பதிவு செய்த நாள்
12 நவ2020
21:11

புதுடில்லி:அடுத்த அன்னிய ஏற்றுமதி வர்த்தக கொள்கையை உருவாக்குவது தொடர்பான ஆலோசனைகளை, தொழில் மற்றும் வர்த்தக அமைப்புகள் வழங்கலாம் என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
மத்திய அரசு, ஏற்றுமதியை அதிகரிப்பதன் மூலம், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளை அதிக அளவில் உருவாக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.ஏற்றுமதியாளர்களை ஊக்குவிக்க, எம்.இ.ஐ.எஸ்., எனப்படும் வர்த்தக ஏற்றுமதி திட்டம், எஸ்.இ.ஐ.எஸ்., எனும் சேவைகள் ஏற்றுமதி திட்டம் போன்றவை அமலில் உள்ளன.
ஏற்றுமதிக்கு முன்னதாகவே அங்கீகாரம் பெறும் திட்டம், பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள், ஏற்றுமதியை ஊக்குவிக்க நடைமுறைப் படுத்தப்பட்டு உள்ளன. இந்நிலையில், அடுத்த ஐந்தாண்டுகளுக்கான அன்னிய ஏற்றுமதி வர்த்தக கொள்கையை உருவாக்க, மத்திய வர்த்தக அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
அன்னிய வர்த்தக தலைமை இயக்குனரகம் வெளியிட்ட அறிக்கை:கடந்த, 2015 – 20ம் நிதியாண்டுக்கான, அன்னிய வர்த்தக கொள்கை, அடுத்த ஆண்டு, மார்ச், 31 வரை நீட்டிக்கப் பட்டு உள்ளது. இதையடுத்து, 2021 – 2026ம் நிதியாண்டுக்கான, அன்னிய வர்த்தக ஏற்றுமதி கொள்கை உருவாக்கப்பட உள்ளது. இது தொடர்பான ஆலோசனைகள், வழிகாட்டுதல்களை தொழில், வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அமைப்புகள் தெரிவிக்கலாம்.
அதன் அடிப்படையில், அடுத்த ஐந்தாண்டுகளுக்கான அன்னிய வர்த்தக கொள்கை உருவாக்க படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கை, அனைத்து ஏற்றுமதி மேம்பாட்டு குழுக்கள், தொழில், வர்த்தக, விளைபொருள் வாரியங்கள், வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்புகளின் உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான வழிகாட்டுதல்களை தொழில் துறையினருக்கு வழங்குமாறு, அன்னிய வர்த்தக தலைமை இயக்குனரக மண்டலங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
தேவை வளர்ச்சி
கடந்த, 2011 – 12ம் நிதியாண்டில், நாட்டின் ஏற்றுமதி, 22 லட்சத்து, 50 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. இது, 2018 – 19ம் நிதியாண்டில், 24 லட்சத்து, 50 ஆயிரத்து, 825 கோடியாக உயர்ந்தது. எனினும், 2019 – 20ல், ஏற்றுமதி, 23 லட்சத்து, 57 ஆயிரத்து, 250 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|