அமெரிக்க டாலர்  ஆதிக்கம் நீடிக்குமாஅமெரிக்க டாலர் ஆதிக்கம் நீடிக்குமா ...  நிதி நெருக்கடியில் இந்திய குடும்பங்கள் நிதி நெருக்கடியில் இந்திய குடும்பங்கள் ...
டிஜிட்டல் கோல்டு’ முதலீடு செய்வது எப்படி?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 செப்
2020
02:34

டிஜிட்டல் தங்க முதலீடு தரக்கூடிய பலன்களை அறிந்திருப்பதோடு, இது தொடர்பான இடர்களையும் அறிந்திருப்பது அவசியம்.முதலீடு நோக்கில் தங்கம் தொடர்ந்து ஈர்ப்புடையதாக இருக்கிறது. அதற்கேற்ப முதலீட்டாளர்களுக்கு தங்கம் நல்ல பலன்களையும் அளித்து வருகிறது.


கடந்த ஆண்டு, மற்ற முதலீட்டு வகைகளை மிஞ்சிய தங்கம், 40 சதவீத பலனை அளித்திருக்கிறது. பொருளாதார மந்த நிலை, கொரோனா நெருக்கடி என பல்வேறு காரணங்களால் தங்கம் பாதுகாப்பான முதலீடாகவும் அமைகிறது. இந்த பின்னணியில், ‘டிஜிட்டல் கோல்ட்’ எனப்படும் டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்வது பிரபலமாகி வருகிறது.


மிகக் குறைந்த தொகையில் கூட தங்கத்தில் முதலீடு செய்யலாம் என்பது இதன் சிறப்பம்சமாக அமைகிறது.டிஜிட்டல் தங்கம்தங்கத்தில் பலவிதங்களில் முதலீடு செய்யலாம். அவற்றில் ஒன்றாக டிஜிட்டல் தங்கம் அமைகிறது. பவுதீக வடிவில் தங்கத்தில் முதலீடு செய்வதை இது குறிக்கிறது. டிஜிட்டல் தங்கத்தை அளிக்கும் நிறுவனங்கள் மூலம், இதில் முதலீடு செய்யலாம். இந்நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் சார்பில் தங்கத்தை வாங்கி சேமித்து வைக்கின்றன.


வங்கிகள், புரோக்கிங் நிறுவனங்கள், நிதி நிறுவனங்களின் வாயிலாக டிஜிட்டல் முறையில் வாங்கலாம். முதலீட்டாளர் விரும்பும் போது, தங்கத்தை, ‘டெலிவரி’ எடுத்துக் கொள்ளலாம் அல்லது நிறுவனத்திடமே மீண்டும் விற்று விடலாம்.இந்தியாவில் தற்போது, ‘ஆக்மண்ட் கோல்ட், எம்.எம்.டி.சி., – பி.ஏ.எம்.பி., இந்தியா லிட்., மற்றும் டிஜிட்டல் கோல்ட் இந்தியா’ ஆகிய மூன்று நிறுவனங்கள், டிஜிட்டல் தங்க முதலீட்டை அளிக்கின்றன. இந்த நிறுவனங்களில் பதிவு செய்து, தேவைக்கேற்ப டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்யலாம்.


‘பேடிஎம், அமேசான்பே’ உள்ளிட்ட டிஜிட்டல் வாலெட்களும், டிஜிட்டல் தங்கத்தை எளிதாக வாங்க வழி செய்கின்றன. தங்கத்தின் விலை போக்கிற்கு ஏற்ப வாங்கி விற்கலாம்.பலன்கள், இடர்கள்டிஜிட்டல் தங்கத்தில், 1 ரூபாய் எனும் குறைந்த அளவிலும் முதலீடு செய்யலாம் என்பதால், தங்கத்தில் முதலீடு செய்வதற்கான எளிய வழியாக இது அமைகிறது.


சிறுக சிறுக தங்கத்தை சேமிக்கலாம் என்றாலும், இதில் உள்ள இடர் அம்சங்களையும் அறிந்திருக்க வேண்டும். டிஜிட்டல் தங்கம் வாங்கும் போது, நிறுவனம் அந்த மதிப்பிற்குரிய தங்கத்தை வாங்கி சேமிக்கிறது. தங்கத்தின் அளவு மற்றும் துாய்மையை மேற்பார்வையிட, ஒரு அறங்காவலர் உண்டு என்றாலும், இந்த வகை முதலீட்டிற்கு என்று தனி கட்டுப்பாடு அமைப்பு இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

முதலீடு செய்த தங்கத்தை, பவுதீக வடிவில் பெற்றுக்கொள்ள தீர்மானித்தால், அதற்கேற்ப, 3 சதவீத ஜி.எஸ்.டி., வரி செலுத்த வேண்டும். ஆக, 1,000 ரூபாய்க்கு தங்கம் வாங்கினால், 30 ரூபாய் வரி செலுத்த வேண்டும். மேலும் நிறுவனங்கள் டிஜிட்டல் தங்கத்தை சேமிக்க மற்றும் அறங்காவலர் கட்டணம் என, ஒரு தொகையை வசூலிக்கின்றன. இவை, தங்கத்தின் விலை மீது கூடுதலாக அமையும். தங்கத்தை பெற்றுக்கொள்ள தீர்மானித்தால், செய்கூலி மற்றும் டெலிவரி கட்டணமும் பொருந்தும்.


அதோடு, தங்கத்தை வாங்கிக் கொள்ள அல்லது மீண்டும் விற்கும் வரை, அதை சேமித்து வைத்திருக்கும் காலத்திற்கு ஒவ்வொரு நிறுவனமும் ஒரு வரம்பு வைத்துள்ளன. இந்த அம்சங்களை எல்லாம் பரிசீலித்த பின், டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்வது பற்றி தீர்மானிக்கலாம்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)