சுற்றுலா, பயணங்கள் துறை ரூ.5 லட்சம் கோடி இழப்பு சுற்றுலா, பயணங்கள் துறை ரூ.5 லட்சம் கோடி இழப்பு ...  மாநிலங்களின் மூலதன செலவுகள் குறைக்கும் நிலை ஏற்படக்கூடும் மாநிலங்களின் மூலதன செலவுகள் குறைக்கும் நிலை ஏற்படக்கூடும் ...
அசோக் லேலண்ட் ‘ரோட் டு ஸ்கூல்’ திட்டம் : தமிழ்நாட்டில் கூடுதலாக 178 பள்ளிகளைச் சென்றடைகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 செப்
2020
21:06

சென்னை: ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமாகவும், இந்தியாவின் முன்னணி வர்த்தக வாகன உற்பத்தியாளராகவும் விளங்கும் அசோக் லேலண்ட், தனது சமூக பொறுப்புணர்வு முயற்சியின் (சிஎஸ்ஆர்) கீழ் செயல்படுத்தி வரும் ‘ரோட் டு ஸ்கூல்’ (Road to School - RTS) திட்டத்தில் நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களிலுள்ள 178 பள்ளிகளை கூடுதலாக இணைத்துக் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த முழுமையான குழந்தைகள் மேம்பாட்டு திட்டமானது கூடுதலாக 11,042 குழந்தைகளுக்குப் பலன் அளிக்கும்.

அசோக் அசோக் லேலண்டின் மனிதவளம், சிஎஸ்ஆர் & கம்யூனிகேஷன், தலைவர் திரு. என்.வி. பாலசந்தர் இந்நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் டாக்டர். வி. ஜெய சந்திர பானு ரெட்டி ஐஏஎஸ், கிருஷ்ணகிரி மாவட்ட தலைமை கல்வி அலுவலர் திரு. ஆர். முருகன், கிருஷ்ணகிரி மாவட்ட சாமகரசிக்ஷா உதவி திட்ட அலுவலர் திரு. டி.எஸ். நாராயணா, அசோக் லேலண்ட் துணைத்தலைவர் – மனிதவளம் & சிஎஸ்ஆர் திரு. டி. சசிகுமார், லேர்னிங் லிங்க்ஸ் அறக்கட்டளை திட்ட இயக்குனர் திரு. எஸ். கிரிஷ் உட்படப் பலர் இதில் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வு பற்றிப் பேசிய திரு. என்.வி. பாலசந்தர், “’ரோட் டு ஸ்கூல்’ திட்டமானது பல இளம்மாணவர்களின் வாழ்க்கையை சிறப்பான முறையில் மாற்றும் ஒரு திட்டமாக அமைந்துள்ளது. இதில் பங்கேற்ற மாணவர்களிடம் கண்ட நேர்மறையான மாற்றங்கள் எங்களைப் பெருமைப்பட வைத்துள்ளது. வாசிப்புத் திறன் 35% அதிகரிப்பதிருப்பதும், கல்வியைக் கற்காமல் இடைநிற்றல் செய்வது 20% வரை குறைந்திருப்பதும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களாக அமைந்திருப்பதோடு எங்களது சாதனைகளாகவும் உருவெடுத்து இருக்கின்றன.

இது போன்ற பல அளவீடுகள், நாங்கள் சரியான பாதையில் செல்வதை நிரூபித்துள்ளது. ஆனால், கல்வி மற்றும் சமூக செயல்பாடுகள் மூலமாக இளம் குழந்தைகள் செழிப்பை அடைய உதவும் போது எங்களுக்கு உண்டாகும் மகிழ்ச்சியையும் திருப்தியையும் கண்டிப்பாக அளவிட முடியாது. இன்று, கூடுதலாக 178 பள்ளிகளும் அதன் மூலமாக 11,042 மாணவர்களும் எங்களது திட்டத்தினால் பலன் பெறவுள்ளனர். இது எங்களது முயற்சியை மேலும் வலுவாக்கியுள்ளது. சமூகத்தில் எப்படிப்பட்ட தாக்கம் ஏற்பட வேண்டுமென்று விரும்பினோமோ, அதனை விரிவாக்கியுள்ளது. வரவிருக்கும் புதிய மாணவர்களை எதிர்நோக்கியிருக்கிறோம். அவர்களது வாழ்வில் முத்திரை பதிப்போம் என்று நம்புகிறோம்” என தெரிவித்தார்.


கொரோனா நோய்த்தொற்றின்போது, இந்த மக்கள் இயக்கம் சவாலை பெரும் சவாலை எதிர்கொண்டது. அசோக் லேலண்ண்டில் இருந்த குழு அதனை ஒரு வாய்ப்பாகக் கருதி, ‘ஐகேர்’ (iCare) முயற்சியைத் தொடங்கி டிஜிட்டல் தளங்களை நோக்கி விரைவாக நகர்ந்தது. லேர்னிங் லிங்க்ஸ் அறக்கட்டளை மற்றும் ஹிந்துஜா குழுமத்தின் 11 நிறுவனங்களைச் சார்ந்த 598 தன்னார்வலர்கள் உதவியுடன், கல்வியில் இருந்து எந்தவொரு குழந்தையும் விலக்கப்படவில்லை என்பதை இந்த குழு உறுதிப்படுத்தியது.

குழந்தைகளுக்கான சிறப்புச் சேவையாளர்கள் (Resource Personnels), தன்னார்வலர்கள் தொடர்ச்சியாக ஆன்லைன் மூலமாகவும் நேரடியாகவும் சென்று மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகின்றனர். பள்ளிசார் கல்வி, ஆரோக்கியம் & உடல்திறன், தகவல்தொடர்புத் திறன், கைவினைத்திறன் தொடர்பான பல்வேறு செயல்பாடுகளை மேற்கொள்ளச் செய்கின்றனர்.

2015-ம் ஆண்டு தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அஞ்செட்டி, சூலகிரி பகுதியில் 36 பள்ளிகளில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இதன் வெற்றியானது, இந்நிறுவனத்தை மேலும் பல மாவட்டங்களில் இத்திட்டத்தைப் பரப்பத் தூண்டுதலாக அமைந்தது. இதையடுத்து தமிழ்நாட்டிலுள்ள திருவள்ளூர் (மீஞ்சூர், புழல்), நாமக்கல் (மோகனூர், பரமத்தி, எருமப்பட்டி, கொல்லிமலை), கிருஷ்ணகிரி (சூலகிரி, அஞ்செட்டி, தளி, கேளமங்கலம்) ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதனால், 714 பள்ளிகளில் சுமார் 55,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இன்று பயனடைந்து வருகின்றனர். இந்த ‘ரோட் டு ஸ்கூல்’ திட்டமானது போக்குவரத்து வசதியற்ற இடங்களில் செயல்படும் அரசுப் பள்ளி குழந்தைகளின் பள்ளிக் கல்வி மற்றும் இணை கல்வி வளர்ச்சிக்கு உதவுகிறது.

கல்வி, ஆரோக்கியம், தனிநபர் சுகாதாரம், உடல்நலம், ஊட்டச்சத்துகள் மற்றும் விளையாட்டு, இசை உள்ளிட்ட உணர்வுப்பூர்வமான வளர்ச்சி ஆகியவற்றை இத்திட்டம் உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
business news
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)