ஐபோன் 12 சீரிஸ்: 4 மாடல்களில் அறிமுகம்ஐபோன் 12 சீரிஸ்: 4 மாடல்களில் அறிமுகம் ... எதிர்கால முதலீடுகளுக்கு ஏற்ற நாடுகள்  முதல் மூன்று இடங்களில் இந்தியா எதிர்கால முதலீடுகளுக்கு ஏற்ற நாடுகள் முதல் மூன்று இடங்களில் இந்தியா ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சென்செக்ஸ் 300 புள்ளிகள் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 அக்
2020
11:37

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் கடந்த 10 தினங்களுக்கு மேலாக உயர்வுடன் வர்த்தகமான நிலையில் இன்று(அக்.,14) சரிவை சந்தித்தன.

இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 214 புள்ளிகள் சரிந்து 40,410.57ஆகவும், நிப்டி 77.05 புள்ளிகள் சரிந்து 11,857.45ஆகவும் வர்த்தகமாகின. தொடர்ந்து காலை 11.15மணியளவில் சென்செக்ஸ் 300, நிப்டி 100 புள்ளிகளுக்கு அதிகமாகவும் சரிந்து வர்த்தகத்தை தொடர்ந்தன.

ஷாங்காய், ஹாங்காங், டோக்கியோ உள்ளிட்ட ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட சரிவாலும், முதலீட்டாளர்கள் லாபநோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ததாலும், முன்னணி நிறுவன பங்குகள் சரிந்ததாலும் இன்றைய வர்த்தகம் வர்த்தகம் சரிவை சந்தித்தன. இன்றைய வர்த்தகத்தில் அநேக நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன. குறிப்பாக ஓஎன்ஜிசி நிறுவன பங்குகள் 3 சதவீதம் சரிந்தன. இவை தவிர்த்து என்டிபிசி, பவர்கிரிட்டு, அல்ட்ரா டெக், ஐடிசி., எச்டிஎப்சி, ஐசிஐசிஐ., டாடா ஸ்டீல், பார்தி ஏர்டெல், ஹெச்சிஎல் போன்ற நிறுவன பங்குகளும் சரிந்து காணப்பட்டன.

ரூபாயின் மதிப்பு சரிவு
அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ.73.45ஆக வர்த்தகமானது.

சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 0.28 சதவீதம் சரிந்து 42.33 அமெரிக்க டாலராக விற்பனையானது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
business news
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)