பதிவு செய்த நாள்
10 டிச2020
21:30

புதுடில்லி:ஆசிய மேம்பாட்டு வங்கி, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த தன்னுடைய கணிப்பை மாற்றி, இதற்கு முன் கணித்திருந்ததை விட மேம்படும் என தெரிவித்துள்ளது.
இவ்வங்கி, இதற்கு முன், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில், மைனஸ் 9 சதவீதமாக இருக்கும் என கணித்திருந்தது.வளர்ச்சிஇந்நிலையில், தற்போது தன் நிலை பாட்டினை மாற்றி, வளர்ச்சி, மைனஸ் 8 சதவீதமாக இருக்கும் என தெரிவித்து உள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி, எதிர்பார்த்தற்கு மேலாக வலுவாக மீட்சி கண்டு வருவதாகவும், இரண்டாவது காலாண்டில், அனைவரது கணிப்புகளையும் தாண்டி, மைனஸ் 7.5 சதவீதமாக மேம்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
8 சதவீதம்
நடப்பு நிதியாண்டில் வளர்ச்சி, மைனஸ் 8 சதவீதமாக இருக்கும் என்றும் அறிவித்துள்ளது. அண்மையில், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், நடப்பு நிதியாண்டில் வளர்ச்சி, மைனஸ் 9.5 சதவீதமாக இருக்கும் என்ற கணிப்பை மாற்றி, 7.5 சதவீதமாக இருக்கும் என தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|