ரிலையன்ஸ் ஜியோ லாபம் மூன்று மடங்கு அதிகரிப்பு ரிலையன்ஸ் ஜியோ லாபம் மூன்று மடங்கு அதிகரிப்பு ...  அக்டோபரில் நாட்டின் ஏற்றுமதி 5.4 சதவீதம் சரிவு கண்டது அக்டோபரில் நாட்டின் ஏற்றுமதி 5.4 சதவீதம் சரிவு கண்டது ...
டிரம்பா, பிடனா? இந்தியாவுக்கு யார் சாதகம்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 நவ
2020
21:50

நாளைக்கு அமெரிக்க அதிபர் தேர்தல். உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாட்டில் நடைபெறும் இந்த தேர்தல், மற்ற நாடுகளையும் லேசாக கலங்கவே வைத்துள்ளது. டிரம்பா, பிடனா? யார் வந்தால் சிறப்பு?அ

மெரிக்கர்கள் எப்படி இவ்விரு அதிபர் வேட்பாளர்களையும் பார்க்கிறார்கள் என்பது முக்கியமானது. இதுவரை வந்துள்ள கணிப்புகள் அனைத்தும், ஜோ பிடனுக்கே சாதகமாக இருக்கின்றன. கொரோனா கொள்ளைநோயைக் கையாள்வதில், டிரம்ப் தோற்றுவிட்டார். வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும், நாட்டின் பொருளாதார வளத்தை மேம்படுத்துவதிலும் அவர் பின்தங்கிவிட்டார்.

ஏராளமான குற்றச்சாட்டு

வெள்ளையின மேலாதிக்கத்துக்கு ஊக்கம் தரும் விதமாகவே அவரது செயற்பாடுகள் உள்ளன. டிரம்ப் ஆட்சியில் பெரும்பணக்காரர்கள் தான் பலன் அடைந்தனர், மத்தியமர்களால் கூட முன்னேற முடியவில்லை. இப்படி ஏராளமான குற்றச்சாட்டுகள் நாடெங்கும். அதனால், கருத்துக் கணிப்புகளின் சராசரி விகிதத்தில், டிரம்பை விட, ஜோ பிடன், தேசிய அளவில், 7 புள்ளிகள் அதிகமாக பெற்றுள்ளார்.


ஆனால், கொஞ்சம் சந்தேகத்தோடே இந்தக் கணிப்புகளை அணுகவேண்டும். அமெரிக்காவில் உள்ள, 1 முதல் 8 வரையான அத்தனை பத்திரிகைகளும் ஊடகங்களும் டிரம்ப் மீது வெறுப்பையே கக்குகின்றன. அவர்களுடைய பார்வையில், டிரம்ப் தொடர்பான ஒரு நல்ல அம்சம் கூட வெளியே சொல்லப்படவில்லை. அவ்வளவு துாரம் ஒருதலைப்பட்சமாக அமெரிக்க பத்திரிகைகள் இருக்கின்றன.

ஆனால், டிரம்ப் வாக்காளர்கள், நம்ம ஊர் அ.இ.அ.தி.மு.க. வாக்காளர்களைப் போன்றவர்கள். விரல்நுனியில் மை வைத்து, வாக்குப் பதிவு இயந்திரம் நெருங்குவது வரை வாய் திறக்க மாட்டார்கள். ஆனால், அங்கே போய் இரட்டை இலை சின்னத்தைத் தேடி அழுத்திவிட்டு வந்துவிடுவார்கள். டிரம்ப் விஷயத்திலும் இதேபோன்று நடைபெறலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

எதிர்பார்ப்புகள்

இந்நிலையில், இந்தியாவின் எதிர்பார்ப்புகள் என்னென்ன?நம் நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த பல பொருட்களுக்கு, ஜி.எஸ்.டி., முன்னுரிமை திட்டத்தின் கீழ் சலுகை கிடைத்து வந்தது. ஏப்ரல் 2019 முதல் இதை அமெரிக்கா நிறுத்திவிட்டது. அதனால், கூடுதலாக வரி செலுத்த வேண்டிய சூழல். ஏற்றுமதியும் இறக்குமதியும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. நம் நாட்டில் உள்ள வரிவிகிதங்கள் அதிகம் என்று டிரம்ப், தொடர்ந்து பிலாக்கணம் பாடி வந்தார்.இந்திய விவசாய சந்தையைத் திறந்துவிட வேண்டும் என்பதுதான் அமெரிக்காவின் முதல் கோரிக்கை. இதற்கு நாம் செவிமடுக்கவில்லை.


கடும் கட்டுப்பாடுகள்

இருநாடுகளுக்கு இடையே இருக்கும் வர்த்தகப் பற்றாக்குறையை சரி செய்யவேண்டும் என்று, அலுமினியம் மற்றும் ஸ்டீல் இறக்குமதிகள் மீது கூடுதல் தீர்வையையும் போட்டு கஷ்டப்படுத்தி வருகிறார் டிரம்ப். பைடன் வந்தாலும் இந்த நிலை மாறப் போவதில்லை. அவரும் ‘மேட் இன் அமெரிக்கா’ என்ற கோஷத்தைத் தான் பேசி வருகிறார். ஆனால், டிரம்ப் அளவுக்கு பைடன் முரட்டுத்தனமாக இருக்கமாட்டார். பேச்சுவார்த்தைக்கு இணங்கி வருவார் என்ற எதிர்பார்ப்பு இந்திய வர்த்தக சங்கங்கள் மத்தியில் இருக்கிறது.


இரண்டாவது அம்சம், ‘எச் 1 பி’ விசா. ஆண்டொன்றுக்கு 85 ஆயிரம், ‘எச் 1 பி’ விசாக்களை வழங்குகிறது அமெரிக்கா. அதில், பெரும்பகுதியை, இந்திய நிறுவனங்களே பெறுகின்றன. இதில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதாவது, ‘சிறப்புத் தொழில் திறன்’ இருப்பவர்களுக்கு மட்டுமே இந்த விசா கிடைக்கும்.


முதலில், சிறப்புத் தொழில் திறன் என்றால் என்ன என்பதை விளக்கவேண்டும். அப்படிப்பட்ட தொழில் திறன் அமெரிக்கர்களிடையே இல்லை என்று நிரூபிக்க வேண்டும். அதனால், நாங்கள் இந்தியாவில் இருந்து நபர்களை அழைத்து வருகிறோம் என்று நியாயப்படுத்த வேண்டும். உண்மையில் இதெல்லாம், நம்மை அமெரிக்கா போகவிடாமல் தடுக்கும் உத்திகள். இரண்டு அதிபர் வேட்பாளர்களுமே இந்த விஷயத்தில், வாய்திறந்து எந்த ஒரு உறுதிமொழியையும் கொடுக்கவில்லை.பிடன் அதிபராக வந்தால், விசா கட்டுப்பாடுகளைத் தளர்த்துவார் என்று நம்பும் ஒரு சாரார் உள்ளனர்.


சிக்கல் ஏற்படுத்துவார்

அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதிப்படுத்துவது எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்குஅந்நிறுவனங்களின் லாப விகிதத்தை உயர்த்துவதும் அவசியம். இந்தியாவில் இருந்து குறைந்த கூலிக்கு ஆள் எடுக்க அனுமதித்தால், அமெரிக்க நிறுவனங்களின் லாபம் உயரத் தானே செய்யும். அதை பிடன் செய்வார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

மூன்றாவது, அயலுறவுக்கொள்கை. ஜோ பிடன், நம் அரசாங்கம் காஷ்மீர் விவகாரத்தைக் கையாண்டதை விமர்சித்தார். மத சுதந்திரஅணுகுமுறையை விமர்சித்தார். அதனால், அவர் வந்தால், தேவையில்லாமல் நம் நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் கருத்து சொல்லி, சிக்கல் ஏற்படுத்துவார் என்றொரு பார்வை இருக்கிறது.

பிடன் தலையீடு இருக்காது

ஆனால், பிடன் வந்தாலும் சீனா என்னும் அபாயத்தை அனுமதிக்க மாட்டார். டிரம்ப் அளவுக்கு இல்லையெனிலும், பிடனும் சீனாவின் ஆக்கிரமிப்பு மனப்பான்மையைத் தடுக்கவே முனைவார்.அந்த வகையில், பிடனுக்கு இந்தியாவுடனான உறவு வளமாக இருக்க வேண்டியது அவசியம். அதனால், தேவையில்லாமல் இந்தியாவின் உள்விவகாரங்களில் பிடன் தலையீடு இருக்காது என்று கணிக்கப்படுகிறது.பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே, சமாதான புறாவாக பறக்க விரும்புவதாக உளறிக்கொட்டிய டிரம்ப் போன்று, பிடன் பேசமாட்டார்.

நெளிவு – சுளிவு தெரியும்

ஒபாமா காலத்தில் துணை அதிபராக இருந்தவர், அதற்கு முன்னரே வெளியுறவுக் கொள்கைக் குழுவின் தலைமைப்பதவி வகித்தவர் என்பதால், ஜோ பிடனுக்கு சர்வதேச உறவுகளில் உள்ள நெளிவு – சுளிவுகள் தெரியும்.தேவையில்லாமல் மூக்கை நுழைக்க மாட்டார் என்று கணிக்கிறார்கள் அயலுறவு வல்லுனர்கள்.அதிபர் தேர்தல் முடிவுகள், நாளை இரவே தெரிந்துவிடும் என்று சொல்வதற்கில்லை.


இந்தக் கட்டுரை எழுதப்படும் நேரத்தில், 9.20 கோடி அமெரிக்கர்கள் ஏற்கனவே வாக்களித்து விட்டனர். இதில், நேரடியாக வாக்களித்தவர்கள், 3.3 கோடி பேர், தபால் வாக்களித்தவர்கள், 5.88 கோடி பேர். 2016 தேர்தலோடு ஒப்பிடும்போது, தற்போது, 66.8 சதவீதம் பேர், தேர்தல் நாள் வருவதற்கு முன்பே வாக்களித்துவிட்டனர்.

தேர்தல் நாளான நாளை வரை வரக்கூடிய தபால் வாக்குகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். அதிலும் நாளை தபால் முத்திரையோடு வரக்கூடிய வாக்குகளும் எண்ணப்பட வேண்டும்.அதாவது, தபால் வாக்குகளை எண்ணி முடிக்கவே, இந்த வாரம் வெள்ளிக்கிழமை வரை ஆகும்.


களேபரமாகி விடும்

இந்நிலையில், தேர்தல் நாளன்று செலுத்தப்படும் வாக்குகளின் எண்ணிக்கை, யாரேனும் ஒருவருக்கு மிகத் தெளிவான வெற்றியை தந்தால் தான் இந்தத் தேர்தல் தப்பித்தது. இல்லையெனில், தபால் வாக்குகளில் குளறுபடி என்று நீதிமன்ற படியேறி, அமெரிக்கத் தேர்தலே களேபரமாகிவிடலாம். நீதிமன்ற முடிவு தெரிவதற்குள் உலகப் பங்குச் சந்தைகள் ஆட்டம் கண்டுவிடவும் வாய்ப்புண்டு. அமெரிக்க மக்கள் எடுக்கும் தெளிவான முடிவு தான், உலகப் பொருளாதாரத்தைக் காப்பாற்றப் போகிறது.

ஆர்.வெங்கடேஷ்
pattamvenkatesh@gmail.com
98410 53881

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
வர்த்தக துளிகள் நவம்பர் 01,2020
அதிகரிக்கும் போலியான மதிப்பீடுகள்மின்னணு வர்த்தக தளங்களில், பொருட்கள் குறித்த போலியான மதிப்பீடுகள், ... மேலும்
business news
புதுடில்லி–நடப்பு ஆண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8.8 சதவீதமாக இருக்கும் என, ‘மூடிஸ் இன்வெஸ்டார்ஸ் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து, ஜி.எஸ்.டி., விகித அடுக்குகளை மாற்றி ... மேலும்
business news
புதுடில்லி : இந்திய அரசு மும்பை பங்குச் சந்தையில் வோடபோன் ஐடியா லிமிடட்(விஐஎல்)-ன் அதிக பங்குகளை வாங்க ... மேலும்
business news
கோல்கட்டா : இந்தியாவின் மிகப்பெரிய நிலக்கரி தயாரிப்பு பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா, இந்த ஆண்டின் கடைசி ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)