பதிவு செய்த நாள்
26 ஜூன்2020
22:27
சென்னை:ஹூண்டாய், ‘வென்யூ’ கார் அறிமுகம் செய்யப்பட்ட ஓராண்டில், ஒரு லட்சத்திற்கும் அதிகமான கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக, ‘ஹூண்டாய் மோட்டார் இந்தியா’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:ஹூண்டாய் நிறுவனம், 2019ல், வென்யூ எனும், எஸ்.யூ.வி., காரை அறிமுகம் செய்தது. இந்த கார், நவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டது.இது, 2019 – 20ம் ஆண்டில், இந்தியாவின் மிகச் சிறந்த காராக தேர்வு செய்யப்பட்டது. அறிமுகம் செய்யப்பட்ட ஓராண்டில், ஒரு லட்சத்திற்கும் அதிகமான கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவில், 97 ஆயிரத்து, 400 கார்களும்; வெளிநாடுகளில், 7,400 கார்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஜனவரி முதல், மே வரை, 24 ஆயிரம் கார்கள் விற்பனையாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|