பதிவு செய்த நாள்
18 அக்2020
22:01

பட்ஜெட் போட்டு செலவு செய்வதன் முக்கியத்துவத்தை பெரும்பாலானோர் அறிந்திருக்கின்றனர். பலரும் தங்களுக்கான மாதாந்திர பட்ஜெட்டை வகுத்துக் கொண்டு செயல்பட முற்படுகின்றனர். எனினும், அனைவராலும் பட்ஜெட்டை வெற்றிகரமாக கடைப்பிடிக்க முடிவதில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.
எனினும், பட்ஜெட்டில் தோல்வி அடைவதற்கான பொதுவான காரணங்களை அறிந்து, அவற்றை தவிர்ப்பதன் மூலம் திட்டமிட்டபடி பட்ஜெட்டை எளிதாக கடைப்பிடித்து, நிதி இலக்குகளை அடையலாம். அதற்கான வழிமுறைகள்:
யதார்த்தமான பட்ஜெட்:
செலவுகளை இழுத்துப் பிடிக்க வேண்டும் என தீர்மானிப்பது நல்லது. அதற்காக நிதி ஒழுக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதும் அவசியம் தான். ஆனால், இவை மட்டும் போதாது. பட்ஜெட் யதார்த்தமானதாக இருக்க வேண்டும். அதாவது, ஒருவரது சூழல், செலவுகளை கவனத்தில் கொண்டு வகுக்கப்பட வேண்டும்.
பலவித செலவுகள்:
பட்ஜெட்டை திட்டமிடும் போது பலரும் செய்யும் முக்கிய தவறு, அனைத்து செலவுகளையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் இருப்பது. ஒவ்வொரு செலவையும் கருத்தில் கொள்ள முடியாது என்றாலும், மாறக்கூடிய, நிலையான மாதச் செலவுகளை பட்டியலிட்டு, அவற்றுக்கு ஏற்ப பட்ஜெட்டை வகுத்துக் கொள்ள வேண்டும்.
அவசர கால நிதி:
நிதி திட்டமிடலில், அவசர கால நிதி முக்கியமாகிறது. எத்தனை சிறப்பான பட்ஜெட்டாக இருந்தாலும், கையில் அவசர கால நிதி இல்லை எனில், எதிர்பாராத செலவுகள் பட்ஜெட்டை தடம் புரள வைக்கலாம். எனவே, எதிர்பாராத நெருக்கடிக்கான அவசர கால நிதியை உருவாக்கி, பட்ஜெட்டை திட்டமிட வேண்டும்.
தனிப்பட்ட தன்மை:
சிறந்த பட்ஜெட்டை திட்டமிட, பலவிதமான வழிமுறைகள் இருக்கின்றன. ஆனால், அவை எல்லாமே பொதுவானவை. ஆனால், பட்ஜெட் ஒவ்வொருவரின் தனிப்பட்ட அம்சங்களுக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும். எனவே, ஒருவர் தன் தனிப்பட்ட தேவைகளை மனதில் கொண்டு, பட்ஜெட் அம்சங்களை தீர்மானிக்க வேண்டும்.
இலக்குகள் முக்கியம்:
பட்ஜெட்டிற்கான நிதி இலக்குகள் சரியானவையாக இருக்க வேண்டும். அப்போது தான் அவற்றை பின்பற்ற முடியும். அதே நேரத்தில், பட்ஜெட்டில் தனிப்பட்ட விருப்பங்களுக்கும் வழி இருக்க வேண்டும். பட்ஜெட் என்பது, செலவுகளை கட்டுப்படுத்துவதாக மட்டும் இருக்கக் கூடாது; விருப்பச் செலவுகளை அனுமதிக்கவும் வழி கொண்டிருக்க வேண்டும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|