முக்கிய 8 துறைகள் வளர்ச்சி 5வது மாதமாக பின்னடைவு முக்கிய 8 துறைகள் வளர்ச்சி 5வது மாதமாக பின்னடைவு ... சரிவிலிருந்து பங்குச்சந்தைகள் மீண்டன சரிவிலிருந்து பங்குச்சந்தைகள் மீண்டன ...
மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி எதிர்பார்த்தது போலவே சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஆக
2020
22:19

புதுடில்லி:நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், ஜி.டி.பி., எனும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம், இதுவரை இல்லாத வகையில், மைனஸ் 23.9 சதவீதமாக சரிவடைந்துள்ளது.

கணிதம்

இதுவே, கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 5.2 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.கொரோனா தொற்றுநோய் பரவல் காரணமாக, கடந்த மார்ச் 25ம் தேதி முதல், ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்தது. பின், ஏப்ரல் 20ம் தேதி முதல் தளர்வுகளை அறிவிக்க துவங்கியது.

ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த காரணத்தால், பொருளாதார நடவடிக்கைகள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகின. இதன் காரணமாக, கடந்த, 40 ஆண்டுகளில் இல்லாத வகையில், பொருளாதார வளர்ச்சியும், மைனஸ் 23.9 சதவீதமாக சரிவுக்குள்ளானது.கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த, கடந்த நிதியாண்டின் இறுதிக் காலாண்டில், வளர்ச்சி, 3.1 சதவீதமாக இருந்தது.


இது, அதற்கு முந்தைய, 44 காலாண்டுகளில் இல்லாத சரிவாகும். மேலும், கடந்த நிதியாண்டின் மொத்த வளர்ச்சி, 4.2 சதவீதமாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந் நிலையில், இந்த முதல் காலாண்டில், பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியை சந்திக்கும் என அனைவராலும் கணிக்கப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட, மைனஸ் 10 சதவீதத்திலிருந்து மைனஸ் 25 சதவீதம் வரை இருக்கும் என பல நிறுவனங்களால் கணித்து சொல்லப்பட்டிருந்தது.

சேவை மதிப்பு

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், சுரங்க துறை வளர்ச்சி, மைனஸ் 23.3 சதவீதமாக சரிந்துள்ளது. இது கடந்த நிதியாண்டின், இதே காலாண்டில், 4.7 சதவீதமாக அதிகரித்திருந்தது.இதேபோல, தயாரிப்பு துறை வளர்ச்சி, மைனஸ் 39.3 சதவீதமாகவும்; கட்டுமான துறை வளர்ச்சி, மைனஸ் 50.2 சதவீதமாகவும் முதல் காலாண்டில் சரிவைக் கண்டுள்ளது.

இருப்பினும் விவசாயத் துறை மட்டும் வளர்ச்சியை கண்டுள்ளது. இத்துறையானது 3.4 சதவீதமாக வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் விவசாய துறை வளர்ச்சி 3 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.முதல் காலாண்டில், ஜி.வி.ஏ., எனும், மொத்த மதிப்பு கூட்டல் வளர்ச்சி, மைனஸ் 22.8 சதவீதமாக சரிந்துள்ளது. ஜி.வி.ஏ., என்பது, ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் சேவையின் மதிப்பு ஆகும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)