பதிவு செய்த நாள்
10 பிப்2021
23:11

மும்பை:நாட்டின் மிகப் பெரிய வங்கியான, எஸ்.பி.ஐ., அதன் வீட்டுக் கடன் வணிகத்தில், நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, 5 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இவ்வங்கியின், ரியல் எஸ்டேட் மற்றும் வீட்டு வசதி பிரிவு, கடந்த, 10 ஆண்டுகளில், ஐந்து மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த 2011ம் ஆண்டில், இவ்வணிகப் பிரிவு, நிர்வகித்து வந்த சொத்து மதிப்பு, 89 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. இதுவே, நடப்பு ஆண்டில், 5 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இது குறித்து, வங்கியின் தலைவர் தினேஷ் காரா கூறியதாவது:இந்த அசாதாரண சாதனை, வங்கியின் மீது வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் தொடர்ச்சியான நம்பிக்கைக்கு ஒரு சான்றாகும்.தற்போதைய சூழலில், தனிப்பட்ட சேவைகளை தொழில்நுட்பத்துடன் இணைப்பது மிகவும் முக்கியமானது என்று நாங்கள் கருதுகிறோம்.வீட்டுக் கடன் வழங்குவதில் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம்.
இதனையடுத்து, 2023 - 24ம் நிதியாண்டில், வீட்டுக் கடன் பிரிவில் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பை, 7 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்க, இலக்கு வைத்துள்ளோம்.நாட்டின் வீட்டுக் கடன் சந்தையில், எஸ்.பி.ஐ., வங்கியின் பங்களிப்பு, 34 சதவீதமாகும்.இவ்வாறு கூறினார்.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|