பதிவு செய்த நாள்
09 பிப்2021
19:05

ஆண்டுக்கு 2.4 பில்லியன் அமெரிக்க டாலர் விற்று முதல் ஈட்டும் சி.கே.பிர்லா குழுமத்தின் ஓர் அங்கமான ஓரியண்ட் எலெக்ட்ரிக் மின்தடை ஏற்படும் காலத்தில் தொடர்ந்து 4 மணி நேரம் பேக்-அப் வெளிச்சம் வழங்கும் வகையில் புத்தம் புதிய எமர்ஜென்ஸி எல்இடி லைட்டிங்க் தீர்வுகளை அறிமுகப்படுத்தி உள்ளது. மின் தடை ஏற்படும் போது இவை தானியாகவே எமர்ஜென்சி மோட்டுக்கு மாற்றிக் கொள்வதால், வழக்கமான பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள உங்கள் இடத்தை வெளிச்சமாக்கும். மின்சாரம் மீண்டும் வந்தவுடன் இயல்பான இயக்கத்துக்கு மாறிக் கொள்வதுடன், விளக்குகளின் உள்ளேயே பொருத்தப்பட்டுள்ள மின்கலன், மின்சாரம் இருக்கும் போது தானியாகவே சார்ஜ் செய்து கொள்ளூம்.
இது குறித்து ஓரியண்ட் எலெக்ட்ரிக் செயல் துணைத் தலைவர் புனீத் தவான் கூறுகையில் ‘நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ள புது ரக எமர்ஜென்சி எல்இடி விளக்குகளில், வீடுகள், சிறு அலுவலகங்கள், சில்லரை விற்பனைக் கடைகள் ஆகியவற்றுக்கான பல்ப், பேட்டென், ரெசெஸ் பேனல், பல்க்ஹெட் ஆகியவை அடங்கும். இந்த எம்ர்ஜென்ஸி எல்இடி விளக்குகள் தற்போது நாம் வீடுகளில் பயன்படுத்தும் எல்இடி விளக்குகளுக்கு இணையானவை என்பதால் அவற்றை அதே சாக்கெட்களில் பொருத்திக் கொள்ளலாம். எனினும், மின் தடை ஏற்பட்டவுடன் உடனடியாக எமர்ஜென்ஸி மோடுக்கு மாறி 4 மணி நேர பேக்-அப் வெளிச்சத்தை வழங்கும். இந்த அறிமுகம் மூலம் இப்பிரிவின் விற்பனையை அதிகரிக்க முனைவதுடன் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு உயர் ரக, பிராண்டெட் எமர்ஜென்ஸி லைட்டிங்க் பொருள்களை வழங்க நல்ல வாய்ப்பாகவும் கருதுகிறோம்’ என்றார்.
இந்த எமர்ஜென்ஸி எல்இடி பல்பை மிதிவண்டியின் முகப்பு விளக்காகவும் பயன்படுத்தலாம். முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாராகும் இந்த எமர்ஜென்ஸ்ரி எல்இடி விளக்குகள் மின் சிக்கனமானவை என்பதுடன் அவற்றுக்கு குறுகியகால பேபேக் காலமும் உண்டு. நம்பகமான மற்றும் அனைவரும் ஏற்ற விலையில் கிடைக்கும் ஓரியண்ட் எமர்ஜென்ஸி எல்இடி விளக்குகள் ஓவர் சார்ஜிங்க் பாதுகாப்பு மற்றும் 25000 மணி நேரத்துக்கான ஆயுள் முழுமைக்கும் இலவச பராமரிப்புச் செலவு உள்ளிட்ட சிறப்பம்சங்களுடன் வருகின்றன. பொருள் விழிப்புணர்வு மற்றும் விற்பனைக்கு உதவும் வகையில் பிரத்யேக குறுஞ்செய்தி சேவையையும் நிறுவனம் தொடங்கி உள்ளது. விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் “56161” என்னும் எண்ணுக்கு “EMLIGHTS” என்று குறுஞ்செய்தி அனுப்பித் தேவையான விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|