மூன்று ஆண்டுகளில் ஜி.எஸ்.டி., சாதனை மூன்று ஆண்டுகளில் ஜி.எஸ்.டி., சாதனை ...  பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் 20.15 லட்சமாக அதிகரிப்பு பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் 20.15 லட்சமாக அதிகரிப்பு ...
கொரோனாவிலும் இயல்பாக இயங்கும் நிறுவனங்கள் உலகளவில் இரண்டாவது இடத்தில் இந்தியா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2020
23:20

புதுடில்லி:பல இந்திய நிறுவனங்கள், கொரோனா தாக்கத்தை மீறி, இயல்பாக செயல்படுவதாகவும், அவை கூடுதலான ஆயத்தங்களுடனும், எதிர்கால திட்டங்களுடனும் செயல்பட்டு வருவதாகவும், எச்.எஸ்.பி.சி., ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின்போது, இந்திய நிறுவனங்களில் கிட்டத்தட்ட பாதி நிறுவனங்கள், அதாவது, 46 சதவீத நிறுவனங்கள், தாங்கள் தொற்றுநோயால் மிக அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பதை உணர்ந்திருப்பதாக தெரிவித்துள்ளன. தயார் நிலைஇருப்பினும், பாதிக்கும் மேற்பட்ட நிறுவனங்கள், அதாவது, 54 சதவீத நிறுவனங்கள், தங்களால் இயன்றவரை அதற்கு தயாராக இருந்ததாகவும் தெரிவித்துள்ளன.

ஆய்வு மேற்கொண்ட அனைத்து நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்த சதவீதம், இரண்டாவதாக அதிகமாகும். மற்ற அனைத்து நாடுகளின் சராசரி, 45 சதவீதம் தான். உலகளவில், 14 சந்தைகளில் உள்ள, 2,600 நிறுவனங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. இந்தியாவிலிருந்து, 200 நிறுவனங்கள் ஆய்வில் பங்கேற்றன.

கொரோனாவால், இந்திய நிறுவனங்கள் கடுமையான தாக்கத்தை எதிர்கொண்ட போதிலும், 29 சதவீத நிறுவனங்கள், இயல்பான நிலையிலேயே தொடர்ந்து செயல்பட்டு வருவதாக தெரிவித்தன.உலகளவில், சீனா மெயின்லேண்டில் இருக்கும் நிறுவனங்களுக்கு அடுத்து, அதிகளவில், இந்திய நிறுவனங்கள் தான், இயல்பான நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளன.

இருப்பினும், 2 சதவீத இந்திய நிறுவனங்கள், நீண்ட காலம் நீடிப்பது குறித்த அச்சத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளன.தொழிலாளர்கள்அதேசமயம், 64 சதவீத இந்திய நிறுவனங்கள், தற்போதைய சூழலில், தங்களின் தயாரிப்புகள் அல்லது சேவைகளில் சாதகமான மாற்றங்களை காண்பதாக தெரிவித்துள்ளன.

இத்தகைய நேர்மறை எண்ணங்களில், சீனாவை பின்னுக்குத் தள்ளி, முதலிடத்தை இந்தியா பிடித்துள்ளது.மேலும், இந்தியாவை பொறுத்தவரை, வாடிக்கையாளர் தேவையில் சாதகமான மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாக, 60 சதவீதம் நிறுவனங்களும், நிதி வசதிகள் பெறுவது எளிதாகி இருப்பதாக, 62 சதவீத நிறுவனங்களும் தெரிவித்துள்ளன.

இருப்பினும், போதுமான தொழிலாளர்கள் கிடைக்கிறார்களா என்பதில், 53 சதவீதம் அளவுக்கே நம்பிக்கை தெரிவித்துள்ளன. 25 சதவீதம் நிறுவனங்கள், தற்போதைய நிலையில், இது குறித்து எதிர்மறை எண்ணத்துடனே இருக்கின்றன. உலகளவில், சீனா மெயின்லேண்டில் இருக்கும் நிறுவனங்களுக்கு அடுத்து, அதிகளவில், இந்திய நிறுவனங்கள் தான், இயல்பான நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளன

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
அதிகரிக்கும் போலியான மதிப்பீடுகள்மின்னணு வர்த்தக தளங்களில், பொருட்கள் குறித்த போலியான மதிப்பீடுகள், ... மேலும்
business news
புதுடில்லி–நடப்பு ஆண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8.8 சதவீதமாக இருக்கும் என, ‘மூடிஸ் இன்வெஸ்டார்ஸ் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து, ஜி.எஸ்.டி., விகித அடுக்குகளை மாற்றி ... மேலும்
business news
புதுடில்லி : இந்திய அரசு மும்பை பங்குச் சந்தையில் வோடபோன் ஐடியா லிமிடட்(விஐஎல்)-ன் அதிக பங்குகளை வாங்க ... மேலும்
business news
கோல்கட்டா : இந்தியாவின் மிகப்பெரிய நிலக்கரி தயாரிப்பு பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா, இந்த ஆண்டின் கடைசி ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)