பதிவு செய்த நாள்
21 ஜன2021
20:55

புதுடில்லி:ரிலையன்ஸ் நிறுவனத்துடனான, பியூச்சர் குழுமத்தின் ஒப்பந்தத்துக்கு, ‘செபி’ அனுமதி வழங்கியதை அடுத்து, நேற்று, பியூச்சர் ரீடெய்ல், பியூச்சர் என்டர்பிரைசஸ் ஆகிய நிறுவன பங்குகள் விலை உயர்ந்து, அதிகபட்ச விலை வரம்பை எட்டியது.
இதே போல், மும்பை பங்குச் சந்தையும், இந்த இரு நிறுவனங்களின் டீலுக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளது.‘ரிலையன்ஸ் ரீடெய்ல் வெஞ்சர்ஸ்’ நிறுவனம், பியூச்சர் குழுமத்தின் சில்லரை வர்த்தகம், மொத்த வர்த்தகம், கிடங்குகள் ஆகியவற்றை, 24,713 கோடிக்கு வாங்கிக் கொள்வதாக அண்மையில் ஒப்பந்தம் செய்தது.
சில்லரை வணிகம்
இந்த ஒப்பந்தத்தின் மூலமாக, பியூச்சர் குழுமத்தின், ‘பிக் பஜார், ஈஸிடே’ உள்ளிட்டவை, ரிலையன்ஸ் வசமாகும். மேலும் கிடங்கு வசதியும் அதிகரிக்கும். இதன் மூலம் சில்லரை வணிகத்தில், ரிலையன்ஸ் நிலை இருமடங்கு அதிகரித்து, போட்டி நிறுவனங்களுக்கு மிகப் பெரிய சவாலாக மாறும் என, எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், அமேசான் நிறுவனம், இந்த விற்பனை செல்லாது என அறிவிக்க கோரி, சிங்கப்பூரிலுள்ள சர்வதேச நடுவர் மன்றத்தை அணுகி, தடை பெற்றது. மேலும், இவ்விவகாரம் உயர் நீதிமன்றத்திற்கும் சென்றது.
ஒப்பந்தத்துக்கு அனுமதி
அத்துடன், செபி உள்ளிட்ட கட்டுப்பாட்டு அமைப்புகளிடமும், இந்த டீலுக்கு தடையில்லா சான்று வழங்கக் கூடாது என, அமேசான் கடிதம் எழுதி எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இந் நிலையில் உயர் நீதிமன்றம், கட்டுப்பாட்டு அமைப்புகள் இந்த டீல் குறித்த முடிவுகளை எடுக்கலாம் என அறிவித்தது.இதையடுத்து, தற்போது பியூச்சர் குழுமத்தின் இந்த விற்பனை ஒப்பந்தத்துக்கு அனுமதி வழங்கி உள்ளது செபி. இதன் காரணமாக, நேற்று, பியூச்சர் நிறுவன பங்குகள் விலை, அதிகபட்ச விலை வரம்பை தொட்டது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|