பதிவு செய்த நாள்
30 ஆக2020
11:49

விவசாயிகளுடைய முக்கியமான பிரச்னையே, அவர்களுடைய விளைபொருட்களுக்கு குறைவான பணம் கிடைப்பது, இரண்டாவது, விளைப்பொருட்களை விற்க முடியாமல் தவிப்பது, மூன்றாவது, பொருள் விற்ற பணம் மிகவும் தாமதமாக கிடைப்பது.
இதற்கு முக்கியமான காரணம், இடைத்தரகர்கள்.இவர்களை தவிர்க்கும் விதமாக, பல ‘ஸ்டார்ட் அப்’ கம்பெனிகள் துவக்கப்பட்டுள்ளன. விவசாயிகளுடன் நேரடியாக இருந்து பழம், காய்கறி ஆகியவற்றை வாங்கி, பெங்களூரு, சென்னை, டில்லி, ஐதராபாத், புனே, மும்பை போன்ற நகரங்களில் உள்ள சில்லறை கடைகளுக்கு விற்பனை செய்கிறார்கள். அதுவும், 12 மணி நேரத்தில், இந்த சரக்குகள் சில்லறை விற்பனையாளரை அடைவதால், நுகர்வோருக்கு, பழம், காய்கறிகள் ‘பிரஷ்’ ஆக கிடைக்கின்றன.
உரங்கள் ‘ஸ்டார்ட் அப்’
இதுதவிர, விவசாயிகளுக்கு தரமான பூச்சி மருந்து, உரம், விதை, விவசாய உபகரணங்கள் ஆகியவை கிடைப்பது மிகவும் முக்கியம். இந்த துறையில், புனேவை சேர்ந்த அக்ரோ ஸ்டார், இந்துாரை சேர்ந்த கிராமபோன், ஐதராபாத்தை சேர்ந்த கீத்தி நெக்ஸ்ட் ஆகியன முக்கிய பங்காற்றுகின்றன. இந்த ‘ஸ்டார்ட் அப்’ கம்பெனிகள் விற்பனை மட்டும் செய்யாமல், விவசாயிகளுக்கு, விவசாய விளைப் பொருட்களை மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்றும் கற்றுக் கொடுக்கின்றன.
இந்த ‘ஸ்டார்ட் அப்’ கம்பெனிகள், தற்போது ஊருக்கு ஊர் இருக்கும் விற்பனையாளர்களுடன் போட்டி போடுகின்றனர்.என்ன பயிரிடலாம்?விவசாயிகளின் விளை நிலங்களை ஆராய்ந்து, என்ன பயிரிட்டால் அது அவர்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று ஆராய்ந்து கூறுவதற்கு, பல, ஸ்டார்ட் கம்பெனிகள் தற்போது வந்துள்ளன. அவற்றில், முக்கியமானது ‘டிஜி அக்ரி’. இதுபோல, பாட்னாவை சார்ந்த ‘தி ஹாத்’ என்ற கம்பெனியும் பெரிய பங்காற்றி வருகிறது.
இறால் வளர்ப்பு
இந்தியா, இறால் வளர்ப்பில், உலகளவில் ஒரு முக்கிய நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது. தென்னிந்தியாவில், குறிப்பாக ஆந்திரா, தமிழ்நாடு ஆகியவை, இறால் வளர்ப்பில் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றன. செயற்கை குளங்களில் வளர்க்கப்படுவதால், நீரின் சுத்தம், இறால்களுக்கு அளிக்கப்படும் உணவு வகை ஆகியவற்றை, தொடர்ந்து கண்காணிப்பது மிகவும் முக்கியம்.இவற்றை கருவிகள் வாயிலாக கண்காணிக்க, ஆந்திராவை சேர்ந்த ‘இருவாகா’ என்ற கம்பெனி ‘ஷிரிப்டாக்’ என்ற ஒரு கருவியை கண்டுபிடித்துள்ளது. இதை, அந்த செயற்கை குளங்களில் நிர்மாணிப்பதின் வாயிலாக, அந்த குளத்தின் நீரின் சுத்தம், இறால்களின் உணவு தேவைகள் ஆகியவை கண்காணிக்கப்படுகின்றன. இணையதளம்: www.eruvaka.com.
– சேதுராமன் சாத்தப்பன் –
சந்தேகங்களுக்கு: sethuraman.sathappan@gmail.com,
இணையதளம் www.startupbusinessnews.coல,
மொபைல் போன்: 98204 51259.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|