பதிவு செய்த நாள்
25 அக்2020
21:30

பெரும்பாலான இந்தியர்கள் நிதி ஆரோக்கியத்தை முக்கியமாக கருதுவதும், நிதி ஆரோக்கியம் தங்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தின் மீது தாக்கம் செலுத்துவதாக கருதுவதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இணைய நிதி சேவை நிறுவனமான, ‘ஸ்கிரிப்பாக்ஸ்’ உலக சேமிப்பு தினத்தை முன்னிட்டு, செல்வம் மற்றும் நலம் எனும் பெயரில் ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில், கொரோனா பாதிப்புக்கு மத்தியில் உடல்நலம் சார்ந்த மன அழுத்தத்தை உணர்ந்ததாக, 54 சதவீதத்தினர் தெரிவித்துள்ளனர்.
நிதி ஆரோக்கியம் சார்ந்த மன அழுத்தத்தை உணர்ந்ததாக, 46 சதவீதத்தினர் தெரிவித்துள்ளனர். எனினும், ஆய்வில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர், நிதி ஆரோக்கியம் தங்களின் ஒட்டுமொத்த நலன் மீது தாக்கம் செலுத்துவதாக தெரிவித்துள்ளனர்.நிதி திட்டமிடலை கொண்டு இருப்பது மற்றும் முதலீடுகளை கொண்டிருப்பது, எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை அதிகரிக்க உதவும் என, கணிசமானோர் தெரிவித்துள்ளனர்.
அவசர கால நிதியை உருவாக்குவது, பெரும்பாலானோரின் நிதி இலக்குகளில் முதன்மையாக மாறியிருப்பதும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. மிகவும் இளம் வயதிலேயே முதலீட்டை துவங்கிஇருக்க வேண்டும் என உணர்வதாகவும், 50 சதவீதத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|