பதிவு செய்த நாள்
10 டிச2020
21:29

மும்பை:ரிசர்வ் வங்கியின் கவர்னராக, சக்திகாந்த தாஸ் பொறுப்பேற்று, இரண்டு ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன.ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கும் இடையே வேறுபாடுகள் அதிகரித்து வந்த சிக்கலான காலக்கட்டத்தில், சக்திகாந்த தாஸ் பொறுப்பேற்றார்.
அவரை பணியமர்த்தியபோது, அது குறித்து பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டன. அரசு அதிகாரியாக பணியாற்றிய ஒருவரை எப்படி பொருளாதார அறிஞர்கள் வகிக்கும் பதவிக்கு நியமிக்கலாம் என கேள்விகள் எழுப்பப்பட்டன.
வீண் போகவில்லை
ஆனால், இந்த இரண்டு ஆண்டுகளில் அந்த கேள்விகளை ஒன்றும் இல்லாமல் செய்துள்ளார், சக்திகாந்த தாஸ். பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது எழுந்த பிரச்னைகளை தீர்க்க உதவிய அவர், ரிசர்வ் வங்கி பிரச்னைகளையும் தீர்த்து வைப்பார் என அரசு எதிர்பார்த்தது. அந்த நம்பிக்கை வீண்போகவில்லை என்றே சொல்லலாம்.
இதற்கு முன், ரிசர்வ் வங்கி கவர்னர் மட்டுமின்றி; அவருக்கு கீழ் பணியாற்றியவர்கள் பலரும், பொது தளங்களில் மத்திய அரசை அல்லது, நிதியமைச்சர்களை கடுமையாக விமர்சித்தும், குற்றம்சாட்டியும் பேசி வந்தனர். இப்போது வங்கிக்குள்இருந்து அத்தகைய குரல்கள் எழுவதில்லை.
தாஸ் மிகச் சிறந்த பொருளாதார நிபுணரா என்ற கேள்விகள் ஒருபுறம் இருக்கட்டும். அரசுடனான ரிசர்வ் வங்கியின் பிணக்கு போக்கை நீக்க வேண்டும் என மத்திய அரசு விரும்பியது. அதை இந்த இரண்டு ஆண்டுகளில் செய்து காட்டியிருக்கிறார் என்பது மட்டும் நிச்சயம்.
பொருளாதார மீட்சி
கொரோனா காலத்தில், மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பொருளாதார வண்டியை ஆளுக்கொரு பக்கமாக இழுக்காமல், ஒரு திசை நோக்கி பயணிக்க உதவிஇருக்கிறார், தாஸ். நாட்டின் வேகமான பொருளாதார மீட்சியே இதற்கு தகுந்த சாட்சிஆகும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|