பதிவு செய்த நாள்
25 ஜூன்2020
22:12
புதுடில்லி:நுகர்பொருள் விற்பனை துறையில் முன்னனி நிறுவனமான, எச்.யு.எல்., எனும், 'ஹிந்துஸ்தான் யுனிலீவர்' நிறுவனம், அதன் தயாரிப்புகளில் ஒன்றான, 'பேர் அண்டு லவ்லி'யின் பெயரை மாற்ற இருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்நிறுவனத்தின் சரும பராமரிப்பு தயாரிப்புகளில் பிரபலமான ஒன்று, பேர் அண்டு லவ்லி. இதில், 'பேர்' எனும் வார்த்தையை நீக்கிவிடப் போவதாக அறிவித்துள்ளது.மேலும், இந்நிறுவனம் இனி, பேர் எனும் வார்த்தையை பயன்படுத்துவதை நிறுத்திவிடப் போவதாகவும் தெரிவித்துள்ளது. இது, வழக்கமான பிராண்டு பெயர் மாற்ற நடைமுறையில் ஒன்று தான் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும், புதிய பெயருக்கு, கட்டுப்பாட்டு அமைப்புகளின் அனுமதிக்காக காத்திருப்பதாகவும், அனுமதி கிடைத்ததும் புதிய பெயர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|