பதிவு செய்த நாள்
06 ஜன2021
21:23
புதுடில்லி:தென் கொரியாவைச் சேர்ந்த, ‘கியா மோட்டார்ஸ்’ நிறுவனம், சர்வதேச சந்தையில், அதன் புத்தம் புதிய, ‘லோகோ’வை அறிமுகம் செய்துள்ளது.
சர்வதேச சந்தையில், பிரபலமான நிறுவனங்களில், கியா மோட்டார்சும் ஒன்று. தற்சமயம், இந்திய சந்தையிலும் இந்த நிறுவனம் வேகமாக வளர்ந்து வருகிறது. கடந்த அக்டோபர் மாதத்தில், 2021ல், புதிய லோகோவை அறிமுகம் செய்ய திட்டமிட்டிருப்பதாக தெரிவித்துஇருந்தது. இதையடுத்து, நேற்று புதிய லோகோவை அறிமுகம் செய்துள்ளது.
மேலும் அதன் விளம்பர வாசகங்களையும் மாற்றி உள்ளது.இந்த புதிய லோகோ, வாகன துறையில் எதிர்காலத்தில் நிறுவனத்தின் முன்னணி இடத்தை உணர்த்துவதாக இருக்கும் என, இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.மேலும், வாகன துறை விரைவான மாறுதல்களை
சந்திக்கும் காலகட்டத்தில் இருப்பதால், கியா மோட்டார்ஸ் நிறுவனமும், அதற்கு தக்க தன்னை மாற்றிக் கொள்கிறது என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|