'பேர் அண்டு லவ்லி'யில் 'பேர்' வார்த்தை நீக்கம்'பேர் அண்டு லவ்லி'யில் 'பேர்' வார்த்தை நீக்கம் ...  'விவாஷ்' பிராண்டு எச்.யு.எல்., வசமானது 'விவாஷ்' பிராண்டு எச்.யு.எல்., வசமானது ...
எந்த நாட்டு பொருள்: தீவிரம் காட்டும் அரசு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2020
22:23

புது­டில்லி:‘ஆன்­லைன் வர்த்­தக நிறு­வ­னங்­கள், அவை விற்­கும் பொருட்­கள், எந்த நாட்டு
நிறு­வ­னத்­தால் தயா­ரிக்­கப்­பட்­டது என்ற தக­வலை குறிப்­பிட வேண்­டும்’ என, உள்­நாட்டு
வர்த்­த­கர்­ அமைப்­பு­ கள் கோரி வரு­கின்­றன.

இதை­ய­டுத்து, ஆன்­லைன் வர்த்­தக நிறு­வ­னங்­க­ளின் பிர­தி­நி­தி­களை, தொழில்­துறை மேம்­பாடு மற்­றும் உள்­நாட்டு வர்த்தக துறை­யின் அதி­கா­ரி­கள் சந்­தித்­த­னர்.இந்த சந்­திப்­பில், ‘அமே­சான், பிளிப்­கார்ட், ஸ்நாப்­டீல், பெப்­பர்­பிரை, ஈ – பே’ உள்­ளிட்ட பல நிறு­வ­னங்­க­ளின் பிர­தி­நி­தி­கள் கலந்து கொண்­ட­னர்.

அகில இந்­திய வர்த்­த­கர்­கள் சங்­கத்­தின் கூட்­ட­மைப்­பான, சி.ஏ.ஐ.டி., ‘ஒவ்­வொரு மின்­னணு வர்த்­தக நிறு­வ­ன­மும், அவை விற்­கும் பொருட்­கள், எந்த நாட்­டின் தயா­ரிப்பு என்­பது குறித்த தக­வலை கண்­டிப்­பாக வழங்க வேண்­டும். அப்­ப­டிச் செய்­தால், நுகர்­வோர் முடி­வெ­டுக்க வச­தி­யாக இருக்­கும்’ என, வர்த்­த­கம் மற்­றும் தொழில்­துறை அமைச்­சர் பியுஷ் கோய­லி­டம் கோரிக்கை வைத்­தது.


இது குறித்து, அமைச்­சக அதி­காரி ஒரு­வர் கூறி­ய­தா­வது:பெரும்­பா­லான மின்­னணு வர்த்­தக நிறு­வ­னங்­கள், சீன பொருட்­க­ளை­யும் விற்­பனை செய்து வரு­கின்­றன. ஆனால், அது குறித்து நுகர்­வோ­ருக்கு எது­வும் தெரி­வ­தில்லை. அண்­மை­யில், அரசு கொள்­மு­தல் இணை­ய­தளம் மூலம், பொருட்­களை விற்­பனை செய்­யும் விற்­ப­னை­யா­ளர்­கள், பொருட்­கள் எங்கு தயா­ரிக்­கப்­பட்­டது என்­பது குறித்து கண்­டிப்­பாக தெரி­விக்க வேண்­டும் என,உத்­த­ர­வி­டப்­பட்­டுஉள்­ளது.


இப்­போது, அடுத்த கட்ட ஆலோ­சனை நடை­பெற்­றது.காணொலி மூல­மான இந்த கூட்­டத்­தில் கலந்­து­கொண்ட பல நிறு­வ­னங்­கள், இத்­த­கைய தக­வல்­களை வழங்க தயா­ராக இருப்­ப­தா­க­வும்; ஆனால், கால அவ­கா­சம் தேவை என­வும் கேட்­டுக்­கொண்­டன.

மேலும், விற்­ப­னை­யா­ளர்­க­ளி­ட­மும் அரசு இது குறித்து பேசி, அவர்­க­ளது கருத்­துக்­க­ளை­யும் அறிந்து­ கொள்­வது அவ­சி­யம்என, ஆலோ­சனை தெரிவித்­தன.இவ்­வி­வ­கா­ரம் குறித்து,
இன்­னும் ஒரு சந்­திப்பு நடை­பெற இருக்­கிறது. அநே­க­மாக, ஜூலை மாதத்­தில் இக்­கூட்­டம் நடை­பெ­றக் கூடும்.இவ்­வாறு அவர் கூறினார்.


இக்­கூட்­டத்­தில் கலந்து கொண்ட, ’பேடி­எம் மால்’ நிறு­வ­னத்­தின் அதிகா­ரப்­பூர்வ பேச்­சா­ளர்
கூறி­ய­தா­வது:அர­சின் இந்த முடிவை நாங்­கள் முழு­மை­யாக வர­வேற்­கி­றோம். இந்­தி­யா­வில் தயா­ரா­கும் பொருட்­களை விற்­ப­தில், அதிக ஆர்­வத்­து­டன் இருக்­கி­றோம்.மேலும், எங்கு
தயா­ரிக்­கப்­பட்­டது என்­பது குறித்த விவ­ரங்­களை வெளி­யி­டு­வது குறித்து, எங்­கள்
விற்­ப­னை­யா­ளர்­கள், வணி­கர்­க­ளு­டன் ஏற்­க­னவே பேச்சு நடத்த துவங்கி விட்­டோம்.இவ்­வாறு அவர் கூறி­னார்.


சீனா­வில் சிக்­கல்


இந்­தி­யா­வி­லி­ருந்து ஏற்­று­மதி செய்­யப்­பட்ட சரக்­கு­களை, ஹாங்­காங்­கில், சீன சுங்­க­வ­ரிதுறை­யி­னர் தாம­தப்­ப­டுத்தி வரு­கி­றார்­கள் என, சில ஏற்­று­ம­தி­யா­ளர்­கள் கவலை தெரி­வித்­துஉள்­ள­னர்.இது குறித்து, ’எப்.ஐ.இ.ஓ.,’ எனும், இந்­தியஏற்­று­மதி நிறு­வ­னங்­க­ளின் கூட்­ட­மைப்­பின்தலை­வர் எஸ்.கே.சராப் கூறி­யி­ருப்­ப­தா­வது:

சென்­னை­யில், சுங்க அதி­கா­ரி­கள், சீன இறக்­கு­மதி பொருட்­களை தீவிர பரி­சோ­த­னைக்கு
உட்­படுத்­து­வ­தாக தக­வல்­கள் வரு­கின்­றன. இத­னை­யடுத்தே, ஹாங்­காங்­கில், இந்­திய
சரக்­கு­களை, சீன சுங்­கத் துறை­யி­னர் தாம­தப்­ப­டுத்­து­வ­தாக தெரி­கிறது என, சில ஏற்­று­ம­தி­யா­ளர்­கள் எங்­க­ளி­டம் தெரி­வித்­துள்­ள­னர்.சீன இறக்­கு­மதி பொருட்­களை தீவி­ர­மாக
பரி­சோ­திப்­பது தொடர்­பாக, சுங்­கத் துறைக்கு அதி­கா­ரப்­பூர்வ­மாக ஏதா­வது தெரி­விக்­கப்­பட்­டு உள்­ளதா என்­பது குறித்து ஆரா­யு­மாறு வேண்டி, மத்­திய வர்த்­தக அமைச்­ச­கத்­துக்கு கடி­தம் கொடுக்­ப்­பட்­டுள்­ளது.இவ்­வாறு அவர் கூறி­யுள்­ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)