ஜி.எஸ்.டி., வரி வசூல் செப்டம்பர் மாதத்தில் சாதனை ஜி.எஸ்.டி., வரி வசூல் செப்டம்பர் மாதத்தில் சாதனை ...  மீனவர்களுக்கு மானிய கடன் மீனவர்களுக்கு மானிய கடன் ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
வாகன விற்பனை நிலவரம் செப்டம்பரில் அதிகரித்த நம்பிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 அக்
2020
21:11

புதுடில்லி:கடந்த செப்டம்பர் மாதத்துக்கான வாகன விற்பனை நிலவரம் வெளிவரத் துவங்கி உள்ளன. பல நிறுவனங்கள் விற்பனை வளர்ச்சியை கண்டிருக்கும் நிலையில், அடுத்து வரும் பண்டிகை காலத்தில் விற்பனை மேலும் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையுடன் அவை உள்ளன.

மாருதி சுசூகி

இந்நிறுவனத்தின் விற்பனை, செப்டம்பர் மாதத்தில், 30.8 சதவீதம் அளவுக்கு அதிகரித்து உள்ளது.மதிப்பீட்டு மாதத்தில் மொத்தம், 1.60 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. இதுவே, கடந்த ஆண்டு செப்டம்பரில் மொத்தம், 1.23 லட்சம் வாகனங்களே விற்பனை ஆகியிருந்தன.உள்நாட்டு விற்பனையை பொறுத்தவரை, 32.2 சதவீதம் அளவுக்கு அதிகரித்து உள்ளது. ஏற்றுமதியை பொறுத்தவரை, 9 சதவீதம் அதிகரித்துள்ளது. இரண்டாவது காலாண்டினை பொறுத்தவரை மொத்தம், 3.93 லட்சம் வாகனங்களை மாருதி விற்பனை செய்திருக்கிறது.

ஹூண்டாய்

ஹூண்டாய் நிறுவனத்தின் செப்டம்பர் மாத மொத்த விற்பனை, 3.8 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. மதிப்பீட்டு மாதத்தில் மொத்தம்,59 ஆயிரத்து,913 வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன. இதுவே, கடந்த ஆண்டு செப்டம்பரில், மொத்தம், 57 ஆயிரத்து, 705 வாகனங்கள் மட்டுமே விற்பனை ஆகியிருந்தது.உள்நாட்டு விற்பனை, 23.6 சதவீதம் அதிகரித்திருந்தாலும், ஏற்றுமதியில், 43.5 சதவீதம் சரிவை இந்நிறுவனம் கண்டுள்ளது.

மகிந்திரா

மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனத்தின் விற்பனை, செப்டம்பரில், 17 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில், 43 ஆயிரத்து, 343 வாகனங்களை விற்பனை செய்திருந்த நிலையில் மதிப்பீட்டு மாதத்தில், 35 ஆயிரத்து, 920 வாகனங்கள் மட்டுமே விற்பனை ஆகியுள்ளன.

இருப்பினும், இந்நிறுவனத்தின் டிராக்டர் விற்பனை, 17 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத் தக்கது.இதேபோல், எஸ்கார்ட் டிராக்டர் விற்பனையும், 9 சதவீதம் அதிகரித்துள்ளது.

டொயோட்டா

டொயோட்டா கிர்லோஸ்கர் விற்பனை, 20.45 சதவீதம் சரிந்துள்ளது. கடந்த ஆண்டு செப்.,ல்,
10 ஆயிரத்து, 203 கார்கள் விற்பனை ஆகியிருந்த நிலையில், தற்போது, 8,116 கார்கள் மட்டுமே விற்பனை ஆகியுள்ளது.

பஜாஜ் ஆட்டோ

இந்நிறுவனத்தின் மொத்த விற்பனை, 10 சதவீதம் அதிகரித்துஉள்ளது. இருசக்கர வாகன பிரிவை பொறுத்தவரை, 20 சதவீதம் அளவுக்கு அதிகரித்து உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில், 3.37 லட்சம் இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த செப்டம்பரில், 4.05 லட்சம் வாகனங்கள் விற்பனை ஆகிஉள்ளன.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)