நியுயார்க்  சந்தையில் இன்போசிஸ் நியுயார்க் சந்தையில் இன்போசிஸ் ...  விரலின் வீக்கம் குறையப் போகிறது! விரலின் வீக்கம் குறையப் போகிறது! ...
பார்வையற்றவருக்கு உதவும் 'ஸ்டார்ட் அப்'
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 டிச
2020
10:34

இன்றைய காலகட்டத்தில் 'ஸ்டார்ட் அப்' கம்பெனிகள் எல்லா பிரச்னைகளுக்கும் ஒரு தீர்வு கண்டுபிடித்து கொண்டிருக்கின்றன. அவ்வகையில் பார்வையற்றவர்கள் பயன்படுத்தும் ஒரு செயலியை பற்றி பார்க்கலாம்.

பனராஸ் ஹிந்து பல்கலையில் ஐ.ஐ.டி. மற்றும் பெங்களூரு ஐ.ஐ.எம்.--ல் எம்.பி.ஏ. பயின்ற பிரமித் பார்கவா என்பவர் ஏறத்தாழ 22 ஆண்டுக்கு முன் இந்தியாவின் மிகப்பெரிய எப்.எம்.சி.ஜி. நிறுவனங்களில் ஒன்றான இந்துஸ்தான் யூனிலீவரில் பணிபுரிந்தார்.

அப்போது வாதக்கோளாறுக்கு உட்கொண்ட மருந்தால் விழித்திரை சேதமடைந்தது. பார்வை குறைபாடு ஏற்பட்டது. இந்த மிக அரிதான நிலை எவ்வாறு சரியாகும் என்பதற்கான சரியான சிகிச்சையை மருத்துவர்களால் அளிக்க இயலவில்லை.அதன்பின் 10 ஆண்டுகளுக்கு மேலாக 'மோட்டோரோலா' மற்றும் 'குவெஸ்ட் கண்ட்ரோல்' ஆகிய வெளிநாட்டு நிறுவனங்களில் வேலை பார்த்து வந்தார். அதேநேரம் அவருடைய பார்வை குறைபாடு தொடர்ந்து மோசமாகி கொண்டு வந்தது.

தற்போது 53 வயதாகும் பிரமித் பார்கவா ஒரு கட்டத்தில் முழுப் பார்வையையும் இழந்து விட்டார். ஆனாலும் மனந்தளராமல் கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள் செயலிகளை இயக்கக்கூடிய வகையில் ஒரு செயலி ஒன்றை இவரது கம்பெனி 'விசியோ ஆப்ஸ்' (Visio Apps) கண்டுபிடித்துள்ளது.இந்த செயலியின் பெயர் 'லுாயி வாய்ஸ்' என்று அழைக்கப்படுகிறது.

குரல் கட்டளையை பயன்படுத்தி 'வாட்ஸ் ஆப்பில்' ஒரு உரையை அனுப்ப அல்லது 'உபேரில்' ஒரு காரை வாடகைக்கு முன்பதிவு செய்ய அனுமதிக்கிறது.எளிதாக கூறவேண்டுமானால் குரல் கட்டளைகளை பயன்படுத்துவதன் வாயிலாக பார்வை குறைபாடுள்ள ஒருவர் பல செயலிகளை உபயோகிக்க இயலும். மேலும் அவர்களின் மொபைல் போன்களில் பல்வேறு அம்சங்களை பயன்படுத்தலாம்.

இது எப்படி சாத்தியமானது

பிரமித் பார்கவாவிற்கு ஒரு நண்பருடன் சந்திப்பு இருந்தது. அவர் டில்லியில் உள்ள தனது அலுவலகத்திற்கு அழைத்தார். அதற்குப்பின் அவரது நண்பர் அவருக்காக 'உபேர்' வண்டியை முன்பதிவு செய்ய முன்வந்தார்.

பிரமித்தின் கார் சவாரிக்கு முன்பதிவு செய்யும் போது அவரது நண்பர் அவரை அலுவலக முகவரியிலிருந்து செல்லுமிடம் தேர்வு செய்ய சவாரி வகை மற்றும் கட்டண விருப்பத்தை தேர்வு செய்ய சவாரி உறுதிப்படுத்த என்று உதவினார்.வீடு திரும்பும் வழியில் திடீரென்று ஒரு எண்ணம் அவரின் மனதில் தோன்றியது நண்பரை போலவே எனக்கு உதவக்கூடிய ஒரு செயலியை நண்பரை ஏன் நாம் உருவாக்க கூடாது என்று.

அதன் கடின உழைப்பு தான் தற்போது இருக்கும் 'லுாயி வாய்ஸ்' என்ற செயலி.கடந்த 2018ல் துவக்கப்பட்ட இந்த 'ஸ்டார்ட் அப்' கம்பெனி படிப்படியாக வெற்றி பெற்று கடந்த நவ. மாதம் தான் செயலியின் பீட்டா வடிவம் கொண்டு வரப்பட்டது. தற்போது 70 நாடுகளில் 9 ஆயிரம் பேர் வரை இந்த செயலியை உபயோகிக்கின்றனர். இதனை 'ப்ளே ஸ்டோரில்' தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இவரின் இணையதளம்: visio-apps.com
- சேதுராமன் சாத்தப்பன் -
சந்தேகங்களுக்கு:
sethuraman.sathappan@gmail.com
www.startupand businessnews.com
98204 51259.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)