‘நான்காவது தொழில் துறை புரட்சிக்கு இந்தியா தலைமை ஏற்கும்’ ‘நான்காவது தொழில் துறை புரட்சிக்கு இந்தியா தலைமை ஏற்கும்’ ... சென்செக்ஸ் தொடர்ந்து 40 ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் வர்த்தகம் சென்செக்ஸ் தொடர்ந்து 40 ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் வர்த்தகம் ...
விஎஸ்டி டில்லர்ஸ் அறிமுகப்படுத்தும் “விஎஸ்டி கிசான்” பவர் டில்லர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 அக்
2020
11:51

டில்லர்கள் மற்றும் காம்பாக்ட் டிராக்டர்கள் தயாரிப்பதில் முன்னோடிகளான விஎஸ்டி டில்லர்ஸ் டிராக்டர்ஸ் லிமிடெட் வேளாண் துறைக்கு புதுமையான தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளை வழங்குவதற்கான தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாக “விஎஸ்டி கிசான்” என்ற பெயரில் புதிய 12 ஹெச்பி பவர் டில்லரை அறிமுகப்படுத்தியுள்ளது.

விஎஸ்டி கிசான் என்பது அனைவரும் வாங்கக்கூடிய விலையில் கிடைக்கும். சிறு மற்றும் குறு விவசாயிகளின் தேவையை கருத்தில் கொண்டு, அவர்களின் உற்பத்தித்திறனை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், கேட்ஜ் வீல், ரிட்ஜர் மற்றும் கலப்பை உள்ளிட்ட பல பயன்பாடுகளை பூர்த்தி செய்யும் நோக்கில் சிறந்த மற்றும் கட்டுபடியாகும் விலையில் வழங்கும் வகையில் விஎஸ்டி கிசான் உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய தயாரிப்பு குறித்து விஎஸ்டி டில்லர்ஸ் துணைத் தலைவர் பீம் ரெட்டி கூறுகையில், “எங்களது தயாரிப்பு முதல் கட்டமாக தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் கிடைக்கும். இரண்டாவது கட்டமாக இந்தியா முழுவதும் விநியோகிக்கப்படும். மேலும், இந்த உபகரணங்கள் ஒவ்வொரு விவசாயியும் ஆத்மநிர்பர் கிசானாக மாறுவதை உறுதிசெய்து, அரசாங்கத்தின் சுயசார்பு இந்தியா திட்டத்தின் முன்முயற்சியை ஆதரிக்கும்.

இந்த பவர் டில்லர், விஎஸ்டி உருவாக்கிய ஒரு உள்நாட்டு தயாரிப்பு மற்றும் 100% மேக் இன் இந்தியா என்பதை கவனத்தில் கொள்ளலாம். விஎஸ்டி கிசான் 4 ஸ்ட்ரோக் சக்திவாய்ந்த ஒற்றை சிலிண்டருடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 12 ஹெச்பி @ 2400 ஆர்.பி.எம் திறனைக் கொண்டது. “ஒவ்வொரு விவசாயிக்கும் வெற்றி” என்ற நோக்கத்துடன் இந்த தயாரிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)