பதிவு செய்த நாள்
04 ஜூலை2020
22:44

புதுடில்லி:சென்னை உள்ளிட்ட, நாட்டின் முக்கியமான ஏழு நகரங்களில், அலுவலக இடத்தை குத்தகைக்கு விடுவது, கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலத்தில், 36 சதவீதம் சரிவைக் கண்டுள்ளதாக, ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான, ‘காலியர்ஸ் இன்டர்நேஷனல் இந்தியா’ தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: நாட்டின் உள்ள முக்கிய மான ஏழு நகரங்களில், மொத்தம், 1.67 கோடி சதுர அடி இடத்தை மட்டுமே குத்தகை அல்லது வாடகைக்கு அலுவலகங்கள் எடுத்து உள்ளன. இதற்கு, கொரோனா தொற்று அதிகரித்து வருவதும், பொருளாதார வளர்ச்சி சரிவும், இடத்தை எடுத்துக் கொள்வது குறித்த முடிவுகள் எடுப்பதில் தாமதங்கள் ஏற்படுவதும், முக்கிய காரணங்களாக அமைந்து உள்ளன.
சென்னையைப் பொறுத்தவரை, 36 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது. இங்கு, மொத்தம், 17 லட்சம் சதுர அடி இடம் மட்டுமே, மதிப்பீட்டு காலத்தில் குத்தகைக்கு விடப்பட்டு உள்ளது. ஐதராபாதில், 62 சதவீதம் அளவுக்கும்; தலைநகர் டெல்லி மற்றும் அதன் பிராந்திய பகுதிகளில், 27 சதவீதமும்; பெங்களூரில், 33 சதவீதமும் சரிந்து உள்ளது. மும்பையில், 53 சதவீதமும்; புனேவில், 18 சதவீதமும் சரிவு காணப்பட்டுள்ளது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|