பதிவு செய்த நாள்
30 ஜூன்2020
22:49
திருப்பூர்:இறக்குமதி – ஏற்றுமதி குறியீடு வழங்குதல் உட்பட பல்வேறு சேவைகளை,
வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் (டி.ஜி.எப்.டி.,) ‘டிஜிட்டல்’ தளம் வாயிலாக வழங்க உள்ளது.வெளிநாட்டு வர்த்தக சேவைகளுக்கு உதவும் வகையில், ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தின் ஒரு பகுதியாக, www.dgft.gov.in என்ற இணையதளம் வாயிலாக பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு
வருகின்றன.இறக்குமதி – ஏற்றுமதி குறியீடு (ஐ.இ.சி.,) வழங்குதல், மெய்நிகர் உதவியாளர் துணையுடன் மாற்றம் மற்றும் திருத்த நடைமுறைகளை மேற்கொள்ளுதல் போன்றவற்றை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதிகாரிகள் கூறுகையில், ‘மூலதனப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாடு தொடர்பானவை,
டிஜிட்டல் தளத்திலேயே மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். வரும், 13ம் தேதி இது தொடர்பான விபரங்கள், இணையதளம் வாயிலாக, வர்த்தக அமைப்பினருக்கு விளக்கப்படும்.
‘இச்சேவைகளைப் பயன்படுத்துபவர்கள், தங்களுக்கான கடவுச் சொல்லைப் பயன்படுத்தி, டிஜிட்டல் தளத்துக்குள் நுழைய முடியும்’ என்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|