நாட்டின் மின்னணு உற்பத்தி 30 சதவீதம் வளர்ச்சி காணும் நாட்டின் மின்னணு உற்பத்தி 30 சதவீதம் வளர்ச்சி காணும் ...  ஓராண்டு இறக்குமதிக்கு நிகராக அன்னிய செலாவணி இருப்பு ஓராண்டு இறக்குமதிக்கு நிகராக அன்னிய செலாவணி இருப்பு ...
சாம்சங் கேலக்ஸி நோட் 20 மற்றும் நோட் 20 அல்டரா போன்களின் விலை என்ன தெரியுமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஆக
2020
11:17

உலக மொபைல் போன் சந்தையில் முக்கிய இடத்தை பிடித்துள்ள சாம்சங் நிறுவனம், தொடர்ந்து பல அருமையான ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் முதன்மை மாடல்களான கேலக்ஸி நோட் ரக போன்களின் வரிசையில் இப்போது வருகிறது 5ஜி தொழில்நுட்பத்தில் இயங்க கூடிய சாம்சங் கேலக்ஸி நோட் 20 மற்றும் நோட் 20 அல்டரா.

இந்த இரண்டு போன்களின் இந்திய விலை பற்றிய விபரமும், ப்ரீ புக்கிங் தேதியும் வெளியாகி உள்ளது. அதன்படி ஆக., 21 முதல் இந்த ரக போன்களுக்காகன ப்ரீ புக்கிங் துவங்க உள்ளது. சரி இனி இந்த போன்களின் சிறப்பு அம்சம் மற்றும் விலையை பார்ப்போம்....

சாம்சங் கேலக்ஸி நோட் 20
இந்த அல்ட்ரா ஸ்மார்ட்போன் 6.9- இன்ச் குவாட் எச்டி பிளஸ் டைனமிக் அமோல்டு இன்பினிட்டி-ஒ டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்புறம் 64எம்பி மெயின் லென்ஸ் + 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 12எம்பி பெரிஸ்கோப் என மூன்று கேமராக்கள் உள்ளன. முன்புறம்10எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம், எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு போன்ற அம்சங்கள் உள்ளன. 4300Mah பேட்டரி திறன் கொண்டது. எஸ்பென், IP68, ஸ்டிரீயோ ஸ்பீக்கர் உள்ளது. 128/256 ஜிபி இன்டர்னல் மெமரி, 8ஜிபி ரேம் திறன் கொண்டது.

சாம்சங் கேலக்ஸி நோட் 20 அல்டரா
இந்த அல்ட்ரா ஸ்மார்ட்போன் 6.9-இன்ச் குவாட் எச்டி பிளஸ் டைனமிக் அமோல்டு இன்பினிட்டி-ஒ டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்புறம் 108எம்பி மெயின் லென்ஸ் + 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 12எம்பி பெரிஸ்கோப் என மூன்று கேமராக்கள் உள்ளன. முன்புறம்10எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம், எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு போன்ற அம்சங்கள் உள்ளன. 4500Mah பேட்டரி திறன் கொண்டது. எஸ்பென், IP68, ஸ்டிரீயோ ஸ்பீக்கர் உள்ளது. 128/256/512 ஜிபி இன்டர்னல் மெமரி, 12ஜிபி ரேம், பிளஸ் எஸ்டி கார்டு போடும் மெமரி திறனும் கொண்டது.

விலை
128 ஜிபி இன்டர்னல் மெமரி, 8ஜிபி ரேம் திறன் கொண்ட சாம்சங் கேலக்ஸி நோட் 20 ரக போன் விலை ரூ.77,999ஆகவும், 256 ஜிபி இன்டர்னல் மெமரி, 8ஜிபி ரேம் திறன் கொண்ட போனின் விலை ரூ.1,04,999ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதேசமயம் 128 ஜிபி இன்டர்னல் மெமரி, 12ஜிபி ரேம் திறன் கொண்ட சாம்சங் கேலக்ஸி நோட் 20 அல்டரா ரக போன் விலை ரூ.1,04,999ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்னும் கூடுதல் மெமரி திறன் கொண்ட போனின் விலை குறிப்பிடப்படவில்லை.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)