட்டி நாடுகள் சிலவற்றில் தான், வருமான வரி என்ற நடைமுறை இல்லை. அந்த நாடுகளின் வாயிலாக கம்பெனிகளை பதிவு செய்து, மற்ற நாடுகளில் முதலீடு செய்தால், மூலதன லாப வரி, டிவிடண்ட்க்கான வரி இல்லை.

இதனால், பல நாடுகளிலிருந்து முதலீடு செய்பவர்கள், வரி சொர்க்க நாடுகள் வாயிலாக கம்பெனி ஏற்படுத்தி, இந்தியா போன்ற நாடுகளில் முதலீடு செய்கின்றனர். வரி சொர்க்க நாடுகளுக்கான வருமானம், இந்த பரிவர்த்தனை மற்றும் கம்பெனிகள் வாயிலாக கிடைக்கும் சேவை கட்டணங்களே.செலவு வரி சரி வருமாசத்குரு கூறியது போலவே, நிபுணர்கள் சிலரும், வருமான வரி முறையை நீக்க வேண்டும்; அதற்கு மாற்று ஏற்பாடாக, பொதுமக்களின் வங்கி பரிவர்த்தனைகள் மீது, ஒரு சதவீதம் வரி விதிப்பு செய்யலாம் என்றும் யோசனை சொல்கின்றனர். அதை சுருக்கமாக, 'செலவு வரி' என்றுகூட கொள்ளலாம். இப்படி செய்வதன் வாயிலாக, மத்திய அரசுக்கு, ஆண்டுக்கு, 20 லட்சம் கோடிக்கு மேல் வரி வருவாய் வரும் என்று கணிக்கின்றனர். அது, வருமான வரியால் கிடைக்கும் வருவாயை விட அதிகம்.

வருமான வரி விதிப்பு நடைமுறை நீக்கம் என்பது, அனைவருக்கும் சந்தோஷம் அளிக்கக்கூடிய அம்சம்தான். அது சாத்தியமாவது, அவ்வளவு எளிதல்ல. அதேசமயம், வருமான வரிக்கு மாற்றாக முன்வைக்கப்படும் மாற்று திட்டமான செலவு வரி அமைப்பின் சவால்கள் என்ன?தற்போதுள்ள வருமான வரி விதிப்பு நடைமுறை, ஒரு முற்போக்கான வரி விதிப்பு முறை எனலாம். ஏனென்றால், அதிக வருமானம் பெறுபவர்கள், அதிக வரியும், குறைந்த வருமானம் பெறுபவர்கள் குறைந்தளவிலான வரியும் மட்டும் செலுத்த வேண்டும். ஆனால், செலவு வரி என்பது, அனைத்து தரப்பு மக்களும், ஒரே மாதிரி வரி செலுத்த வேண்டி வரும். இதனால் ஏழைகள், ஏழைகளாகவும், பணக்காரர்கள் பணக்காரர்களாகவுமே இருப்பார்கள் என்று, ஒரு சாரார் கருத்து தெரிவிக்கின்றனர்.

மேலும், வருமான வரிச் சட்டப்படி, தற்போது, குறிப்பிட்ட அளவுக்கு மேல் ரொக்கமாக, கொள்முதல், செலவு அல்லது கடனாக பெற, தருவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. வருமான வரி நடைமுறை ரத்து செய்யப்பட்டால், பண பரிவர்த்தனைகளை,வங்கி வாயிலாக செயல்படுத்துவது எப்படி என்பது வருமான வரித்துறை முன் இருக்கும் கேள்வி.வருமான வரி வசூலிப்பு நடைமுறை என்பது, நாட்டுக்கு வருவாய் ஈட்டும் நோக்கத்துக்காக மட்டும் செயல்படுத்தப்படுவதில்லை. தீவிரவாதிகள், தேசவிரோத சக்திகளின் பண பரிமாற்றங்களை கண்காணித்து தேச பாதுகாப்பிலும், வரித்துறை முக்கிய அங்கம் வகித்து வருகிறது. மாற்றுத்திட்டம் வரும்போது, இவற்றையெல்லாம் எப்படி செயல்படுத்தும் என தெரியவில்லை.

விவாதிப்பது அவசியம்
பிரதமர் மோடியின் ஆட்சியில், 70 வருடங்களுக்கும் மேலாக நடைமுறையில் இருந்த பல பழைய சட்டங்கள், நடைமுறைகள் மாற்றப்பட்டுள்ளன. வரித்துறைகளில், பல அதிரடி சீர்திருத்தங்கள் வந்துள்ளன. அதுபோல், வருமான வரி நடைமுறைகளிலும் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால், அதற்கான மாற்று ஏற்பாடுகள் குறித்த ஆய்வுகளையும், விவாதங்களையும் தொடங்க வேண்டிய நேரமிது. 95 சதவீத நாடுகள், இன்றும் வருமான வரியை முக்கிய வருவாயாக வைத்திருக்கும் நடைமுறையில், அதிலிருந்து நாம் புதிய பாதையில் பயணிக்க யோசிக்கும் முன், தீர விவாதிப்பது அவசியம். அதுவரை, வரி செலுத்தும் வரிதாரர்களின் கருத்துக்களையும், மன சங்கடங்களையும், மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். வீட்டு வாடகை, கல்விக்கட்டணம், பெற்றோருக்கான மருத்துவ கட்டணம், வீட்டுக்கடன், இன்சூரன்ஸ், முதலீடு, சேமிப்பு, நன்கொடை போன்றவற்றுக்கு வருமான வரியில் விலக்கு அளிக்கப்பட்டாலும், வரி செலுத்துவோருக்கு, அரசிடம் இருந்து ஒரு சிறு அங்கீகாரம், கவுரவம், சலுகைகள், முன்னுரிமை கிடைக்கச் செய்வதை உறுதிபடுத்த வேண்டும் என்று, வரிதாரர்கள் விரும்புகின்றனர்.

வருமான வரி செலுத்துபவர்களை, வங்கிகளில் கடன் வழங்கும்போது முன்னுரிமை, ரயில், விமான டிக்கெட்டுகள் பெறும்போது முன்னுரிமை, அரசின் நடைமுறைகளில் முன்னுரிமை வழங்கி கவுரவப்படுத்தலாம். அதன்மூலம், வரிசெலுத்துவோர் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. மேலும், தொழில் செய்பவர்கள் அனைவருமே வரி ஏய்ப்பு செய்பவர்கள் என்ற அரசின் பார்வையை மாற்ற வேண்டும் என்று தொழிலதிபர்கள் பலரும் கருதுகின்றனர்.மன மகிழ்ச்சியுடன் தரப்படும், பெறப்படும் வரிப்பணமே, தேசத்தையும், தேசத்தின் மீதான நேசத்தையும் வளப்படுத்தும்.

வரியே வளர்ச்சி
கடந்த, 2018 கணக்குப்படி, 'இந்தியாவில், சுமார், 6 சதவீதம் பேர் வருமான வரி செலுத்துகின்றனர். 2019-20 வரி மதிப்பீட்டு ஆண்டில், சுமார் 5.46 கோடி வருமான வரி தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இது, முந்தைய ஆண்டை விட, 4 சதவீதம் அதிகம். நாட்டின் ஜி.டி.பி.,யில் வருமான வரியின் பங்கு, 16 சதவீதம் என்கிறது, புள்ளி விவரங்கள்.


ஜி.கார்த்திகேயன்

வாசக வணிகர்களே உங்கள் சந்தேகங்களை எழுத வேண்டிய இமெயில்: karthi@gkmtax.com

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்
business news
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில் முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
business news
மேற்கோள் ஜூன் 23,2020
மேம்பட்ட நிதி அமைப்பு மற்றும் துடிப்பான வர்த்தக சூழல் காரணமாக உக்ரைன் போர் போன்ற சர்வதேச நெருக்கடிகளின் ... மேலும்
business news
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்
business news
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)