பதிவு செய்த நாள்
28 அக்2020
21:35

புதுடில்லி :அமெரிக்காவின் புகழ் பெற்ற பைக் தயாரிப்பு நிறுவனமான, ஹார்லி டேவிட்சன், இந்திய சந்தையில், விற்பனை மற்றும் சேவைக்காக, ஹீரோ மோட்டோகார்ப்
நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
அண்மைக்காலமாக வர்த்தகத்தில் சரிவைக்கண்டு வந்த ஹார்லி டேவிட்சன், தன்
வணிகத்தை, ‘ரீவயர்’ எனும் புதிய மாடலுக்கு மாற்ற இருப்பதாக தெரிவித்திருந்தது.தன் வணிக மறுசீரமைப்பின் தொடர்ச்சியாக, இந்தியாவிலிருந்து வெளியேறுவதாகவும்
அறிவித்தது. மேலும், ஹரியானாவில் இருக்கும் தொழிற்சாலையை மூடிவிடுவது என்றும்; குருகிராமிலுள்ள விற்பனை அலுவலக அளவை குறைத்துக் கொள்ள இருப்பதாகவும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், மிகப்பெரிய இந்திய சந்தையை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக,
விற்பனை மற்றும் சேவைகளுக்காக, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்துடன் கூட்டணி சேர்ந்துள்ளது.இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஹீரோ மோட்டோகார்ப், இந்தியாவில் ஹார்லி -டேவிட்சன் பிராண்ட் பெயரில், பிரீமியம் மோட்டார் சைக்கிள்களை உருவாக்கி விற்பனை செய்யலாம்.
இதுதவிர, ஹார்லி பைக்குகளுக்கான சேவை மற்றும் உதிரிபாகங்களை ஹீரோ
மோட்டோகார்ப் வழங்கும். மேலும் ஹார்லியின் இதர தயாரிப்புகளையும் விற்பனை
செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஹார்லியின் வருகை முதல் அதன் வெளியேற்றம் வரை அனைத்துமே இந்தியா – அமெரிக்கா ஆகிய நாடுகளின் அரசியலுக்கான ஊறுகாயாக மாறிப்போனதுதுரதிருஷ்டமே.
கடந்த, 2007ம் ஆண்டு, இந்திய அரசு, மாசு உமிழ்வு, சோதனை விதிமுறைகள் ஆகியவற்றில் தளர்வுகளை அறிவித்து, ஹார்லி பைக்குகளை இறக்குமதி செய்வதற்கான வழியை
உருவாக்கி தந்தது.இதற்கு பிரதி உபகாரமாக, இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு, மாம்பழ ஏற்றுமதி செய்து கொள்ள அனுமதி வழங்கியது, அமெரிக்க அரசு.
இதன் பின், 2009ல் நாட்டில் காலடி எடுத்து வைத்த ஹார்லி, அடுத்த ஆண்டிலிருந்து
விற்பனையை துவக்கியது.பின், டிரம்ப் அதிபர் ஆனதிலிருந்து, ஹார்லி பைக் மீதான
இறக்குமதி வரியை குறைக்க கோரி, கடுமையான அழுத்தத்தை அவர் இந்தியாவிற்கு தொடர்ச்சியாக கொடுத்து வந்தார்.
வெளிப்படையாகவே இந்தியாவின் நிலைப்பாடு குறித்து, ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என, தெரிவித்து வந்தார்.ஆனால் இந்தியா, கடைசி வரை டிரம்பின் கோரிக்கைக்கு செவி
சாய்க்கவில்லை.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|