பதிவு செய்த நாள்
20 ஜூலை2020
22:18

சென்னை:கடந்த,2018 – -19ம் நிதியாண்டுக்கான, வருமான வரி கணக்கு தாக்கல், வரும், 31ம் தேதியுடன் நிறைவடைகிறது.
கடந்த, 2018 – 19ம் நிதியாண்டுக்கான, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது, 2019 ஏப்.,லில் துவங்கியது. ஆண்டுக்கு, 2.5 லட்சம் ரூபாய் உச்ச வரம்பை தாண்டும் அனைவரும், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.வரி ஆதாய நடவடிக்கையில் ஈடுபட்டு, வருமான வரி உச்ச வரம்புக்கு கீழ் வந்தாலும், கணக்கு தாக்கல் என்பது, 2018 முதல் கட்டாயமாக்கப் பட்டது. அபராதம் செலுத்தி, கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், மார்ச், 31ம் தேதி உடன் முடிவடைந்தது.
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதால், இந்த அவகாசம், 31 வரை நீட்டிக்கப்பட்டது.இது குறித்து, வருமான வரி அதிகாரிகள் கூறியதாவது:2018 --– 19ம் நிதியாண்டுக்கான, கணக்கை தாக்கல் செய்வதற்கான அவகாசம், 31ம் தேதியுடன் நிறைவடைகிறது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, இந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இதற்குள் கணக்கு தாக்கல் செய்யத் தவறினால், மீண்டும் தாக்கல் செய்ய முடியாது. 2019 – -20ம் நிதியாண்டின், அபராதமின்றி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், நவம்பர் வரை வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|